Join/Follow with Our Social Media Links

Karnan

கர்ணன் திரை விமர்சனம்


ஒடுக்கப்பட்ட சமூகம் எப்போதும் தலை நிமிரக்கூடாது என்று நினைக்கின்ற அதிகரா மமதையை கருவருக்கும் நாயகன் தான் கர்ணன்.

கலைப்புலி(Kalippuli) S தாணு வின் V கிரியேசன் சார்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்ககியுள்ள படம் கர்ணன். தணுஷ், ரெஜிஷா விஜயன்(அறிமுகம்), லால், கௌரி G கிஷன், நடராஜ்(நட்டி), GM குமார், சண்முகராஜன் கதையின் பாத்திரங்களாய் வாழ்ந்திருக்கின்றனர்.. சந்தோஷ் நராயணன் இசை. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, R.K.செல்வா படத்தொக்குப்பு.

கதை:

ஒடுக்கப்பட்ட சமூகதின் அவலங்களையும் அவர்கள் வாழ்வியல் கஷ்டங்களையும் அவர்களின் தலை நிமிர பாடுபடும் நாயகன் தான் கதையின் அடிப்படை. ஆனால் அதை திரைக்கதை அமைத்தில் சற்று வேறுபட்டு இருக்கின்றார் மாரி செல்வராஜ். ஒரு பேருந்து நிறுத்தை அடிப்படையாக கொண்டு அதன் அடிப்படையில் கதைகளை நகர்த்தியுள்ளார். கர்ணன் ஊரில் பேருந்து நிறுத்தம் கிடையாது. வெளியூருக்கு செல்ல வேண்டிய மக்கள் மேலூருக்கு சென்று தான் பேருந்தில் ஏற வேண்டும். அங்கு அந்த ஊரை சார்ந்த உயர்வகுப்பு சமூகத்தை சேர்தவர்கள் அவர்களை கேவலமாக நடத்துகின்றனர். கர்ணன் ஊரை சார்ந்த கர்பிணிப்பெண் பேருந்துக்காக காத்திருக்கின்றாள். ஆனால் பேருந்து எதுவும் நிற்காமல் செல்கின்றது. அவளின் மகனும் நாயகன் கர்ணன் தன் ஊர் நண்பர்கள் குழுவினருடன் சேர்ந்து ஒரு பேருந்தை அடித்து நொருக்குகின்றனர். அதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் சற்று தலைநிமிர்ந்து பேசுவது பொருக்காமால் அந்த ஊரையே சுடுகாடாக மாற்ற திட்டமிடுகின்றார். அவரிடம் இருந்து தன் மக்களை கர்ணன் எப்படி காப்பாற்றுகின்றான் என்பதே கதை.

அசுரன் படத்தின் இமாலய வெற்றிக்குப்பின் கிட்டதட்ட அதே பாணியிலான ஒரு திரைப்படத்தை கலைப்புலி(Kalippuli) S தாணு தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் கிட்டத்தட்ட அதே அடிப்படையில் ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் இந்த படத்தை கொடுத்துள்ளார். தணுஷ் கர்ணன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியுள்ளார். அறிமுக நாயகி ரெஜிஷா விஜயன் திரௌபதி கதாபாத்திற்கு அழகாக பொருந்தியுள்ளார் ஒரு கிராமியப்பெண்னாகவே நடித்துள்ளார். மலையாளத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் முதல்முறையாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் மகாபாரத கதாபத்திரங்களின் பெயர்களையே வைத்துள்ளனர்.துரியோதனன் (GM குமார்), அபிமன்யு (சண்முகராஜன்). இவர்களில் முக்கியமாக யமன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள லால் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அனைவர் மனதிலும் அழுத்தமாக பதியும் வகையில் நடித்துள்ளார்.

பாராட்டுக்குறியவை:

திரைக்கதையில் பல விஷயங்களை பாராட்டும் அடிப்படையில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏராளமான காவல்துறை அத்துமீறல்களை நாம் தமிழகத்தில் பார்த்துள்ளோம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு. ஸ்டெர்லைட் சம்பவம், மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் போன்றவை மக்கள் மனதில் இடம் பெற்ற நிகழ்வுகள். இதில் குறிப்பாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையில் காவல் துறை அந்துமீறலை அடியொற்றி கதையை அமைத்துள்ளார். ஒரு சிறிய பேருந்து நிறுத்த பிரச்சனையில் தொடங்கி காவல்துறை அத்துமீறல் அடிப்படையில் கதையை புணைந்துள்ளது மிகவும் பாராட்டுக்குறியது.

பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்றால் உயர் சாதிக்கென்று ஒரு பிரிவு ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு பிரிவு இருபிரிவினர் மோதல் இது தான் வழக்கமான திரைப்படத்தின் அடிப்படை. அதிலிருந்து விலகி ஒற்றை அதிகார வர்கத்தின் வர்க்கத்தின் பார்வையில் திரைக்கதையை அமைத்துள்ளது பாராட்டுக்குறியது..

கிராமம், கிராம தேவதை போன்ற மண் சார்ந்த விஷயங்களின் பின்னனி காட்சியமைப்பு, கிராமத்தில் இறந்து கடவுளாய் வாழும் பெண் தேவதை பின்னனியில் திரைக்கதையோட்டம்.

அடிமை விலங்கில் இருந்து விடுதலை பெறுவதை உணர்த்த ஒரு ஒப்பீட்டு கால் கட்டப்பட்ட கழுதையின் விடுதலை,

இயக்குனர் முத்திரைபதிக்க ஏராளமான சிறு சிறு காட்சிகள், நாய், பூனை, குதிரை போன்ற விலங்குகள் பின்னனியில் கட்சிப்பினைப்பு வரவேற்புக்குறியது.

குணச்சித்ர வேடத்தில் லால் நடிப்பில் எதார்த்த நடிப்பு.

யோகிபாபு காமெடி நடிகராக இல்லாமல் ஒரு கிராமத்தின் எதார்த்த பாத்திரத்தில் நடித்திருப்பது பார்ப்பதற்கு புதுமையாக இருக்கின்றது.

இசை மற்றும் பாடலகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் குறிப்பாக “என் ஆளு பண்டாரத்தி” ‘தட்டான் தட்டான்” பாடல்கள் அருமை.

நெருடலானவை::

நடராஜன் (நட்டு) கதாப்பாத்திரம் திரைப்படத்தின் முதுகெலும்பு வருகின்ற காட்சிகளில் நன்றாக நடித்து இருந்தார். அவர் நடிப்பும் பாராட்டுக்குறியது. ஆனால் அவர் கட்சி பகுதிகள் மிகவும் குறைவாக இருப்பத்தை போன்று உணர முடிகின்றது.

படத்தின் கதையோட்டம் எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசில் ஒரு புள்ளியை நோக்கி நகர்கின்றது. பேருந்து நிறுத்த பிரச்சனையில் தொடங்கி அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உச்சகட்ட பிரச்சனையாக மாறுகின்றது படத்தின் முக்கால்வாசி முடிந்த பிறகு.

கலெக்டர் கதாப்பாத்திரம் ஏதோ காட்ட வேண்டும் என்பதற்காக காட்டி செல்லுகின்றனர். இந்த அளவிற்கு பிரச்சனையில் கலெக்டர் மேம்போக்காக இருப்பாரா என்ற வினா எழுகின்றது.

தொகுப்பு:

கர்ணன் திரைப்படம் ஒரு வித்தியாசமான கோணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை சித்தரிக்கும் படம். படம் முடிந்து வெளியில் வரும்போது காட்சிகள் அனைத்து நம் மனதைவிட்டு விலகாமல் வெகு நேரம் நம்முடனே பயணிக்கும்.

Movie Gallery

  • review

    Devadarshni

  • review

    Radhika Apte

  • review

    Huma Qureshi

  • review

    Meenakshi Dixit

  • review

    Kannika Ravi

  • review

    Kiran Rathod

  • review

    Shritha Sivadas

  • review

    Navya Nair

  • review

    Nandita Swetha

  • review

    Padmapriya

  • review

    Dhanya Balakrishna

  • review

    Shilpa Shetty

  • review

    Gouri G Kishan

  • review

    Surabhi

  • review

    Taapsee Pannu

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.