Join/Follow with Our Social Media Links

Aranmanai-3

மிரட்ட மறுக்கும் பேய்கள் அரண்மனை 3 திரை விமர்சனம்


அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து  அரண்மனை 3   உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார்.

அரண்மனை3 படத்தில் ஆர்யா (சரவணன்), சுந்தர் C (ரவி), ராஷி கண்ணா (ஜோதி-ராஜசேகர் மகள்), சம்பத் ராஜ் (ஜமீன்தார் ராஜசேகர்), ஆண்டீரியா ஜெர்மியா (ஈஸ்வரி-ராஜசேகர் மனைவி), அமித் பார்கவ் (ஈஸ்வரியின் காதலன்-சாமியாடி மகன்), சாக்ஷி அகர்வால் (ஹேமா-ரவி Ex-மனைவி-விவாகரத்தானவர்), ஓவி பண்டர்கர் (ஷாலு-ரவி மற்றும் ஹேமா மகள்), விவேக் (சிகாமனி), மைனா நந்தினி (மைனாவதி-சிகாமனி மனைவி), யோகிபாபு (அபிஷ்சேக்-திருடன்), மனோபாலா (பென்சில்-அபிஷேக் துணை திருடன்) நளினி (டிக்டாக் சரளா-ராஜசேகர் சகோதரி-ஹேமாவின் தாய்), செல்முருகன் (மாணிக்கம்), விச்சு விஸ்வநாதன் (காளி-அடியாள்), வின்செண்ட் அசோகன் (துரை-ராஜசேகர்-டிரைவர்), குளப்புள்ளி லீலா (சமையல்காரி வள்ளியம்மா), வேல ராமமூர்த்தி (சாமியாடி), மதுசூதன ராவ் (நம்பூதிரி) மற்றும் பலர் நடித்துள்ளனர்

கதைக்கரு:

தன்னையும், தன் குழந்தையையும், தன் காதலனையும் கொன்ற கணவன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை பழி தீர்க்கும் ஆவியின் கதை/

கதை:

ஜமின்தார் ராஜசேகர் மகள் ஜோதி, பேயை பார்த்து பயப்படுகின்றாள். இதைப்பார்த்த ராஜசேகர் தன் மகளை ஹாஸ்டலுக்கு அணுப்பி படிக்க வைக்கின்றான்.

ராஜசேகர், தன் சகோதரி சரளா, விவாகரத்து பெற்ற சரளாவின் மகள் ஹேமா, ஹேமாவின் குழந்தை ஷாலி, உறவினரான சிகாமனி, சிகாமனி மனைவி மைனாவதியுடன் அரண்மனையில் வசிக்கின்றார்.

ஒரு நகைக்கடையிலிருந்து வெளிவருபவரிசம் 10 கிலோ எடையுள்ள தங்கப்பையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடும் திருடன் அபிஷேக் மற்றும் அவரது உதவியாளன் பெண்சிலும் அந்த தங்கத்தை திருடி அரண்மனையில் மறைந்து வைக்கின்றான்.

.

ராஜசேகர் உறவினரான சிகாமனி மிகப்பெரிய அளவு கடன் வாங்கி தேர்தலில் நின்று தோற்று போனவர். மைனாவதியுடன் திருமணமாகி முதலிரே நடக்காமல் 15 ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாகவே இருக்கின்றார் சிகாமனி. இந்த அரண்மனையை விற்றால் கமிஷன் வாங்கி அதைவைத்து தேர்தலுக்கா சேட்டிடம் வாங்கிய கடனை திருபிக்கொடுக்கலாம் என்று ஆலோசனை சொல்கின்றான் சிகாமனி நண்பன் மாணிக்கம். ஆனால் அரண்மணையை விற்க வேண்டுமென்றால் வீட்டில் பேய் இருக்கின்றது என்று பயமுறுத்தினால் அரண்மனையை எளிதில் விற்கலாம் என்று ஆலோசனை சொல்கின்றான்.

ஷாலு ஹேமா மற்றும் விவாகரத்து பெற்ற கணவன் ரவியின் மகள். அவள் ஜோதியென்ற ஆவியுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அந்த ஆவி ஷாலுவை பயமுறுத்திக்கொண்டே இருக்கின்றது.

