Join/Follow with Our Social Media Links

Doctor

டாக்டர் திரை விமர்சனம் - லாஜிக்கில்லா மேஜிக்


S.K புரெக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கின்றார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் (டாக்டர் வருண்) பிரியங்கா அருள் மோகன் (பத்மினி), இளவரசு (பத்மினி தந்தை), அருண் அலெக்ஸாண்டர் (நவநீத்-பத்மினி சகோதரன்), அர்ச்சனா (நவநீத் மனைவி சுமதி), ஜாரா வினித் (சின்னு-சுமதியின் மகள்), தீபா சங்கர் (ப்ரீதி), யோகிபாபு (பிரதாப்), ரெடின் கிங்க்ஸ்லி (பகத்), வினய் ராய் (டெர்ரி), மிலிந்த் சோமன் (கர்னல்), ரகுராம் (மெல்வின்), ராஜூவ் லக்ஷ்மன் (ஆல்வின்) மற்றும் பலர் நடித்துள்ளர்

கதைக்கரு:

பெண் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலிடமிருந்து அந்த குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பையேற்கும் ஒரு டாக்டரின் கதை. ஏதோ ஆக்ஷ்ன் பட கதைப்போல் இருக்கின்றாதா? அது தான் இல்லை ஒரு ஆக்ஷ்ன் கதையை காமெடியாக கொடுத்தால் எப்படியிருக்கும் அது தான் கதையோட்டம்.

கதை:

டாக்டர் வருண் மிலிட்டெரியில் டாக்டராக இருக்கின்றார். எதற்கும் உணர்ச்சி வசப்படாதவர். வித்யாசமன கண்ணோட்டத்தில் இருப்பவர். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் தான் பத்மினி. ஆனால் உணர்வுப்பூர்வமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்கும் வருணின் குணம் பிடிக்காமல் சரசரி பெண்கள் தன் கணவனிடம் எதிர்ப்பார்க்கும் அன்பு, காதல், அக்கரை என்று எதையும் வெளிப்படுத்த தெரியாமல், வெளிக்காட்ட தெரியாமல் இருக்கும் வருண் குணத்தால் அவனை பிடிக்கவில்லையென்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிடுகின்றாள். பத்மினியின் அண்ணன் நவநீத் அண்ணி சுமதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.அவர்களுக்கு ஒரே மகள் சின்னு. அவர்கள் வீட்டு வேலைக்காரி ப்ரீதி. தந்தை போன்றோரின் முன்னிலையில் வருணை பிடிக்கவில்லை என்று சொல்கின்றாள்.

ஆனால் வருணுக்கு அவளை ரொம்ப பிடித்து போகின்றது. அங்கிருந்த கிளம்ப மனமில்லாமல் அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடிக்கு நிற்கின்றான். அப்போது பத்மினி அண்ணன் குழந்தை சின்னுவை யாரோ கடத்திவிட்டார்கள் என்ற தகவல் வருகின்றது. தன்னை பத்மினி திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றாலும் தன் நிச்சயதார்த்ததின் போது தன் மீது பாசமாக இருந்த சின்னுவை காப்பாற்ற உதவுவதாக சொல்கின்றார் வருண்.

அனைவரும் சென்று காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். அங்கே வேலைசெய்யும் பகத்தை இந்த வழக்கை விசாரிக்க சொல்கின்றார். போலிஸ் இண்ஸ்பெக்டர். பகத் ஒரு காமெடி (ஃப்ரண்ட்ஸ் ஆஃப்) போலிஸ். அவர் இந்த போலிஸால் எத்தனை ஆண்டுகளானாலும் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டுமென்று சொல்கின்றார். போலிஸ் கமிஷனர் பெண்ணை கடத்துகின்றனர். வருண் மற்றும் பத்மினி குடுப்பத்தினர்.

