Join/Follow with Our Social Media Links

ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன் (Raya And The Last Dragon) திரைவிமர்சனம்

ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன் (Raya And The Last Dragon) திரைவிமர்சனம்


வால்ட் டிஸ்னி பிக்ஸர் சார்பில் ஒஸ்னாட் ஷுரர் மற்றும் பீட்டர் டெல் வெச்சோ தயாரித்துள்ள படம் ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன் (Raya and the Last Dragon)”. டான் ஹால் மற்றும் கார்லோஸ் லோபஸ் எஸ்ட்ராடா இயக்கியுள்ளனர். ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் இசையமைத்துள்ளார். வரைகலை(கார்டூன்) அடிப்படையிலான இந்த படத்திற்கான அடிப்படை (Lay Out) ஓளிப்பதிவை செய்துள்ளார். ஃபேபியான் ராவ்லி மற்றும் ஷானன் ஸ்டீன் படத்தை தொகுத்துள்ளனர். இதற்கான கதையை பால் பிரிக்ஸ், டான் ஹால், அடீல் லிம், கார்லோஸ் லோபஸ் எஸ்ட்ராடா, கீல் முர்ரே, குய் நுயேன், ஜான் ரிப்பா மற்றும் டீன் வெலின்ஸ் குழுவினர் அமைத்துள்ளனர்.

 

காதாப்பாத்திரங்கள் அடிப்படையில் நடித்தவர்கள் விவரம் திரைவிமர்சனம் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது/

 

05, மார்ச் 2021 ல் வெளியான இந்த படம் உலக அளவில் கொரான பெருந்தொற்று தடை காரணமாக எதிர்பார்த்த பிரமாண்ட வெற்றியை பெறாவிட்டாலும். அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில்  மொழிமாற்றம் செய்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்  ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.

 

கதைக்கரு:

நம்பிக்கை மற்றும் பேராசையின்மை  பெரும்பாலான பிரச்சனைக்கு தீர்வாக மட்டுமல்ல பிரச்சனை என்பதே உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாகும். இந்த அடிப்படையை பெரும்பாலனவர்கள் புனித தெய்வமாக கருதும் டிராகனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

 

கதை:

அனிமேஷன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசிக்கும் ஒரு கதைக்களத்தை அழகாக உருவாக்கியிருக்கின்றனர்.

500 ஆண்டுகளுக்கும் குமந்திரா தேசம் ஒன்றுபட்ட தேசமாக இருந்தது. அப்போது ஏற்பட்ட சூறாவளி என்ற கொள்ளைநோய் காரணமாக மக்கள் கல்லாக மாற்றப்பட்டனர். ஆனால் பிராநீ, அம்பா, ஜகன், பென்கு மற்றும் சிசு என்ற ஐந்து டிரகான்கள் தங்கள் சக்தியை ஒன்றுதிரட்டி ஒரு வைரத்தை உருவாக்குகின்றனர். அந்த வைரத்தின் உதவியால் சூறாவளி விலகி அனைவரும் உருபெற்றார்கள். ஆனால் சிசுவைத்தவிர மற்ற டிராகன்கள் கல்லாய் இருந்து உருமாறவில்லை.

 

மக்கள் இடையே ஏற்பட்ட பேராசை மற்றும் டிராகன் வைரத்தை அடையும் போட்டியில் குமந்திர தேசம் வளமை மிகுந்த ஹார்ட்(Heart), பாலைவனமான டெய்ல்(Tail), வியாபார சந்தையான டலன்(Talon), மூங்கில் வளம் போராட்ட குணம் கொண்ட கோடாரி மக்கள் சார்ந்த ஸ்பயின்(Spine) மற்றும் கொடூர எதிர்ப்பு குணம் கொண்ட கோபம் நிறைந்த படைவீரர்களை கொண்ட ஃபாங்க்(Fang) என ஐந்து பிரிவாக சிதறியது

 