22 ஆண்டுகள் ஜமின்தாரால் பூட்டி வைக்கப்பட்ட கோவில் நிலவரையை மக்கள் வழக்கு போட்டு திறக்கின்றனர். ஆனால் மாவட்ட கலெக்டர் அந்த நிலவரையை திறந்த போது அங்கே ஒன்றுமில்லா சதா நிலவரையாகத்தான் இருந்தது. அப்படியானல் அந்த நிலவரையை ஜமின்தார் ஏன் பூட்டினார் என்ற சந்தேகம் வரும்

கோயில் நிலவரைய திறந்த அன்றே ராஜசேகர் டிரைவர் துரை கரண்ட் ஷாக் அடித்து இறந்து போகின்றான்.

அந்த சவத்தை பார்க்க ஜோதி ஹாஸ்டலில் இருந்து திரும்பி வருகின்றாள். ஆனால் ஏன் நீ வந்தாய் என்று ராஜசேகர் ஜோதியை பார்த்து கோபப்படுகின்றார்.

மின்சாரம் ஒயர்கள் சரியில்லாத காரணத்துக்காக. அதை சரி செய்ய ஜமின்தார் ராஜசேகர் மகளின் சிறுவயது காதலன் சரணவன் வருகின்றான். எப்படியாவது ஜோதியை பார்த்து தன் காதலை சொல்லவேண்டுமென்று நினைக்கின்றான்.

ஒரு நாள் மறைந்த தன் தாயின் அறைக்கு தாயின் பாடல் சத்தம் கேட்டு ஜோதி செல்கின்றாள். அங்கே ஆவி அவளை கொல்ல முயல்கின்றது அதிஷ்டவசமாக தப்பிக்கின்றாள். அப்போது அங்கே வரும் ராஜசேகர் அங்கிருக்கும் டேப் ரிக்கார்டை உடைக்கின்றார்.

உடைந்த டேப் ரிக்கார்டை சரி செய்து கொடுக்குமாறு சரவணனிடம் கேட்கின்றார். அவனும் சரி செய்து தருவதாக சொல்கின்றான். இருவருக்குள்ளும் காதல் இருப்பதை உணர முடிகின்றது.

தன் சொத்தையெல்லாம் விற்று தன் மகள் ஷாலுவுக்கு கொடுத்துவிட்டு லண்டனில் செட்டிலாகவிருக்கும் ரவி தன் முன்னாள் மனைவி ஹேமாவையும் ஷாலுவையும் பார்க்க வருகின்றான். அப்போது ஷாலி அங்கே பேய் இருந்து தன்னை பயமுறுத்துவதாக் ரவியிடம் சொல்கின்றார். அங்கு நடக்கும் சில நிகழ்வுகள் அங்கே பேய் இருப்பதை உணர்கின்றான்.

ராஜசேகரின் மனைவி ஈஸ்வரியின் மூடிவைக்கப்பட்ட அறைக்குள் செல்கின்றான். அங்கே இருக்கும் ஒரு போட்டோவில் ராஜசேகர், ஈஸ்வரி அமர்திருக்க வேலைக்காரி வள்ளியம்மா, டிரைவர் துரை மற்றும் பாதுகாவலன் காளி அனைவரும் இருக்கின்றனர். அதில் வள்ளியம்மா மற்றும் துரையின் முகம் அழிக்கப்பட்டு இருக்கின்றது. அது மட்டுமின்றி அங்கே ஈஸ்வரியின் ஆவியையும் பார்க்கின்றான்.

உடனே காளியை தேடி ரவி போகின்றான். ஆனால் காளியும் ஆவியால் கொல்லப்பட்டிருக்கின்றான். சில மாந்தீரிகர்களை வீட்டிற்கு அழைத்து ஆவியை அடக்க முயல்கின்றான். அப்போது மாந்தீரிகர்கள் அந்த வீட்டில் இரண்டு ஆவி இருப்பதாக சொல்கின்றனர். அதில் ஒன்று சரவணன் உடம்பில் இருப்பதாக ரவி மற்றும் ஜோதி இருவரும்.அறிந்து கொள்கின்றனர்.

ரவி ராஜசேகரை எங்கே என்று கேட்கின்றான. ராஜசேகர் இப்போது தான் சரவணனுடன் காரில் கிளம்பி சென்றதாக சொல்கின்றனர்.