போலிஸ் ஓட்டு மொத்த குழந்தைகள் கடத்தும் கும்பலை கைது செய்கின்றது. பகத்தின் மூலம் கடத்தல்காரன் பிரதாப் உட்பட மூன்று பேர் சின்னு கடத்தப்பட்ட பகுதியில் இருந்ததை கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் கிட்னியை எடுத்துவிட்டதாகவும் அது திரும்ப வேண்டுமென்றால் கடத்தியவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு சொல்கின்றனர் வருண் மற்றும் பத்மினி குடும்பத்தினர். அதில் ஒருவன் தான் கடத்தியாக அறிகின்றனர். பிரதாப் கொடுக்கும் ஆலோசனை அடிப்படையில் கடத்தியவனை கண்டுபிடிக்கின்றனர். அவனையும் கடத்துகின்றனர். ஆனால் அவன் இன்னொருவனிடம் கொடுத்ததாக சொல்கின்றான். அவனையும் கடத்துகின்றான். ஆனால் அவனோ நான் கடத்தப்பட்ட குழந்தையை வாங்குவேன் ஆனால் விலைக்கு வாங்க விரும்புகள் அவர்களே தொடர்பு கொள்வார்கள் நாம் தொடர்பு கொள்ள முடியாது என்று சொல்கின்றான். அவனிடம் வரும் போன் மூலம் குழந்தையை வாங்கும் மெல்வின் மற்றும் ஆல்வின் என்ற இரட்டை சகோதரை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதில் ஒருவனை மட்டும் கடத்தி பணயக்கைதியாக வைத்துகொண்டு குழந்தையை விடுவிக்க சொல்கின்றனர். தன் சகோதரனை காப்பாற்ற குழந்தையை விடுவிக்க ஒத்துக்கொள்கின்றான் மெல்வின். ஒரு கண்டெய்னரில் ஏராளமான குழந்தைகள் இருக்கின்றனர். அதில் யார் சின்னு என்று கேட்கின்றான். அங்கே சின்னு இருக்கின்றாள். ஆனால் வருணோ எனக்கு அனைத்து குழந்தைகளும் வேண்டும் என்று சொல்கின்றான். ஆனால் பத்மினி குடும்பத்தினரோ சின்னு மட்டும் போதும் என்று சொல்கின்றனர். அனைவரையும் விடுக்க வேண்டும் உங்கள் குழந்தை மட்டும் வேண்டுமென்றால் என்னை கொன்றுவிட்டு உங்கள் குழந்தையை கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று பத்மினி குடும்பத்தினரிடம் சொல்கின்றான் வருண். அவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் மெல்வின் ஒரு குழந்தையை மட்டுமே விடுவிக்க என்னால் முடியும். அனைவரையும் விடுவிடுக்க முடியாது. அனைவரையும் கோவாவில் இருக்கும் ஒருவருக்கு விற்றுவிட்டதாக சொல்கின்றான். அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றால் கோவாவிற்கு தான் செல்ல வேண்டும் என்று சொல்கின்றான்.

வருண், பத்மினி, பத்மினி தந்தை, பத்மினி சகோதரர் நவநீத், பத்மினி அண்ணி சுமதி, ப்ரீதி, பகத் மற்றும் பிரதாப் உடன் அவர்களை மீட்க செல்கின்றான். அவர்களுக்கு உதவியாக லோக்கல் கடத்தலில் மிகப்பெரிய அளவில் இருக்கும் இரண்டு தாதாக்களையும் அழைத்துக்கொண்டு கோவாவிற்கு செல்கின்றனர்..

டெர்ரி கோவாவில் ரெசார்ட் வைத்து நடத்திக்கொண்டிருப்பவன். ஆனால் குழந்தைகள் கடத்தல் தலைவனே அவன் தான். அந்த ரெசார்ட்டில் பத்மினி, பத்மினி தந்தை, பத்மினி சகோதரன் நவநீத், அண்ணி சுமதி மற்றும் ப்ரீதா அனைவரும் தங்கியிருக்கின்றனர். அப்போது வருணுடன் வந்த லோக்கல் தாதா இருவரின் மூலம் பத்மினியை கடத்துவாக நாடகம் நடத்துகின்றனர். பத்மினி குடும்பத்தினர் போலிஸிற்கு சென்று தன் மகள் காணவில்லை என்று புகார் கொடுக்கப்போதவாக சொல்கின்றனர். ஆனால் டெர்ரி அவர்கள் மகளை தான் கண்டுபிடித்து 24 மணி நேரத்தில் கொடுப்பதாக சொல்கின்றான். காரணம் அவன் போலிஸ் அந்த ரெசார்ட்டிற்கு வரக்கூடாது என்பதற்காக.

