டீரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்தி, ராஷ்மிக மந்தனா (தமிழில் அறிமுகம்), லால், யோகி பாபு, நவாப் ஷா., நெப்போலியன், பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகியிருக்கும் சினிமா சுல்தான்.
கதை:
தமிழில் அதிகம் வெளிவந்த விவசாயம் vs கார்பரேட் என்ற அடிப்படைகதை மற்றுமொரு மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயன்று இருக்கின்றார் இயக்குனர். ஒட்டு மொத்த ரவுடிகளை ஒழித்து ரவுடிகள் இல்லாத பகுதியை உருவாக்க ஒரு காவல்துறை அதிகாரி நினைக்கின்றார். தாதா சேதுபதியின் மகன் விக்ரம் என்னும் சுல்தான் பிறக்கும் போதே தாயை இழந்த நாயகனை அவரது அடியாட்கள் தான் வளர்க்கின்றனர். அவர்கள் அனைவரை தன் உடன் பிறந்தவராக நினைக்கும் நாயகன் அவர்களை போலிஸில் இருந்து காப்பாற்ற நினைக்கின்றார். ஆறு மாதங்கள் அவர்கள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்வதாக போலிஸ் அதிகாரியிடம் வாக்கு கொடுக்கின்றார். அதே வேலை நாயகன் தந்தை இறப்பதற்கு முன் விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தை கார்பரேட்டிடம் இருந்து காப்பாற்றி அவர்களுக்கு கொடுப்பதாக வாக்கு கொடுக்கின்றார். தந்தையின் வாக்கையும் தான் சகோதரர்களாக நினைக்கும் அடியாட்களின் உயிரையும் எப்படி காப்பாற்றுகின்றார் என்பதே கதை.
சுல்தான்(Sulthan) கதையின் நாயகன் மட்டுமல்ல தலைவன். கார்தி. நாயகனை மையப்படுத்தி எடுக்கும் கதையில் நாயகன் மட்டுமே பிராதனம் என்ற இலக்கனத்திற்கேற்ப அவரை சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டு இருக்கின்றது. அவரை சுற்றி எப்போதும் அடியாட்கள் இருப்பது போல் பல ஃப்ரேம் கண்களையும் நிறைக்கின்றனது. ஆக்ஷ்சன் நாயகனாக அவர்பங்களிப்பு சிறப்பாக உள்ளது. கிராமத்தில் உள்ள விவசாயி மகளாக நாயகி ருத்ரா (ராஷ்மிகா மந்தனா) அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். யோகிபாபு அடியாட்களில் ஒருவராக வருகின்றார், சதீஷ் நண்பராக வந்து போகின்றார் ஆனால் நகைச்சுவை என்று எதுவும் மனதில் நிற்கவில்லை. லால் படம் முழுவதும் வந்து செல்கின்றார். வழக்கமான Guardian வேலை கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார். சுல்தான் தந்தையாக வரும் நெப்போலியன் சில காட்சிகள் மட்டும் வந்து செல்கின்றார். வில்லனாக வரும் நவாப் ஷா பெரிய அளவு மிரட்டவில்லை ஆனால் தான் அடுத்த தாதாவாக (தலைவனாக) நினைக்கும் அர்ஜெய் நடிப்பில் வில்லன் விட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றார்.
பாராட்டுகுறியவை
ஒரு ரவுடிகள் கும்பலை முதன்மையாக வைத்து வித்தியாசமான கதையமைப்பை உருவாக்கியுள்ள இயக்குனரின் எண்ணம் அதிகம் வெளிவந்த வேளாண்மை vs கார்பரேட் என்ற கதையை வேறுபடுத்தி காட்டியுள்ளது. படம்
ரவுடிகள் பின்னனியில் ஒட்டு மொத்த கதையையும் நகர்த்தியிருப்பது பாராட்டுக்குறிய ஒன்று.
பெரும்பாலும் நாயகனை சுற்றியே பின்னப்படும் கதைகளில் நாயகிகள் இருட்டிப்பு செய்வார்கள் அந்த அடிப்படை உருவாகிவிடக்கூடாது என்று நாயகியையும் படத்தின் ஓட்டத்தில் இணைத்து இருப்பது ஒரளவிற்கு ஆறுதல்.
ரோமோ என்ற காதல் படத்தை எடுத்த இயக்குனருக்கு இந்த ஆக்ஷன் படத்தை எடுத்ததன் மூலம் ஆக்ஷ்னன் படங்களையும் எடுக்கமுடியும் என்று உணர்த்தியுள்ளார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மதனுக்கு அடியாளாக ஒரு கதாப்பாத்திரம் இருக்கும். அது போல் கார்தியுடனேயே பயனிக்கும் அந்த அடியாள் கதாப்பாத்திரம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது
நெருடலானவை:
வில்லன் கதாப்பாத்திரதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய தவறியுள்ளார் இயக்குனர்.
ஆக்ஷன் படத்திற்குறிய பின்னனி இசையில் சற்று தொய்வுள்ளதாக உணரமுடிகினது.
விவசாயிகள், கார்பரேட் என்ற அடிப்படையையொட்டி பல படங்களை பார்த்த காரணத்தால் இந்த திரைப்படம் பழைய படங்கள் பலவற்றை நினைவூட்டுகின்றது.
தொகுப்பு: விவசாயம் கார்பரேட் போட்டிக்கதையை மற்றுமொரு பரிணாமம் தான் சுல்தான்(Sulthan) இன்றைய கார்பரேட் மயமாக்கள் சூழலில் மக்கள் மனதில் இது பதியும் என்பதில் மாற்றமில்லை. கார்தி கதையின் நாயகனாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளார்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