ஒரு காட்டுப்பகுதிக்கு செல்கின்றான் ராஜசேகர் அங்கே சரவணனை காரிலேயே இருக்க வைத்துவிட்டு சாமியாடியை பார்க்க செல்கின்றான். ஆனால் சமியாடியோ ஆவிக்கு பயந்து தான் காட்டில் இருக்கின்றேன் நீ எப்படி வந்தாய்? யாருடன் வந்தாய் என்று கேட்கின்றான். டிரைவர் சரவணனுடன் வந்தேன் என்று ராஜசேகர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கே சரவணன் வருகின்றான். சரவணன் தான் ஆவி என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்ப முயன்ற ராஜசேகரும் சாமியாடியும் ஒரு குழியில் விழுந்து விடுகின்றனர். சாமியாடி கையால் தூக்கிவிட்டு ராஜசேகரை காப்பாற்றுகின்றான், ராஜசேகர் சாமியாடியை காப்பாற்ற முயலும் போது சரவணன் (ஆவி) அங்கே வருகின்றான், சாமியாடியை காப்பற்றுவதை விட்டுவிட்டு ராஜசேகர் மட்டும் தப்பி ஓடுகின்றான். ராஜசேகரை தேடி வந்த ரவி அவரை காப்பாற்றி வள்ளிமலையில் உள்ள நம்பூதிரியிடம் கூட்டிச்செல்கின்றான்.

ராஜசேகர் உண்மையை சொன்னால் அவரை காப்பாற்றுவதாக சொல்கின்றார். அதே வேலையில் சாமியாடியை தூக்கி சென்ற சரவணன் (ஆவி) நான் உங்களை கொல்ல வரவில்லை உங்களிடம் ஒரு உதவி கேட்கவே வந்துள்ளேன் என்று சொல்கின்றது சரவணன் உருவத்திலிருந்து உண்மை உருவத்தில் வெளிவந்த ஈஸ்வரி ஆவி.

சாமியாடியின் மகன் ஈஸ்வரியை காதலிக்கின்றான். இருவரும் அனைவரின் சம்மத்துடன் திமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். ஜமீன்தார் முன்னிலையில் திருமணம் செய்ய சாமியாடி ராஜசேகரை அழைக்கின்றான். ஆனால் ராஜசேகர் தாலியெடுத்து கொடுப்பதற்கு பதில் ஈஸ்வரி அழகில் மயங்கி எதிர்பாரத விதமாக ராஜசேகரே தாலி கட்டுகின்றான். ஈஸ்வரி அரண்மனையிலிருந்து காதலனுடன் தப்பிக்க முயற்சிக்கும் போது ராஜசேகரிடம் அவன் தன்னை கடத்தி போக வந்திருப்பதாக பொய் சொல்கின்றாள். அவனை அடித்து அரண்மனையிலிருந்து துரத்துகின்றனர். ஈஸ்வரி பொய்சொல்ல காரணம் அவள் வயிற்றில் வளரும் கருவே. கருவிலிருக்கும் குழந்தை மீது மிகுந்த பாசம் வைக்கின்றாள் ஈஸ்வரி. ராஜசேகரும் வலைகாப்பை சிறப்பாக நடத்தி ஊர் மெச்ச கொண்டாடுகின்றன். ஆனால் குழந்தையின் உடலில் இருக்கும் மச்சத்தை வைத்து அந்த குழந்தைக்கு தகப்பன் சாமியாடியின் மகன் என்று தெரிந்து வேலைக்காரி வள்ளி மூலம் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கின்றான். அதை தடுக்க முயற்சித்த ஈஸ்வரியிடம் ஒரு சாமியாடி மகனின் ரத்தம் ஜமீனுக்கு வாரிசா? என்று கேட்கின்றான். ஈஸ்வரி எங்கள் திருமணம் முடிவானதுமே நாங்கள் ஒன்று சேர்ந்துவிட்டோம். இடையில் தாலிகட்டியது நீங்கள் இதில் என் தவறோ குழந்தையின் தவறோ ஏதுமில்லை என்று சொல்கின்றாள். ஆனால் எதையும் கேட்காமல் குழந்தையையும் ஈஸ்வரியை வள்ளியம்மாள், துரை மற்றும் காளி உதவியுடன் கொல்கின்றான். இதை மறைக்க அப்பொழுதான் பிறந்த டிரைவர் துரையின் குழந்தையை தன் குழந்தையாக (ஜோதி) வளர்க்கின்றான்.

