சிக்சர் எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் மினி ஸ்டுடியோ சார்பில் திணேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் தயாரித்திருக்கும் படம் திட்டம் இரண்டு. ரேடியோ ஜாக்கி, ஸ்டார் விஜய், சன் டிவி, ஜீ தமிழ், பாலிமர் சின்னத்திரை தொடர்களில் பங்கேற்ற தொகுப்பாளராகவும் இருந்தவர். விக்ணேஷ் கார்த்திக். சில திரைப்படங்களில் சிறியகதாப்பாத்திரத்திலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல என்ற தமிழ் படத்தையும் இயக்கியுள்ளார். விக்ணேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. சதீஸ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். C.S.பிரதீப் குமார் படத்தை தொகுத்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி எடுத்துள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் (ஆதிரா) , சுபாஷ் செல்வம் (அர்ஜூன்), அனன்யா ராம்பிரசாத் (தீபா சூர்யா என்கிற சூர்யா) பவேல் நவநீதம் (பரணி), கோகுல் ஆனந்த் (கிஷோர்), ஜீவா ரவி (அபிஷேக்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் நேரடியாக சோனி லிவ் ஒடிடி தளத்தில் 30.07.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.
கதைக்கரு:
பெண்ணின் மீது ஆண்மை குணம் கொண்ட பெண்ணுக்கு ஏற்படும் முரண்பட்ட காதல் அடிப்படையை கொண்ட கதை.
கதை:
ஆதிராவும், சூர்யாவும் பள்ளிப்பருவம் முதல் உயிர் தோழிகள். உயர்கல்விவரை (+2) இருவரும் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி படிப்பை ஆதிரா சென்னையிலும் சூர்யா கும்பகோணத்திலும் படித்தனர். ஆதிரா படிப்பை முடித்து காவல்துறையில் பணியில் சேர்கின்றார். சூர்யா டாக்டர் கிஷோரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலாகின்றார். ஆனால் திருமணத்தில் விருப்பமில்லாமல் தான் கிஷோரை திருமணம் செய்துகொள்கின்றாள் சூர்யா. கிஷோருக்கு பல்லவி என்ற கல்லூரி தோழி மீது காதல் கொண்டு பெற்றோர்களின் எதிர்ப்பார் காதலை மறந்து சூர்யாவை கிஷோர் திருமணம் செய்துகொள்கின்றான்.
சென்னையில் பணியில் சேர செல்லும் ஆதிராவிற்கு பேருந்தில் அர்ஜீனுடன் பழக்கம் ஏற்படுகின்றது. அந்த பழக்கம் காதலாக மாறுகின்றது. அர்ஜூன் சினிமாவில் நடிக்க முயற்சித்து வருபவன்.
சென்னையில் பணியில் சேரும் ஆதிராவிற்கு டாக்டர் கிஷோரிடம் இருந்து மனைவி சூர்யாவை காணவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றான். அதை விசாரிக்கும் ஆதிரா தன் தோழி சூர்யாவை தேடும் பணியில் விசாரனையை மேற்கொள்கின்றார், ஒரு ஊனமுற்ற நபர் அங்கே சாலையில் அடிக்கடி வந்து செல்வது தெரிகின்றது. அதே நேரத்தில் பிரியா என்ற பெண்ணும் அதே நேரத்தில் கொலை செய்யப்படுகின்றாள். இதற்கிடையில் சூர்யாவின் கார் மரத்தில் மோதி விபத்தில் சூர்யா இறந்த செய்தி கிடைக்கின்றது, ஆனால் ஆதிரா அது விபத்தில்லை என்று விசாரணையை தொடர்கின்றாள், அந்த நேரத்தில் சூர்யாவுடன் கல்லூரியில் படித்த பரணி மீது சந்தேகம் வருகின்றது. மீண்டும் சூர்யா வீட்டிற்கு செல்லும் போது ஊனமுற்றவனை பார்க்கின்றாள் ஆதிரா அவனை விரட்டி பிடிக்கின்றான், தன்னை காதல் என்ற பெயரில் ஏமாற்றிய பிரியா மற்றும் சூர்யாவை கொல்ல முடிவு செய்ததாகவும் அதே நேரத்தில் பிரியாவை தான் கொன்றதாகவும் சூர்யாவை கொல்ல செல்லும் போது அங்கே இருக்கும் ஆண் நபர் மூலம் தாக்கப்பட்டதாகவும். பின் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் சொல்கின்றான்.
அர்ஜூன் மற்றும் ஆதிராவின் காதலுக்கு பச்சை கொடி காட்டி திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர் ஆதிராவின் பெற்றோர்கள்.
சூர்யா மரணத்தை விசாரிக்கின்ற ஆதிராவிற்கு விபத்தில் இறந்தது சூர்யா அல்ல. வேறு ஒருவர் என்ற உண்மையை கண்டறிகின்றார், சாட்சிகளை மாற்றி சூர்யா இறந்ததாக நிரூபிக்க முயன்றதாக சூர்யாவின் கணவர் கிஷோர், பிரேத பரிசோதனை அதிகாரி, மற்றும் போலிஸ் அதிகாரி அபிஷேக் ஆகியோரை கைது செய்ய முயற்சிக்கும் போது. கிஷோர் சூர்யா இறக்கவில்லை மனதுக்கு பிடிக்காமல் தன்னை திருமணம் செய்து கொண்டு வாழபிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சூர்யாவை காப்பாற்றி யாருக்கும் தெரியாமல் அவள் காதலனுடன் சேர்த்துவைக்கவே இப்படியொரு நாடகம் நடத்தப்பட்டதாக சொல்கின்றான். அதை நம்பாத ஆதிராவிற்கு சூர்யா தன் காதலனுடன் இருக்கும் வீடியோவை காட்டுகின்றான்.
