Join/Follow with Our Social Media Links

Kaadan

காடன் விமர்சனம்


EROS இண்டர்நேஷனல் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, ஸ்ரியா பில்கோங்கர், விஷ்ணு விஷால், ஜோயா உசேன், ஆனந்த் மகாதேவன், நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் சினிமா காடன் (Kaadan).

கதை:

மக்களின் சௌகர்யங்கள் மற்றும் மக்களை திருப்திபடுத்தும் செயல்கள் தான் வளர்ச்சி. இந்த அடிப்படையில்தான் உலகமே இயங்கிக்கொண்டு இருக்கின்றது. மக்களுக்கு எந்த அளவிற்கு இங்கே உயிர்வாழ்வதற்கு அடிப்படை இருக்கின்றதோ அந்த அடிப்படையில் விலங்குகளுக்கும் உரிமை உண்டு. விலங்குகள் ஐந்தறிவு படைத்தவை தான் ஆனால் அவைகள் வாழ்வியல் முறை இயற்கையை ஒற்றியே இருக்கும். மனிதர்களை போல் இயற்கைக்கு எதிராக வாழ மிருகங்களுக்கு தெரியாது. மிருகங்களின் வாழ்வியல் அடிப்படை இயற்கை குறிப்பாக காடுகள். ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கு மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்களுக்கும் காடுகள் முக்கியமான ஒன்றுதான். காடுகளே இல்லாமல் உலகம் முழுவது பாலைவனமாக வளர்ச்சி என்ற பெயரில் மாறினால் சற்று கற்பணை செய்து பார்த்தால் இந்த உலகம் எப்படியிருக்கும்? காடன்(Kaadan) சினிமாவின் அடிப்படை காடுகளையும் விலங்குகளை பாதுகாப்பதை அடிப்படையானது தான்.

காடன்(Kaadan) இவன் காடுகளையும் அதையொற்றி வாழும் விலங்குகளின் வாழ்வியலையும் அதன் சூழலிலே வாழ்ந்து உணர்ந்தவன். இந்த காட்டை மக்களின் சௌகர்யங்களுக்காக அழித்து ஒரு கார்பரேட் நிறுவணம் அடுக்குமாடு குடியிருப்புகளை பிரமாண்டமாக கட்ட நினைக்கின்றது. அவர்களிடமிருந்து விலங்குகளையும் காட்டையும் காடன் காப்பாற்றுகின்றான்.

 

பாகுபலி(bahubali) திரைப்படத்தில் பிரமாண்டமாக பார்த்த ராணா டகுபதியை காடன்(Kaadan) எதார்த்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.. தனிமனிதனாக ஒட்டு மொத்த கதையோட்டத்தை தோளில் சுமந்து இருக்கின்றார். பிற கதாபாத்திரங்கள் கதையோட்டத்திற்கு உதவுகின்றன.

 

பராட்டுகுறியவை:

ராணா டகுபதி காடன்(Kaadan) கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவர் உடல் மொழி பாராட்டுக்குறிய ஒன்று. இந்த திரைப்படத்தை பாராட்டுக்குறிய படமாக மாற்றிய பெருமை இவரையே சேரும்.

A.R.அசோக்குமார் (ஒளிப்பதிவாளர்). பல திரைப்படங்களில் உதவி ஒளிப்பாதிவாளராக பணியாற்றிய அணுபவம். அணுபவத்தின் முதிர்ச்சியை முதல் படத்திலேயே கொடுத்துள்ளார். ஒளி ஒவியத்தில் காடுகளின் பசுமையை கண்ணில் பதியவைத்துள்ளார்.

பிரபு சாலமன் ஏற்கனவே மைனா, கும்கி போன்ற திரைப்படங்களை இதே கதைக்களத்தில் இயக்கியுள்ள காரணத்தால் இலகுவாக இதை இயக்கியுள்ளார். அவரின் உழைப்புக்கு மிகபெரிய வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில முக்கிய கதாப்பத்திரங்களை தேவையில்லாமல் வீணடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

சிறப்பு சத்தம் (Sound Effect) முக்கியமாக கவணிக்கப்பட வேண்டிய ஒன்று. காடு, விலங்குகள் சார்ந்த படங்களில் அந்த சூழலியல் சார்ந்த விஷயங்கள் முக்கியமான ஒன்று. அவைகள் சிறப்பாக இருக்கின்றன.

மேலோட்டமான பராட்டுக்கள்:

ஸ்ரியா பில்கோங்கர் கதாபாத்திரம் ஒரளவிற்கு கதையோட்டத்திற்கு உதவுகின்றது. எந்த இடத்திலும் அவரை ஒரு கதாநாயகியாக காட்டமல் கதையோட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தியிருப்பது அருமை.

யானைகள் சார்ந்த பிரமாண்டம் பல Frame களில் க்ண்ணைவிட்டு அகலாமல் இருக்கின்றது.

நெருடலானவைகள்:

மைனா(Myna), கும்கி(Kumki) போன்ற படங்களின் இசை இன்றுவரை செவிகளில் இருந்து அகலாமல் இருக்கும் ஒன்று. இத்திரைப்படத்தில் ஏனோ இசை கட்சிகளோடு பயனிக்க தவறியுள்ளாதக உணரமுடிகின்றது. இசையின் சிறுபகுதியை கூட மனதில் நிலைநிறுத்த முடியவில்லை

இயக்குனர் பல கதாபாத்திரங்களை உருவாக்கி அதனை முழுமையாக பயன்படுத்த தவறியது ஏனென்று தெரியவில்லை? விஷ்ணு விஷால், ஜோயா உசேன் மற்றும் கும்கி யானை பகுதி எதற்காக பயன்படுத்தப்பட்டது? இயக்குனர் அவர்கள் சார்ந்த காட்சிகளை வேறுவகையில் சிந்தித்து இருக்கலாம்,. அந்த காட்சிகள் திரைக்கதையோட்டத்தில் தொய்வை ஏற்படுத்துவதுவதாக இருக்கின்றது.

வனமகன்(Vaana Magan) என்ற திரைப்படத்தின் கதை தாக்கம் ஏதோமூலையில் வந்து செல்கின்றது.

ஒரு காட்சியில் புலி வருவது போல் காட்டி அனைவரை விரட்டுவது போல் காட்சி அமைத்திருப்பது ஏன் என்று புரியாமல் இருக்கின்றது.

கார்பரேட்vs இயற்கை சீரழிவு என்பது பல திரைப்படங்களில் பார்த்த, பார்த்து கொண்டுஇருக்கின்ற பார்க்கப்போகின்ற அடிப்படையாக இருக்கின்றது

 

தொகுப்பு: பிரமாண்டம் என்ற அடிப்படையில் காட்சிகளை சிதைக்காமல் இயற்கை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையை அழுத்தமாக பதியவைத்துள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. படம் பார்க்கும் அனைவரையும் இயற்கை மீது பற்றுகொள்ளவைககும் என்பதில் ஐயமில்லை.

 

உண்மையான் நாயகன்: A.R.அசோக்குமார், ராணா டகுபதி, பிரபு சாலமன்

Movie Gallery

  • review

    Amala Paul

  • review

    Samantha

  • review

    Nivetha Pethuraj

  • review

    Jyothika

  • review

    Darshana Banik

  • review

    Hansika Motwani

  • review

    Gouri G Kishan

  • review

    Kausalya

  • review

    Vedhika

  • review

    Nayanthara

  • review

    Ramya Pandian

  • review

    Adah Sharma

  • review

    Janani Iyer

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Raai Laxmi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.