ஈஸ்வரியின் மரணத்தை கேள்விபட்ட சாமியாடி மகன் ஈஸ்வரி பிணத்தை தோண்டியெடுத்து தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட அரைகுறை மத்திரத்தின் மூலம் உயிர் கொடுக்க முயல்கின்றான். ஆனால் அந்த அரைகுறை மந்திரம் காரணமாக பிரேதாத்மாவாக் மாறுகின்றது. அதன் முகத்தை பார்த்து பயந்து ஓடுகின்றான். ஆவியாக இருக்கும் ஈஸ்வரி தன் குழந்தைக்கு விஷம் கொடுத்த வேலைக்காரி வெள்ளையம்மாவை கொள்கின்றாள். ராஜசேகர் வீட்டிற்கும் அவள் செல்கின்றாள். இதை பார்த்து பயந்து போன ராஜசேகர் சாமியாடி உதவியை நாடுகின்றான். சாமியாடி தன் மகனிடம் அரைகுறை பிரேதாத்மாவுடன் நீ குடும்பம் நடத்த முடியாது. அவளை முழுமைபடுத்த வேண்டும். நீ அழைத்தால் மட்டுமே அவள் வருவாள் என்று அவனை கூட்டிக்கொண்டு காட்டு செல்கின்றான். சாமியாடி மகன் குரல் கேட்டு வரும் ஈஸ்வரியை அங்கே மறைந்திருந்த ராஜசேகர் அடியாட்கள் சாமியாடி கொடுத்த அம்மன் புடவையால் கட்டுகின்றனர். இதை தடுக்க முயன்ற சாமியாடி மகனை சாமியாடி தள்ளி விடுகின்றார்.

துணியால் சுற்றப்பட்ட ஈஸ்வரி ஆவியை தூக்கிகொண்டு கோயில் நிலவரைக்குள் அடைக்கின்றனர். பிரேத ஆத்மாவை அழிப்பது கடிணம் அதன் இங்கே அவளை வைத்துவிட்டால் வெளியில் வரமுடியாது என்று சொல்கின்றனர். அப்போது அங்கே வரும் ராஜசேகர் அடியாள் துரை சாமியாடி தள்ளிவிட்டதில் மரவேர் குத்தி சாமியாடி மகன் இறந்து விட்டதாக சொல்கின்றான். தன் மகன் இறந்ததை நினைத்து கதறி அழுகின்றான் சாமியாடி.

சாமியாடியிடம் உதவி கேட்ட ஈஸ்வரி உங்கள் மகன் உங்களால் சாகவில்லை. ராஜசேகர் தான் தன் டிரைவர் துரை மூலம் கொன்றான் என்று சொல்கின்றாள். ராஜசேகரின் துரோகத்தை நினைத்து சாமியாடி அவனை கொல்ல வேண்டும் என்று சொல்கின்றான்.

அரண்மனையிலிருக்கும் என் மகளின் ஆவியை ஜோதியுடன் இணைக்க வேண்டும். அதோடு ராஜசேகரை பழி வாங்க உங்கள் மகனை உயிரெழுப்ப வேண்டுமென்று சொல்கின்றாள்.

வள்ளிமலையில் நம்பூதிரி எப்படியாவது வீட்டில் இருக்கும் ஆவியை பிடித்து இங்கே கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டுவந்தால் ஈஸ்வரியின் ஆவியும் இங்கு வந்துவிடும். இங்கே சூரிய ஆஸ்தமனத்திற்குள் ம்ஹா தீபம் ஏற்றப்பட வேண்டும் அந்த தீபத்தில் தீய சக்திகள் அழிந்துவிடுமென்று சொக்கின்றார்.

ரவி வீட்டிலுள்ள அனைவரின் உதவியுடன் ஆவியை பிடித்து ஜோதியுடன் வள்ளிமலைக்கு செல்கின்றான். அங்கிருக்கும் மந்திர நீரில் ஆவியை கரைக்க முயலும் போது வள்ளி மலைக்கு சரவணன் (ஈஸ்வரி ஆவி) வருகின்றான். நம்பூதிரி அங்கே இருக்கும் ராஜசேகரை தான் பார்த்து நீதி கேட்க வேண்டுமென்று ஈஸ்வரி கேட்கின்றாள். ஈஸ்வரி ஆவி கட்டுண்டாதல் தைரியமாக அங்கே வருகின்றார் ராஜசேகர் ஆனால் சாமியாடி மகனின் ஆவி அங்கே வந்து ஈஸ்வரியுடன் இணைந்து ராஜசேகரை கொல்கின்றது. ஈஸ்வரின் மகள் ஆவியை ஜோதிக்குள் செலுத்த முயலும் போது பல தடைகளை தாண்டி ரவி மஹா தீபத்தை ஏற்றுகின்றான். தெர்வீக சக்தி அந்த இடம் முழுதும் நிறைந்து ஈஸ்வரி, சாமியாடி மகன் மற்றும் ஈஸ்வரி மகள் என மூன்று ஆவிகளையும் அழிக்கின்றது. சரவணன் தெளிவாகின்றான்.