வளமை மிகுந்த ஹார்ட் தேசத்தின் அரசன் டிராகன் வைரத்தின் பாதுகவலன் பென்ஜா, இவரது மகள் ராயா. ராயாவின் நண்பன் டுக் டுக் புழு, பென்ஜாவின் இலக்கு பிரிந்த தேசத்தை ஒன்றினைத்து மீண்டும் குமந்திர தேசத்தை உருவாக்க வேண்டும் பழைய சரித்திரம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். நான்கு தேச தலைவர்களையும் விருந்துக்கு அழைக்கின்றான். கொடூர குணம் கொண்ட ஃபாங்க் தேச அரசின் மகள் நமாரி ராயாவுடன் அன்புடன் பழகி டிராகன் வைரம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதை கொள்ளையடிக்க முயல்கின்றாள். அந்த நேரத்தில் அங்கே வரும் பிற நாட்டுமக்களும் அதை கொள்ளையடிக்க முயல்கின்றனர். அந்த போராட்டத்தில் வைரம் ஐந்து துண்டுகளாக உடைகின்றது. டிராகன் வைரம் உடைந்த காரணத்தால் மீண்டும் சூறாவளி வெளிப்பட்டு எல்லாரையும் மீண்டும் கல்லாக்குகின்றது. ஐந்து தேசத்து மக்களும் ஆளுக்கு ஒரு துண்டு வைரத்தை எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர். வைரத்தை சூறாவளி முன் காட்டும் போது அது அவர்களை தாக்காமல் விலகி செல்கின்றது. தண்ணீரை சென்று சூறாவளி யாரையும் தாக்காது. அதை உணர்ந்த பென்ஜா தன் மகள் ராயாவின் கையில் அந்த வைரத்தை கொடுத்து அவளை தண்ணீரில் தள்ளி விடுகின்றார். சூறாவளி அவரை தாக்கி அவரும் கல்லாகின்றார். ஆனால் கடைசி டிராகன் ஏதோ ஒரு ஆற்றங்கரை இறுதியில் இருக்கும் என்ற கருத்தை தெரிந்திருந்த ராயா அந்த ஐந்தாவது இறுதி டிராகனை தேடிச்செல்கின்றாள்.

 

ஏராளமான ஆறுகளில் தேடி அலைந்து ஆறாண்டுக்குப்பிறகு ராயா நண்பன் டுக்டுக் புழுவின் உதவியுடன் சிசுவை கண்டுபிடிக்கின்றாள். சிசுவை கண்டுபிடிக்கின்றாள். ஆனால் சிசு தான் பெரிய சக்தி படைத்தவள் அல்ல. தான் சிறந்த நீச்சல் செய்பவள் அவ்வளவு தான். மற்ற நான்கு டிராகன்கள் சக்தியே முதன்மை வாய்ந்தது என்று சொல்கிறாள்.அப்போது ராயாவிடம் இருக்கும் வைரத்தை சிசு வாங்கியவுடம் ஒளிர்கின்றாள். மக்களை காப்பாற்ற துண்டு துண்டாக சிதறிய 5 டிராகன் வைர சக்தியையும் ஒருகிணைத்தால் மக்களை காப்பாற்ற முடியும் என்று சிசு ராயாவிடம் சொல்கின்றாள். ஐந்து வைரங்களையும் தேடி ராயா, சிசு மற்றும் டுக் டுக் புழுவும் செல்கின்றனர். இதே நேரத்தில் ஃபாங்க் இளவரசி நமாராவும் எஞ்சிய வைரப்பகுதிகளை அடைய பூனைப்படையுடன் சென்று முயற்சிக்கின்றாள்..

 

தரைப்பகுதியை கொண்ட பாலைவன தேசமான டெயிலுக்கு செல்கின்றனர். அங்கே அனைவரும் கல்லாக மாறியிருக்க. வைரத்தை வைத்திருக்கும் ஒருவரும் யாரும் அதை கவர்ந்துவிடக்கூடாது என்று பொறிகள் அமைத்து அதன் நடுவே வைரத்துடன் இறந்து கிடக்கின்றான். பொறிகளை கடந்து அந்த வைரத்தை எடுக்கின்றனர். அந்த வைரத்தை சிசு தொட்டதும் மனித உருவம் பெறும் சக்தி பெறுகின்றாள். அந்த நேரத்தில் அங்கே வரும் நமாராவின் பூனைப்படையிடம் இருந்து தப்பிக்கின்றனர். சூறாவளி நோய்க்கு தண்ணீரை கண்டால் எப்படி பயமோ அதே போல் பூனைகளுக்கும் தண்ணீரை கண்டால் பயம் என்பதை உணர்ந்து ராயா, சிசு மற்றும் டுக்டுக் தண்ணீரில் குதித்து ஒரு படகில் தப்பிக்கின்றனர். அங்கே படகு ஓட்டிக்கொண்டு நீரிலிருந்து வெளியில் வராமல் சூறாவளி தாக்கத்தில் இருந்து தப்பித்து இருக்கும் பூன் இவர்களுக்கு உதவிபுரிகின்றான்.