டெர்ரி அவன் அடியாட்கள் மூலம் கடத்திய தாதாக்களை கண்டு பிடிக்கின்றான். அவர்கள் அந்த பெண்ணை வருணிடம் ஒப்படைத்தாக சொல்கின்றனர். வருனோ அங்கே ஒரு ஐஸ்கீரிம் கடைக்காரக நடிக்கின்றார். தான் அந்த பெண்னை விடுவிக்க வேண்டுமென்றால் தனக்கு வேறு பெண்கள் வேண்டுமென்று சொல்கின்றான். தான் மிகப்பெரிய பெண்கள் கடத்தல்காரன் என்று டெர்ரியை நம்பவைக்கின்றான். தானும் மிகப்பெரிய கடத்தல்காரன் என்று நம்பவைக்க தன் இருப்பிடத்திற்கு வருணை அழைத்து போகின்றான். வருணின் நண்பர் கர்ணல் மூலம் பின் தொடர்ந்து மிகப்பெரிய ஆபரேஷனை பிளான் செய்கின்றான். டெர்ரி இடத்தில் ஏராளமான பெண் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்போது பேச்சு வாக்கில் ஒரு வேலை இங்கே யாரவது வந்து தாக்குதல் செய்து குழந்தைகளை காப்பாற்றிவிட்டால் என்ன செய்வாய் என்று வருண் டெர்ரியிடம் கேட்கின்றான். அந்த தாக்குதல் நடக்கும் முன் குழந்தை இங்கே இருந்த தடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்று சொல்கின்றான். அதனால் தாக்குதல் திட்டத்தை ரத்து செய்கின்றனர்.

டெர்ரியிடம் இந்த குழந்தைகள் வளர்ந்து பின் தான் நீ விற்க போகின்றாய் ஆனால் என்னிடம் ஏராளமான பெண்கள் இருக்கின்றனர். அவர்களை விற்று எளிதில் பணம் பெற முடியும் என்று ஆசை காட்டுகின்றான். டெர்ரியும் வருணும் வியாபார ரீதியில் ஒப்பந்தம் போடுகின்றான். 30 பெண்களை கொடுக்க வேண்டும் என்று வருண் சொல்கின்றான். பெண்களை கடத்தும் கும்பல் தலைவன்களை வைத்து ஒரு மீட்டிங்க் போடுகின்றான். அந்த மீட்டிங்கிற்கு தமிழகத்தில் கடத்தல் தொழில் செய்யும் மெல்வின் கலந்து கொள்கின்றான். மெல்வின் டெர்ரியிடம் தனியாக பேசவேண்டுமென்று சொல்கின்றான். அப்போது வருண் தூண்டுதல் பேரில் தன் தம்பி ஆல்வினுக்காக டெர்ரியை கொல்ல முயலும் போது டெர்ரியால் கொல்லப்படுகின்றான் மெல்வின். மெல்வினால் கடத்தப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது சின்னுவின் குடும்பத்தினரை பற்றி தெரிந்து கொள்கின்றான். ரிசார்ட்டில் இருப்பவர் அவர்கள் தான் என்று கண்டு பிடித்து பின்னனியை ஆராய்ந்து பார்க்கையில் வருண் மாட்டிக்கொள்கின்றான்.

டெர்ரி வருண் மற்றும் பத்மினி குடும்பத்தினர், ப்ரிதா, பிரதாப் மற்றும் பகத் என அனைவரும் மாட்டிகொள்கின்றனர். அவர்களை கொல்ல முயலும் போது அங்கே ஆல்வின் டெர்ரியின் தந்தையை கடத்தி கொண்டு வருகின்றான். அவரை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு குழந்தைகளையும் வருண், பத்மினி சாகக்களை விடுவிக்கின்றான். அவர்கள் அனைவரும் தப்பி செல்கின்றனர். ஆல்வின் தன் அண்ணனை கொன்றதற்காக டெர்ரியின் தந்தையை கொல்கின்றான். ஆனால் டெர்ரி மற்றும் அவன் அடியாட்காள் மூலம் ஆல்வினை கொல்கின்றான்.

மீட்டு கொண்டு சென்ற குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் இல்லையென்று தெரிந்து அந்த குழந்தை மீட்டு வர மீண்டும் டெர்ரியின் இருப்பிடம் செல்கின்றான். அங்கே வருணை கட்டி வைக்கின்றான். அவன் கண் முன்னே அந்த குழந்தையை கொல்லப்போவதாக சொல்லி அடியாட்கள் மூலம் கொல்ல முயலும் போது அந்த அடியாளை சுட்டு கொல்கின்றான். அவனை கொன்றுவிட்டு தான் அந்த குழந்தையை கொல்ல முடியும் என்று சொல்கின்றான். ஆனால் வருண் கண்முன்னே அந்த குழந்தை கொல்லப்போவதாக மீண்டும் மீண்டும் முயல்கின்றான் டெர்ரி. அந்த குழந்தையை கொல்ல செல்லும் அனைவரையும் அவன் கொல்கின்றான்.