சரவணன் ஜோதியை திருமணம் செய்துகொள்கின்றான். அதே போல் விவாகரத்து பெற்ற ரவி மற்றும் ஹேமாவும் மீண்டும் இணைகின்றனர் மகள் ஷாலுவுடன் சந்தோஷமாக இருக்கின்றான்.

கொள்ளையடித்தது தங்கம் அல்ல இட்லி மாவு என்று தெரிந்த அபிஷேக் அரமணையிலிருந்து நகைகளை கொள்ளையடித்து தன் உதவியாளன் பென்சிலிடம் கொடுக்கின்றான். அவனோ அந்த பை கணமாக இருக்கின்றது  என்று கோதுமை மாவு நிறைந்த பையை எடுத்துக்கொண்டு வந்து அபிஷேக்கிடம் கொடுக்கின்றான்.

பாராட்டுக்குறியவை:

முந்தைய படங்களை விட இந்த படத்தை மேலும் பிரமாண்டமாக படைத்துள்ளனர்

ஷாலுவாக நடித்திருக்கும் ஓவி பண்டர்கர் அருமையாக நடித்துள்ளார்

ஆவியாகவும், ஈஸ்வரியாகவும், ஒரு கர்பினி பெண்ணாகவும் அருமையாக நடித்துள்ளார் ஆண்டீரியா ஜெர்மியா

சிகாமனி கதாப்பாத்திரத்தில் விவேக் மனதில் நிற்கின்றார்.

சரளாவாக நடித்திருக்கும் நளினி சிரிக்கவைக்கின்றார்.

இறுதி காட்சியில் கிராபிக்ஸ் அருமையாக உள்ளது.

சாமியாடியாக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தி  நன்றாக நடித்துள்ளார்.

C.சத்யாவின் இசையில் செங்காந்தலே பாடலும் லொஜக்கு மொஜக்கு பாடலும் அருமை.

நெருடலானவை:

முந்தைய அரண்மனை படங்களை ஒப்பிடும் போது திகில் என்பது மிகமிக குறைவு. அரண்மனை3 பயமுறுத்த  தவறியுள்ளது,

கைகுழந்தையையாய் பிறந்து கொலை செய்யப்பட்ட குழந்தை வளர்ந்த ஆவியாக மாறுகின்றது. ஒரு வேலை ஆவிகளும் ஆண்டுக்காண்டு  பிறந்த நாள் கொண்டாடுமோ என்னவோ…

சரவணன் கதாப்பாத்தில் நடித்த ஆர்யாவிற்கு காட்சிகள் மிகமிக குறைவு, அதே அடிப்படையில் தான் ஜோதி கதாப்பாத்திரத்தில் வரும் ராஷி கண்ணா கதாப்பாத்திரமும்.

அழுத்தமில்லாத கதாப்பாத்திரங்கள், அழுத்தமில்லாத திரைக்கதை ஏதோ தொடர்பே இல்லாமல் அழுத்தமே இல்லாமல் காட்சிகள் தள்ளாட்டத்தில் பயனிக்கின்றது.

முந்தைய படங்களின் காமெடிகளை ஒப்பிடும் போது இந்த படத்தில் காமெடி பெரிதாக எடுபடவில்லை,

முந்தைய படங்களின் இறுதி காட்சிகளில் இருந்த விறுவிறு இந்த படத்தில் இல்லை.

தொகுப்பு:

பிரமாண்டத்தால் மயக்கும் அரண்மனை3 ஒப்பீட்டளவில் முந்தைய பாகத்தில் இருந்த அழுத்தமான திரைக்கதையோட்டமோ, மிரட்டலோ இதில் இல்லை.

Movie Gallery

 • review

  Mehreen Pirzada

 • review

  Shraddha Srinath

 • review

  Saiyami Kher

 • review

  Charmy Kaur

 • review

  Keerthy Suresh

 • review

  Sanjitha Shetty

 • review

  Jyothika

 • review

  Priyamani

 • review

  Yashika Aannand

 • review

  Aparna Balamuralli

 • review

  Ammu Abhirami

 • review

  Losliya

 • review

  Poonam Bajwa

 • review

  Tanya Hope

 • review

  Esther Anil