 

இரண்டு வைரத்தை கைப்பறிய இவர்கள் நீர் நடுவில் இருக்கும் வியாபார சந்தை தேசமான டலன்( தேசத்திற்கு மூன்றாவது வைரத்தை தேடி சக்திசாலியான டாங்க் ஹையை தேடி செல்கின்றனர். அங்கே சந்தை மட்டும் சிறப்பல்ல. அங்கே கொள்ளை அடிப்பவர்களும் அதிகம். அங்கே ராயன் வைத்திருக்கும் வைரத்தை ஒரு குழந்தையும் மூன்று எலிகளும் கொள்ளையடிக்க அவர்களிடமிருந்து வைரத்தை மீண்டும் கைப்பற்றும் ராயா அவர்களை திருத்தி தங்களுடன் சேர்த்துக்கொள்கின்றாள். அவர்கள் உதவியுடன் டாங்க் ஹையை சந்திக்கின்றாள். ஆனால் டாங்க் ஹையும் கல்லாகி இருக்கின்றார். மூன்றாவது வைரத்தை ஒரு கிழவி கொள்ளையடித்தை தெரிந்து அவளிடமிருந்து கைப்பற்றுகின்றாள் ராயா.

 

நான்காவது வைரத்தை தேடி ராயா, சிசு, டுக் டுக், பூன், குழந்தை மற்றும் மூன்று எலிகளுடன் தரைபிரதேசமான மூங்கில் காடுகள் நிறைந்த ஸ்பெயின் தேசத்திற்கு செல்கின்றாள். அங்கே இருக்கும் கோடாரி வீரனிடம் ராயாவும், சிசுவும் மாட்டிக்கொள்கின்றனர். அங்கே வரும் டுக் டுக், பூன், குழந்தை மற்றும் மூன்று எலிகள் சேர்ந்து கோடாரி மனிதனை கட்டிப்போட்டு காப்பாற்றுகின்றனர். அப்போது தான் அந்த கோடாரி மனிதனை தவிர அனைவரும் அங்கே கல்லாய் மாறிவிட்டது தெரிந்தது. கோடாரி மனிதனும் ராயாவுடன் சேர்ந்து கொள்கின்றான். அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் உயிர்பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.

 

ஐந்தாவது வைரம் தேடி ராயாவின் எதிரி துரோகம் செய்த நமாரி இருக்கும் நீர் நிறைந்த ஃபாங்க் தேசத்திற்கு செல்கின்றனர். சிசு ராயாவிடம் நமாரியிடம் நட்புகொள்ளுமாறும் அதன் அடிப்படையில் அந்த வைரத்தை வாங்குமாறும் அறிவுரை சொல்கின்றது. அந்த அறிவுரையேற்றும் மக்கள் நலன் அடிப்படையில் ஒருங்கினைய நினைக்கும் நமாரியும் நினைக்கும் போது அவள் தாய் இன்றைய நிலைக்கு நம் துரோகம் தான் காரணம் என்று அனைவரும் நினைக்கின்றனர். அதை மாற்ற வைரத்தின் அனைத்து பகுதியையும், டிராகன் சிசுவையும் கையகப்படுத்த சொல்கின்றாள். ஆனால் நம்பிக்கை அடிப்படையில் பேச்சு வார்த்தை மூலம் வைரத்தை அடைய ராயா முயலும் போது நமாரி மொத்த வைரத்தையும் சிசுவையும் அடைய நடக்கும் போராட்டத்தில் சிசுவின் மேல் அம்பு பட்டு நீரில் விழுகின்றது. இதனால் கோபம் கொள்ளும் ராயா நமாரியை கொல்ல செல்கின்றாள். அதே நேரம் சிசு டிராகன் இல்லாத காரணத்தால் வைரம் ஒளி குறைய தொடங்குகின்றது. சூறாவளி நோய் ஃபாங்க் தேசத்திற்குள் நுழைகின்றது. கொஞ்சம் இருக்கும் ஒளியை வைத்து டுக்டுக், பூன், குழந்தை, எலிகள் மற்றும் கோடரி மனிதன் அந்நாட்டு மக்களை காப்பாற்றுகின்றனர். மக்களை தண்ணீர் பகுதிக்கு அணுப்பியபின் ராயா, நமாரி, பூன், கோடாரி மனிதன் மற்றும் குழந்தை மட்டும் ஆளுக்குகொரு வைரத்துடன் சூறாவளியுடன் போராடுகின்றனர். டிராகன் வைரத்தின் ஒளி குறைந்து கொண்டே வருகின்றது. அப்போது ராயா நமாரியிடம் நம்பிக்கை வைத்து தன் வைரப்பகுதியை ஒப்படைக்க முயலும் போது மற்றவர்கள் தடுக்கின்றனர், அப்போது ராயா யார் மீதாவது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். அது வெல்லுமா இல்லையா என்பதைவிட நம்பிக்கை என்பதே முக்கியம் என்கின்றாள். அனைவரும் நமாரியிடம் வைரத்தை ஒப்படைத்துவிட்டு சூறாவளியால் பாதிக்கப்பட்டு கல்லாகின்றனர். நம்பிக்கை நமாரியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒளியிழந்து கொண்டிருக்கும் ஐந்து துண்டுகளையும் ஒன்றாக இணைக்கின்றாள். வைரம் முற்றிலுமாக ஒளியிழக்கின்றது, நமாராவும் கல்லாகின்றாள். ஆனால் ஐந்து பாகமும் இணைந்த வைரம் மீண்டும் ஒளிபெறுகின்றது, குமந்திரா பிரதேசத்தில் கல்லாயிருந்த அனைவரும் உயிர்பெருகின்றனர். பூன் குடும்பத்தினர் உயிர் பெறுகின்றனர், குழந்தையின் தாய் உயிர்பெறுகின்றாள்., கோடாரி மனிதன் குடும்பத்தினர் உயிர்பெருகின்றனர். அதிஷ்டவசமாக சிசு உட்பட அனைத்து டிராகன்களும் உயிர்பெருகின்றனர்.