எதிர்பாரதவிதமாக அங்கே வரும் கர்ணல் மற்றும் பகத் மூலம் டெர்ரி கொல்லப்படுகின்றான். அந்த குழந்தையும் காப்பாற்றுகின்றான்.

வருணின் முயற்சிகளால் ஈர்க்கப்பட்ட பத்மினிக்கும் வருணுக்கும் திருமணம் நடந்து சுபம் போடுகின்றனர்.

பாராட்டுக்குறியவை:

ஒரு சீரியசான கதைகளத்தை காமெடி களத்தில் அதகளப்படுத்தி இருக்கின்றார் நெல்சன் தீலிப்குமார்.

மொக்கை காமெடிகளை வரிசை கட்டி அதன் மூலம் திரைகதை நகர்த்தி ஒரு புதுவித அடிப்படையில் உருவாகியுள்ளது இந்த படம்.

ஒரு மொக்கை காமெடியின் மொக்கை தன்மையை உணரும் முன் அடுத்தடுத்து துப்பாக்கி தோட்டா போல் படையெடுத்து மொக்கை காமெடிகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கின்றது. அதுவே காமெடி அடிப்படையில் புதிய பரிணாமமாக இருக்கின்றது.

சிவகார்த்திகேயன் என்றாலே அதிகமாக வசனங்கள் என்ற அடிப்படையை மாற்றி படம் முழுவது அமைதியாகவே இருக்கும் கதாப்பாத்திரம் என்பது சிவகார்த்தியேனை பொருத்தவரை புதுமையான ஒன்று.

பிரியங்கா அருள் மோகன் பத்மினி கதாப்பாத்திரத்தில் சராசரி பெண்னாக கணவனிடம் எதிர்பார்க்கும் எந்த விஷயத்திற்கு பொருத்தமான வருணுடன் (சிவகார்த்திகேயன்) நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவதாகட்டும், பல இடங்களில் அப்பாவித்தனமாக முகத்தை வைத்து காமெடி கணைகளை வீசுவதாக இருக்கட்டும். அண்ணன் குழந்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளாகட்டும் ஒரு வித்தியாசமான கதாநாயகி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பகத் (ரெடின் கிங்க்ஸ்லி), பிரதாப் (யோகிபாபு), லோக்கல் தாதாக்கள் என்று படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்து மொக்கை காமெடி சரவெடிக்கு உறுதுணையாக திரைக்கதை வித்தியாசமாக நகர்த்த உதவுகின்றனர்.

நெருடலானவை:

மொக்கை காமெடி சரவெடிகளை வைத்து திரைக்கதையை அமைத்தால் போதும் லாஜிக் எதுவும் தேவையில்லை என்று இருந்திருப்பது ஒரு வகையில் படத்தில் ஏதோ பெரிய விஷயத்தை தொலைத்தது போல் இருக்கின்றது. எங்கேயாவது ஒன்றிரண்டு இடங்களில் லாஜிக் மீறால் இருந்த அது பெரிதாக விமர்சனமாகாது. ஆனால் படமுழுவதும் இருப்பது கண்டிப்பாக படமாக முழுமை பெறமுடியாது.

நெல்சன் தீலிப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை மீண்டும் பார்ப்பதை போல் திரைக்கதை அதே அடிப்படையில் இருக்கின்றது.

படத்தில் முதல் பாதியில் இடம்பெற்ற காமெடி சரவெடி வேகம் இரண்டாவது பாதியில் (கோவாவிற்கு கதை நகர்ந்த பின்) சற்று குறைந்தது போல் இருக்கின்றது.

தொகுப்பு:

லாஜிக்கில்லா மேஜிக் தான் திரைப்படம். ஆனால் அந்த மேஜிக்கை அனைவரும் ரசிக்கும் படி கொடுப்பது தான் சிறந்த ஒன்றாகும். அன்டஹ் அடிப்படையில் “டாக்டர் திரைப்படம் தன் காமெடி சரவெடி மூலம் மேஜிக்கை நிகழ்த்தி அனைவரும் ரசிக்க வைத்துள்ளது.

Movie Gallery

  • review

    Charmy Kaur

  • review

    Raiza Wilson

  • review

    Nandita Swetha

  • review

    Vimala Raman

  • review

    Dimple Hayathi

  • review

    Ineya

  • review

    Raashi Khanna

  • review

    Meera Jasmine

  • review

    Gayathri

  • review

    Pooja Kumar

  • review

    Shritha Sivadas

  • review

    Ragini Dwivedi

  • review

    Pavithra Lakshmi

  • review

    Athulya Ravi

  • review

    Devadarshni

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.