வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மற்றும் பிக்ஸ்ர் அனிமேஷன் ஸ்டியோஸ் சார்பில் தயாரித்துள்ள படம் “லுகா”. என்ரிகோ காஸரோசா இந்த படத்தை இயக்கியுள்ளார். என்ரிகோ காஸரோசா, ஜெஸ்ஸி ஆண்ட்ரூஸ் மற்றும் சைமன் ஸ்டீபன்சன் கதையை உருவாக்கியுள்ளனர். டான் ரோமர் இசையமைத்துள்ளார். டேவிட் ஜுவான் பியாஞ்சி மற்றும் கிம் ஒயிட் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.. கேத்தரின் ஆப்பிள் மற்றும் ஜேசன் ஹடக் படத்தை தொகுத்துள்ளார்கள்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது.
கதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தவர்கள் விளக்கம் இந்த விமர்சனம் இறுதியில்..
கதைக்கரு:
கடற்கன்னி(mermaid) என்று சொல்வார்கள் சிலர், கடல் பூதம்(sea monster) என்றும் சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கின்றது. அவர்கள் சராசரி வாழ்கையை வாழ நினைக்கும் அடிப்படையே இந்த கதை.
கதை:
லுகா எனும் லூகா பாகுரோ ஒரு கடல் பூதம் வகையை சார்ந்த மீன் இண சிறுவன். செல்ல தந்தை லோரன்சோ, பாசமிகுந்த கண்டிப்பு நிறைந்த தாய் டேனீlலா பாகுரோ,, மற்றும் அன்பு அதிகம் கொண்ட பாட்டி பாகுரோ உடன் போர்டோரோசோ கடல் பகுதியில் வாழ்ந்து வருகின்றான். கடல் ஆடுகளை (Sea Goat) மேய்த்துக்கொண்டு இருக்கும் லுகா. மனிதர்கள் கடலில் வீசிச்சென்ற பொருள்களை பார்த்து வியக்கின்றான். பாட்டி பாகுரோ மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த நகரத்தை பற்றியும் சொல்கின்றாள். ஆனால் லுகாவின் தாய் அதை இடைமறித்து நீ எந்த காரணம் கொண்டும் தரைப்பகுதிக்கு செல்லக்கூடாது என்று சொல்கின்றாள்.
ஒருநாள் ஆல்பர்டோ எனும் ஆல்பர்டோ ஸ்கார்பானோவை என்ற மற்றொரு கடல் பூதத்தை சந்திக்கின்றான். அவன் லுகாவை தரைப்பகுதிக்கு கூட்டி செல்கின்றான். தாய் தந்தைக்கு தெரியாமல் கரைப்பகுதிக்கு செல்லும் அவன் கரைப்பகுதிக்கு வந்தவுடன் மனித உருவம் பெருகின்றான். கடலிலேயே வாழ்ந்த லுகாவிற்கு தரைப்பகுதி அவனுக்கு புதுமையாக இருக்கின்றனது ஆனால் மனதிற்குள் பயமாகவும் இருக்கின்றது. உடனே கடலுக்கு திரும்புகின்றான். வீட்டிற்கு செல்லும் அவனுக்கு தரைப்பகுதியை பற்றிய நினைவாகவே இருக்கின்றது.
அடுத்த நாள் ஆடுகளை மேய்க்க (Sea Goat) செல்லும் அவன் ஆடுகளை மேய விட்டுவிட்டு தரைக்கு செல்கின்றான். அவன் மீண்டும் வருவான் என்று உணர்ந்த ஆல்பர்டோ கரைக்கு வரும் அவனுக்கு மனிதர்களை போல் நடக்க கற்றுக்கொடுக்கின்றான். பின் தரையில் அவன் வசிக்கும் ஒரு உயரமான பகுதிக்கு கூட்டிச்செல்கின்றான். அங்கே ஆல்பர்டோ மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்கள் வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகின்றான். லுகா. அப்போது வெஸ்பா (Vespa) ஸ்கூட்டரில் ஒரு மனிதன் பயனிக்கும் படத்தையும் வைத்திருக்கின்றான். அந்த ஸ்கூட்டரில் ஏறி உலகத்தையே சுற்றிவர முடியும் என்றும். வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்து மீன் என்றும் நிலாவை பெரியமீன் என்று சொல்கின்றான். அதை நம்பிய லுகா எப்படியாவது வெஸ்பாவில் சென்று அந்த மீன்களை பார்த்து வரவேண்டும் என்று எண்ணுகின்றான். கையில் இருக்கும் பொருளைவைத்து ஒரு ஸ்கூட்டரை உருவாக்குகின்றான். ஆனால் அது மரத்தால் ஒட்ட வைத்து செய்யப்பட்ட காரணத்தால் உடைந்து போகின்றது. நேரமாகிவிட்ட காரணத்தால் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று லுகா ஆல்பர்டோவிடம் சொல்லிவிட்டு கடலுக்கு செல்கின்றான்.
லுகாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அவன் தாய் டேனிலா, அவனை கண்டிக்கின்றாள். இனி தரைப்பகுதிக்கு செல்லமால் அவன் இருக்கவேண்டுமென்றால். லுகாவின் தந்தையில் சகோதரர் ஆழ்கடலில் வசிப்பவர். அவருடன் சென்று தங்க சொல்கின்றாள். இதை விரும்பாத லுகா வீட்டை விட்டு வெளியேறி தரைப்பகுதிக்கு வருகின்றான். அங்கே ஆல்பர்டோவுடன் தங்குகின்றான்.
அவர்கள் இருவரும் எப்படியாவது வெஸ்பா ஸ்கூட்டரை பெற வேண்டும். அதை வைத்துக்கொண்டு உலகத்தை சுற்றிவர வேண்டும் என்பது தான் இலக்காக இருக்கின்றது. அதற்காக அருகிலிருக்கும் மனிதர்கள் வாழும் போர்டோரோசோ பகுதிக்கு செல்ல தீர்மானிக்கின்றனர்.
முதன் முதலில் மனிதர்கள் வாழும் பகுதியை பார்த்த லுகாவிற்கும் ஆல்பர்டோவிற்கும் வியப்பாகவும் அதிசயமாக இருக்கின்றது. அந்த பகுதி மக்களின் முதன்மை தொழில் மீன் பிடிப்பது/ அங்கே உள்ள மக்களுக்கு கடல் பூதம் என்றால் பயம். கடல் பூதத்தை கொல்பவர்களுக்கு பரிசு என்று வேறு அறிவித்திருந்தார்கள். அவர்கள் மேல் சிறிதளவு தண்ணீர்பட்டாலும் அவர்கள் சுய உருவம் தெரியும் அதனால் அவர்கள் நீரைவிட்டு விலகியே இருக்க தீர்மானிக்கின்றனர்.அப்போது அந்த ஏரியாவிற்கு டானா இருக்கும் எர்கோல் என்னும் எர்கோல் விஸ்கோண்டி. அந்த பகுதியில் நடக்கும் புகழ் பெற்ற மார்சிக்லீஸ் நடத்திக்கொண்டிருக்கும் போர்டோரோசோ கோப்பை போட்டியில் அதவாது கடலில் நீந்தி வந்து பாஸ்தாவை வயிறு நிறைய சாப்பிடுவிட்டு சைக்கிளில் சென்று இலக்கை அடையும் போட்டி. கடந்த ஆறு முறையாக தொடர்ந்து எர்கோல் தான் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கின்றான். அவன் வெஸ்பாவில் வருகின்றான். அதை ஆச்சரியத்துடன் லுகாவும் ஆல்பர்டோவும் பார்க்கின்றனர். குழந்தைகள் பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றது, லுகாவும் பந்தை அடிக்கின்றான்.அந்த பந்து வெஸ்பாவில் பட்டு வெஸ்பா கீழேவிழுகின்றது. இதனால் அங்கே எர்கோலுக்கும் லுகா மற்றும் ஆல்பர்டோவிற்கும் சண்டை வருகின்றது. அப்போது அங்கே வரும் ஜூலியா சண்டையை தடுத்து நிறுத்தி லுகாவையும் ஆல்பர்டோவையும் காப்பாற்றுகின்றாள்.
கடந்த போட்டியில் ஜூலியா எர்கோலிடம் தோற்று போனவர்ள். அவள் ஜெனோவாவில் பள்ளியில் படிப்பவள். விடுமுறை நாட்களில் கைகளை இழந்த தந்தை மாசிமோ மார்கோவால்டோவிற்கு உதவியாக மீன் வியாபாரத்தில் இருப்பவள். மிதி வண்டியில் மீன்களை கொண்டு சென்று வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பவள். லுகாவும் ஆல்பார்டோ ஜூலியாவிடம் போட்டியில் வென்றால் வெஸ்பா கிடைக்குமா என்று கேட்கின்றார்கள். ஆனால் ஜூலியாவோ போட்டியில் வென்றால் வெஸ்பா கிடைக்காது பணம் கிடைக்கும் அதை வைத்து வெஸ்பாவை(ஸ்கூட்டர்) வாங்கலாம் என்று சொல்கின்றாள். மூன்று பேரும் சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் நுழைவுகட்டணம் செலுத்த அப்பாவிடம் பணம் வாங்க முடிவு செய்கின்றனர்.
