Join/Follow with Our Social Media Links

Udanpirappe

உடன்பிறப்பே திரை விமர்சனம் - மெகாசீரியலின் குறுந்தொகுப்பு


2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ள படம் “உடன்பிறப்பே”. இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள படம். D.இமான் இசையமைத்துள்ளார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தை தொகுத்துள்ளார்.

“உடன்பிறப்பே” படம் நடிகை ஜோதிகாவின் 50வது படம். சசிகுமார் (வைரவன்), ஜோதிகா (மாதங்கி வைரவன் சகோதரி) சிஜா ரோஸ் (வைரவன் மனைவி), சமுத்திரகனி (மாதங்கி கணவன்) நிவேதிதா சதீஷ் (கீர்த்தனா-மாதங்கி மகள்), சூரி (பக்காடி), கலையரசன் (பள்ளிகொண்டான் மகன்), சித்தார்த் K T (விவேக்-வைரவன் மகன்) வேல ராமமூர்த்தி (வைரவன் ஒன்று விட்ட சகோதரன்), பள்ளிகொண்டான் (ஆடுகளம் நரேன்), R.வேல்ராஜ் (போலிஸ் இண்ஸ்பெக்டர்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“உடன்பிறப்பே” படம் 14.10.2021 முதல் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது/

கதைக்கரு

அண்ணன் தங்கை பாசத்தை வைத்து பாசப்பிணைப்பை ஆழமாக மனதில் பதிய வைக்க ஏராளமான் திரைப்படங்கள் வந்துள்ளது அந்த வரிசையில் இணையும் மற்றொரு படம்.

கதை:

மாதங்கி மற்றும் வைரவன் உடன் பிறந்த சகோதர சகோதரி. மாதங்கியை எதற்கு சட்டப்படி அணுகும் சாதுவான ஆசிரியரை திருமணம் செய்து வைக்கின்றான் வைரவன். ஒரு பிரச்சனை காரணமாக மாதங்கி கணவருக்கும் வைரவனுக்கும் இடையே பேச்சு வார்த்தையில்லாமல் போகின்றது. அதற்கு காரணம் வைரவனின் முரட்டு குணம். நல்லது செய்வதற்காக அடாவடி செய்வது தான்

தன் மகன் மரணத்திற்கு காரணம் வைரவன் அடிதடி குணம் தான் என்று மாதங்கி கணவருக்கு வைரவன் மேல் கோபம். அதனால் மாமன் மச்சன் இடையே பிரிவு ஏற்படுகின்றது. ஆனால் அண்ணன் தங்கை பாசம் குறையாமல் இருக்கின்றது.

அந்த ஊரில் நேர்மையான நல்ல மனிதன் பள்ளிகொண்டன் அவன் மகன் மினரல் வாட்டர் தொழில் செய்பவன், பெண் பித்தன். அந்த ஊரில் 1000 அடி போர் போட்டு தண்ணீரை எடுத்து தொழில் செய்ய நினைக்கின்றான். ஆனால் நிலத்தடி நீர் குறையும் என்ற காரணத்தால் வைரவன் பள்ளிகொண்டான் மகனை மிரட்டுகின்றான் வைரவன்.

ஆனால் மாதங்கியின் கணவரோ இதற்கு நேர்மையாக தீர்வுகான நீதிமன்றத்தை நாடி அந்த போர் போடாமல் தடுக்கின்றார்.

இதற்கிடையே மாதங்கியின் பெண் கீர்த்தனாவிற்கு வைரவன் பையன் விவேக்கிற்கும் நிச்சயம் நடக்கின்றது. விவேக் மாதங்கியின் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் சம்மதிர்ப்பாக மாதங்கியின் கணவர் சொல்கின்றார். அதற்கு வைரவனும் சம்மதிக்க நிச்சயம் நடக்கின்றது.

விவேக்கை பார்க்க செல்லும் கீர்த்தனாவை கத்தியால் மர்ம நபர்கள் குத்திவிட்டு செல்கின்றனர். தன் மகள் மேல் விழுந்த கத்திகுத்துக்கு காரணம் வைரவனின் அடிதடி நடவடிக்கை என்று மாதங்கியின் கணவர் ஆதங்கத்தில் இருக்கின்றார்.

ஆனால் மாதங்கியின் கணவர் கோர்ட்டுக்கு வரமால் இருக்க பள்ளிகொண்டான் மகன் தான் இதை செய்தான் என்று வைரவன் கண்டுபிடிக்கின்றான். அவனை கொல்ல துடிக்கின்றான்.