 

ராயாவின் தந்தை பென்ஜாவும் உயிர்பெருகின்றார். அவரை தேடி மற்ற தேசத்தவர்கள் வருகின்றனர். அனைவரையும் ஒருங்கினைக்க வேண்டும் என்ற பென்ஜா கனவை ராயா நிறைவேற்றுகிறாள்.

 

பாராட்டுக்குறியவை:

 

குழந்தைகளை கவரும் வகையிலான் அனிமேஷன் காட்சிகள் அருமையாக உள்ளது. குறிப்பாக டிராகன் மழை நீரை பிடித்து வானத்துக்கு ஏறுவது போன்ற காட்சி.

 

சிறு குழந்தை மற்றும் மூன்று எலிகள் காட்சிகள் அனைவரையும் கவரும். குறிப்பாக குழந்தைகள் விரும்பும் கதாப்பாத்திரமாக இருக்கும்.

 

தமிழில் அம்புலிமாமா கதைகள் என்று சொல்வார்கள் அந்த அடிப்படையிலான கதைகளம்.

 

ராயா கதாப்பாத்திரம் முதன்மை கதாப்பாத்திரமாக இருந்தாலும் நமாரி கதாப்பாத்திரத்தையும் அழகாக அமைத்துள்ளனர்,

 

கடைசி காட்சியில் அனைத்து டிராகன்களும் உயிர்பெற்று வரும் காட்சி அழகாக அனைவர் விழிகளையும் நிறைக்கும் வகையிலும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்

 

மொத்தத்தில் அனைத்து கதாப்பாத்திர படைப்புகளும் அருமையாகவும் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.

 

நெருடலானவை:

டிராகன் வைரங்களை தேடிச்செல்லும் போது அவைகள் கிடைக்கும் காட்சிகள் பெரிய அளவு விறுவிறுப்பாக இல்லாமல் உள்ளது.

 

கதாப்பாத்திர படைப்புகள் அருமையாக இருந்தாலும் காட்சியமைப்புகள் அதற்குறிய பிரமாண்டத்தை மனதில் விதைக்கவில்லை.

 

அழகான கதையில் விறுவிறுப்பு குறைவான திரைக்கதை காரணமாக படம் மனதில் ஒட்டாமல் பயனிக்கின்றது.

 

தொகுப்பு:

 

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த படத்தை பரிந்துரைக்கலாம்.. அழகான அனிமேஷன் காட்சிகள் குழந்தைகளை ரசிக்க வைக்கும். திரைக்கதை தொய்வு என்பது அனிமேஷன் காட்சி பிரமாண்டத்தில் மறைந்து போகும்

 

முக்கிய கதாப்பாத்திரங்கள் அனிமேஷனுக்கு உருகொடுத்தவர்

 

ராயா:- கெல்லி மேரி டிரான்

பெஞ்ஜா-டேனியல் டே கிம்

சிசு--அக்வாஃபினா

நமாரி-ஜெம்மா சான்

நமாரி தாய் விரானா- சாண்ட்ரா

பூன்-இசாக் வாங்

டாங்க் ஹை- பெனடிக்ட் வோங்

டீசர்-தமிழ்

Movie Gallery

  • review

    Mamta Mohandas

  • review

    Srushti Dange

  • review

    Kushboo

  • review

    Mehreen Pirzada

  • review

    Tamannah

  • review

    Bindu Madhavi

  • review

    Aishwarya Rajesh

  • review

    Poorna

  • review

    Ammu Abhirami

  • review

    Sri Divya

  • review

    Oviya Helen

  • review

    Madonna Sebastian

  • review

    Poonam Bajwa

  • review

    Rashmika Mandanna

  • review

    Raashi Khanna

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.