ஆனால் மிகக்குறைந்த வருமானமே பெரும் ஜூலியா தந்தை மஸ்சிமோ பாசமிகுந்த மகளுக்கு பணம் புரட்ட நினைக்கின்றார். அவருக்கு லுகாவும் ஆல்பர்டோவும் எங்கெங்கு மீன்கள் அதிகம் இருக்கும் என்று சொல்கின்றனர். அதன் மூலம் வருவாய் பெரும் அவர் தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைக்கின்றார்.
மகன் லுகாவை காணமால் அவனை தேடி அவன் தாய் டேனீlலா பாகுரோ, மற்றும் தந்தை லோரன்சோ பாகுரோவும் போர்டோரோசோ நகருக்கு வருகின்றனர். தண்ணீர்பட்டால் உருமாறுவார்கள் என்ற அடிப்படையில் அங்கு இருக்கும் சிறுவர்கள் மீது அவர்களுக்கு தெரியாமல் தண்ணீர் ஊற்றி பார்க்கின்றனர்.
இடையில் ஆல்பர்டோ சொன்ன வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்து மீன் அல்ல அது நட்சத்திரம் என்ற அடிப்படையை தான் படித்த பாடங்களின் அடிப்படையில் ஜூலியா லுகாவிற்கு விளக்குகின்றாள். அதை பார்த்த லுகாவிற்கு தானும் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது. இது முடியாத காரியம் காரணம் லுகா ஒரு கடல் பூதம் என்பதை உணர்ந்த ஆல்பர்டோ அதை தடுக்க முனைகின்றான். இதனால் ஆல்பர்டோவிற்கும் லுகாவிற்கும் மனஸ்தாபம் ஏற்படுகின்றது. இருவரும் பிரிகின்றனர். ஜூலியாவிற்கும் லுகாவும் ஆல்பர்டோவும் கடல் பூதம் என்பது தெரியவருகின்றது. கடல் பூதம் என்பவர்கள் கெட்டவர்கள் அல்ல என்பதை உணர்கின்றாள் ஜூலியா ஆனால் கடல் பூதம் கெட்டவர்கள் என்ற எண்ணத்தில் அங்குள்ள மக்கள் இருப்பதால் அவர்களை விலகி செல்ல சொல்கின்றாள் ஜூலியா. ஆனால் லுகா தனியாக போட்டியில் கலந்து கொள்கின்றான். போட்டி தொடங்குகின்றது. நீரில் நீந்தி பாஸ்தாவை சாப்பிட்டுவிட்டு ஜூலியா முதலாவதாக செல்கின்றான். அவளை தொடர்ந்து லுகா செல்கின்றான். அவர்களை தொடர்ந்து எர்கோல் செல்கின்றான். அப்போது மழைவருகின்றது. மழையில் நனைந்தால் தன் உண்மை உருவம் தெரிந்துவிடும் என்று ஒதுக்கி நிற்கின்றான். அப்போது குடையுடன் ஆல்பர்டோ வந்து அவர்களுக்கு உதவ முன்வருகின்றான். ஆனால் குடையை எர்கோல் தள்ளிவிட ஆல்பர்டோ மழையில் நனைந்து கடல்பூதம் உருவம் பெருகின்றான். கடல் பூதத்தை கொல்வதாக சவால்விட்ட எர்கோல் ஆல்பர்டோவை கொல்ல முயல்கின்றான். மழையில் நனைந்தாலும் பரவாயில்லையென்று லுகா சைக்கிளில் வேகமாக சென்று ஆல்பர்ட்டோவை காப்பாற்றுகின்றான். அவனும் கடல் பூதமாக மாறுகின்றனர். சைக்கிளில் இருவரும் தப்பிப்பது மட்டுமில்லாமல் முதலாவது வந்து போட்டியில் வெல்கின்றனர்.