இதையறிந்த மாதங்கி பள்ளிகொண்டான் மகனை அவன் குணம் தெரியாமல் காப்பாற்ற செல்லும் மாதங்கியிடம் மயக்கமடைய செய்து பலாத்காரம் செய்ய முயல்கின்றான் பெண் பித்தனான் பள்ளிகொண்டான் மகன். ஆனால் மாதங்கி மயக்கமடையாமல் இருக்கின்றாள். அப்போது தான் அவன் பல பெண்களின் வாழ்கையை நாசம் செய்ததை அறிகின்றாள். அதோடு தன் மகள் கத்தியால் குத்தப்பட்டதற்கும் அவன் தான் காரணம் என்று தெரிந்து அவனை கொல்கின்றாள். அப்போது அங்கே வரும் வைரவன் அந்த கொலைப்பழியை ஏற்க்கொள்கின்றான். அப்போது அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து வெளியில் வரும் வைரவனை மாதங்கியின் கணவர் பார்த்து விடுகின்றார்.

இந்த உண்மை தெரியாத பள்ளி கொண்டான் போலிஸ் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என்று புகார் கொடுக்கின்றார். யாருமே சாட்சி சொல்ல வரவில்லை. ஆனால் நேர்மையான மனிதனான மாதங்கியின் கணவன் சாட்சி சொல்ல முன் வருகின்றார்.

ஆனால் புகாரை கொடுத்த பள்ளிகொண்டானே அதை வாபஸ் வாங்கியதை தெரிந்து பள்ளிகொண்டானை பார்க்க செல்கின்றார் மாதங்கியின் கணவன். பள்ளிகொண்டான் நேற்று இரவு மாதங்கி இங்கே வந்ததாகவும் நடந்த அனைத்தை சொன்னார். மாதங்கியே சென்று போலிஸில் சரணடைவதாக சொன்னார். ஆனால் நல்ல நேர்மையான குணம் கொண்ட பள்ளிகொண்டான். தன் குடும்பத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவும். தன் மகனை நல்லவன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அவன் கெட்டவன் என்று தெரியக்கூடாது என்பதற்காகவும் எங்கே உங்கள் மனைவி சரணடைந்தால் தன் பெயர், குடும்ப கௌரவம் கெட்டுவிடும் என்ற காரத்திற்க்காவும் வழக்கை வாபஸ் பெற்றேன் என்று பள்ளிகொண்டான் சொல்கின்றார்.

இதைக்கேட்ட மாதங்கியின் கணவர் மனம் மாறுகின்றார். மாதங்கியை தன் அண்ணன் வைரவனுடன் சேர்ந்து வைத்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

பாராட்டுக்குரியது

இசையமைப்பாளர் டி.இமான் பின்னனி இசையில் படத்திற்கு அழககா உயிர் கொடுத்துள்ளார். பின்னனி இசை அருமை.

மாதங்கி மற்றும் வைரவன் கதாப்பாத்திரங்களில் ஜோதிகாவும் சசிகுமாரும் உணர்ச்சிகளை அழகாக தங்கள் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

மாதங்கியின் கணவராக சமுத்திரகனி புதுமையான கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்,

நெருடலானவை

அரைச்ச மாவையே அரைப்பது தவறில்லை. ஆனால் அதை வித்தியாசயமாக தோசைவார்க்க வேண்டும். மாவு ஒன்று தான் ஆனால் அதை வைத்து பல வகையான தோசைகளை வார்க்க வேண்டும். இயக்குனர் 1980 ஆம் ஆண்டுக்கு பின் திரையுலகை பார்க்கவில்லை. இன்னும் 80 களிலேயே இருக்கின்றார்,

சூரி என்ற கதாப்பத்திரம் காமெடிக்காக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் காமெடிகள் சிரிக்கவைக்கவில்லை. இன்னும் பழங்கால காமெடிகளில் இருந்து இயக்குனர் வெளிவரவில்லையென்று தெரிகின்றது.

உடன்பிறப்பே படம் ஏதோ மெகா சீரியலை பார்த்த உணர்வையே ஏற்படுத்துகின்றது/

எங்காவது ஏதாவது ஒரு புதுமையை இயக்குனர் செய்திருப்பார் என்று பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்கவில்லை.

கலையரசனனின் வில்லத்தனத்தில் போதிய அழுத்தமான காட்சிகள் இல்லாத காரணத்தால் படம் பெரிதாக எடுபடாமல் போகின்றது.

படத்தை எப்படியாவது முடிக்க வேண்டுமென்ற காரணத்தால் இறுதி காட்சியில் விறுவிறுப்பில்லாமல். சப்பென்று முடித்தை உணர முடிகின்றது.

தொகுப்பு

“உடன்பிறப்பே” படம் திரைப்படம் 1980 காலகட்டங்களையே நினைபடுத்துகின்றது. மெகாசீரியலை படமாக  பார்க்க விரும்புபவர்களை இந்த படம் கவரும்.

Movie Gallery

  • review

    Neelima Esai

  • review

    Charmy Kaur

  • review

    Shriya Sharma

  • review

    Sayyeshaa

  • review

    Kalyani Priyadarshan

  • review

    Charmy Kaur

  • review

    Lakshmi Menon

  • review

    Malavika Mohanan

  • review

    Deepika Padukone

  • review

    Sanghavi

  • review

    Dimple Hayathi

  • review

    Anukreethy Vas

  • review

    Raiza Wilson

  • review

    Krithi Shetty

  • review

    Amala Paul

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.