குழப்பத்தில் இருக்கும் ஆதிராவிற்கு சூர்யாவிடமிருந்து Unknown நம்பரில் இருந்து தான் பாண்டிச்சேரியில் இருப்பதாக சொல்லி வரசொல்கின்றாள். ஆதிரா பாண்டிச்சேரி கிளம்பும் போது அங்கே வரும் அர்ஜூன் தானும் அவளுடன் பாண்டிச்சேரி வருவதாக கூறி அவனும் ஆதிராவுடன் செல்கின்றான்.
அங்கே அதிர்ச்சி காத்திருக்கின்றது. அங்கே கிஷோர், பல்லவி, பிரேத பரிசோதனை டாக்டர், காவல்துறை அதிகார் அபிஷேக் அங்கே இருக்கின்றனர். அங்கே அர்ஜுனைப்பற்றிய மிகப்பெரிய உண்மையை தெரிந்து கொள்கின்றாள். சூர்யாவிற்கும் அர்ஜூனுக்கும் என்ன சம்மந்தம் என்பதை இறுதிகாட்சியில் விளக்கியுள்ளனர்.
பாராட்டுக்குறியது:
ஒரு வித்தியாசமான கதைக்கருவை தேர்ந்தெடுத்து தைரியமாக இயக்கிய விக்ணேஷ் கார்த்திக் முயற்சி சிறந்த ஒன்று.
சூர்யாவாக நடித்துள்ள அனன்யா ராம்பிரசாத் முகபாவங்கள் மற்றும் நடிப்பு அருமை
பரணியாக நடித்துள்ள பவேல் நவகீதம் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அருமையாக நடித்துள்ளார்.
இறுதிகாட்சியை யாரும் எதிர்பார்க்காத அடிப்படையில் கொடுத்துள்ளார் இயக்குனர்.
நெருடலானவை:
ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை என்பதை யாருமே மறுக்க முடியாது. கதாநாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த காவல்துறை அதிகாரி காதாப்பாத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷிடம் காவல்துறை அதிகாரிக்குரிய மிடுக்கு குறைவாக இருப்பதும் அதற்குறிய விரைப்பான முகப்பாவம் இல்லாமல் இருப்பதை உணர முடிகின்றது. ஒரு வேலை பிற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் இருந்து சரசாரி கதாப்பாத்திரமாக இது இருக்க வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருந்தாரோ என்னவோ?
அதீரா என்ற போலிஸ் அதிகாரி திருமணம் செய்வதில் நாட்டம் குறைவாக உள்ளவர். அர்ஜூனை பார்தவுடன் காதல் கொள்வது போன்ற காட்சிகள் நம்பமுடியாத காட்சிகள். அதீராவிற்கு அர்ஜீன் மீது காதல் ஏற்படுவதற்கான அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லை.
ஒரு ஆண் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி ஒரு பெண் போலிஸ் அதிகாரியுடன் தொடர்பில் சூர்யா இருப்பது போன்ற காட்சியமைப்பு. ஒரு சாதாரன மனிதர்களிடம் இந்த வகையான விஷயங்கள் இருப்பது போன்ற காட்சியமைப்புகள் கூட ஒருவகையில் ஏற்புடையது. ஆனால் ஒரு போலிஸ் பெண் அதிகாரியுடன் இன்னொரு பெண் ஆண் முகநூல் கணக்கில் உரையாடியதாக சொல்வது நெருடலான ஒன்று. அதைப்பற்றி ஆதிராவின் கோணத்தில் ஒரு காட்சியமைப்புகள் கூட இல்லாதது ஏன்?
விறுவிறுப்பான திரக்கதை இருப்பதை போன்று படம் தோன்றினாலும் படம் முடியும் போது அந்த விறுவிறுப்பு மறந்து போனதாகவோ அல்லது மறைந்து போனதாகவோ உணர முடிகின்றது. ஒரு வேலை யாரும் எதிர்பார்க்காத அருமையான இறுதிகாட்சி. பாராட்டப்படவேண்டிய ஒன்று என்றாலும் அந்த இறுதி காட்சி ஓட்டு மொத்த திரைக்கதை விறுவிறுப்பையும் மறைத்துவிட்டதோ? உதராணத்திற்கு படமும் நன்றாக இருக்கும் அதிலிருக்கும் நகைச்சுவை காட்சிகளும் அருமையாக இருக்கும். இந்த நகைச்சுவைகாட்சிகள் பெரிய அளவு வரவேற்பு பெரும் போது மற்ற விஷயங்களை மறக்கடிக்கும். அந்த அடிப்படையில் தான் இந்த படத்தின் இறுதிகாட்சி ஒட்டு மொத்த திரைக்கதை விறுவிறுப்பையும் மறக்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படுக்கின்றது.
தொகுப்பு:
திட்டம் இரண்டு மிகவும் வித்தியாசமான ஒரு புதுமையான கதையை கிரைம் திரில்லர் அடிப்படையில் பார்க்கலாம். குறிப்பாக இறுதிகாட்சி யாரும் எதிர்பார்க்காத அடிப்படை.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.