மக்கள் லுகாவையும் ஆல்பர்டோவையும் கொல்ல வரும் போது ஜூலியா தந்தை அவர்களை தடுத்து கடல்பூதம் கெட்டவர்கள் அல்ல என்று சொல்கின்றார். போட்டியை நடத்துபவரும் நடுவருமான மார்சிக்லீஸ் லுகா ஆல்பர்டோ மற்றும் ஜூலியா குழுவினர்தான் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கின்றனர். மக்களும் கடல்பூதத்தின் மீதிருந்த பயம் நீங்கி அவர்களை ஏற்றுக்கொள்கின்றனர். லிகாவின் தாய் தந்தை மற்றும் பாட்டியும் தங்கள் நிஜ உருவத்திற்கு மாறுகின்றனர். வெற்றி பெற்ற பணத்தில் பழைய வெஸ்பா ஸ்கூட்டரை வாங்குகின்றான் ஆல்பர்டோ.
லுகாவின் தந்தையும் தாயும் தரையிலேயே வாழ அணுமதிப்பதுடன் ஜூலியாவுடன் சென்று படிக்கவும் லுகாவிற்கு அணுமதி கொடுக்கின்றனர். ஆல்பர்டோவோ ஜூலியாவின் தந்தைக்கு உதவியாக அங்கே இருப்பதாக தெரிவிக்கின்றான்.
பாராட்டுக்குறியது:
ஆல்பர்டோ, லுகா மற்றும் ஜூலியா கதாப்பாத்திரங்கள் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடல்பூதத்திலிருந்து மனிதனாக மாறும் அணிமேஷன் காட்சிகளை அழகாக குழந்தைகள் கவரும் வகையில் கொடுத்திருக்கின்றனர்.
ஜூலியாவின் தந்தையாக வருபவர் பார்ப்பதற்கு முரடாகவும் குணத்தில் அருமையானவராகவும் இருக்கின்றார்.
லுகாவின் தாய் தந்தையின் நகைச்சு கலந்த நடிப்பு மிகவும் அருமை. ஆனால் அவர்கள் பகுதியை இன்னும் அதிகமாக கொடுத்திருந்தால் குழந்தைகளை இன்னும் கவர்ந்திருக்கும்.
குழந்தைகளை மகிழ்விக்கு ஒரு அணிமேஷன் திரைப்படம்.
நெருடலானவை:
இத்தாலியின் அடையாளம் வெஸ்பா ஸ்கூட்டர் என்பதில் மாற்று கருத்தில்லை, இந்த படம் வெஸ்பா ஸ்கூட்டர் விளம்பரப்படம் போல் உள்ளது.
கடல் மற்றும் கடலோர தரைப்பகுதியை மட்டுமே தெரிந்த ஆல்பர்டோவிற்கும் லுகாவிற்கும் வெஸ்பா ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும் என்ற ஆசை உருவாகுதாக திரைக்கதை. குழந்தகளுக்கான கதை என்பதால் இதில் உள்ள லாஜிக்கை பார்க்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் கதையை அமைத்துள்ளரோ தயாரிப்பாளர்கள்.
வெஸ்பா ஸ்கூட்டர் ஓட்ட வேண்டுமென்ற ஆர்வத்தைக்கூட ஏற்க்கொள்ளலாம். ஆனால் அதே வண்டியை உருவாக்குகின்றனர் என்ற அடிபப்டை தான் காதில் பெரிய பூ சூற்றல்.
தரைக்கு வந்ததும் நடக்கவே கற்றுக்கொள்ளும் லுகா எப்படி விரைவில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டான்
தொகுப்பு:
லுகா திரைப்படம் குழந்தைகளை மகிழ்விக்கும் சிறந்த அணிமேஷன் திரைப்படம். குழந்தைகளின் நட்பு சின்ன சின்ன கோபம் அவை சார்ந்த ஊடல் போன்றவைகள் குழந்தைகளை கவரும்.
கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தவர்:
லூகா பாகுரோ: ஜேக்கப் ட்ரெம்ப்ளே
ஆல்பர்டோ(லுகாவின் நண்பன்): ஜாக் டிலான் கிரேசர்
ஜூலியா (லுகா மற்றும் ஆல்பர்டோ தோழி): எம்மா பெர்மன்
டேனிலா(லுகாவின் தாய்):மாயா ருடால்ப்
லோரான்சோ (லுகாவின் தந்தை): ஜிம் காஃபிகன்
எர்கோல் (ஜூலியாவின் போட்டியாளர் டான்): சவேரியோ ரைமொண்டோ
மஸ்சிமோ(ஜூலியா தந்தை): மார்கோ பாரிசெல்லி
மார்சிக்லீஸ் (போர்டோரோசோ கோப்பை போட்டியை நடத்துபவர்): மெரினா மாசிரோனி
லுகா அணிமேஷன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பாகிகொண்டிருக்கின்றது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.