Join/Follow with Our Social Media Links

விஜய் பட நாயகியின் குத்தாட்டம்…

Article by : Admin on 21-06-2021

கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் “பீஸ்ட்”.. கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் எழுதி இயக்குகின்றார்.

இந்த படத்தில் நாயகியாக நடிப்பவர் பூஜா ஹெக்டே. மங்களூர், கார்நாடகத்தை பூர்விகமாக கொண்ட குடும்பத்தில் மும்பை செட்டில் ஆகி அங்கேயே இவரின் தாய் லாதா ஹெக்டே மற்றும் தந்தை மஞ்சுநாத் ஹெக்டே பிறந்து வளர்ந்தனர். பூஜா ஹெக்டேவும் மும்பையிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே படித்து வளர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு தோல்வியுற்ற இவர் 2010 ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் மிஸ் இந்தியா தெற்கு சிறந்த சிகைக்கான் விருதை பெற்றார்.

2012 ல் பூஜா ஹெக்டே அறிமுகமானது தமிழ்ப்படத்தில் தான். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த சூப்பர் ஹீரோ கதையான “முகமூடி” படத்தில் அவருக்கு ஜோடியாக நாசரின் மகள் சக்தியாக இவர் அறிமுகமானார். அந்த படம் தோல்விப்படமாக அமைந்ததால் அதன் பின் இவர் தமிழ் திரையுலகில் இடமின்றி இருந்தார். “ஒக்க லைலா கோசம்” என்ற தெலுங்கு படத்தில் விஜய் குமார் கொண்டா இயக்கத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நந்தனா என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹிந்தியில் “மொகஞ்சதாரா” படத்தில் மூலம் அறிமுகமானார். பின் “ஹவுஸ்ஃபுல் 4” என்ற படத்தில் நடித்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் “ராதே ஷ்யாம்” என்ற படத்தில் பாகுபலி பிரபாஸுடன் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்து கடைசியாக வெளிவந்தது “ஆலா வைகுந்தபுரமுலூ” இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் குட்டபொம்மா குட்டபொம்மா” பாடல் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலம்.

தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து பலபடங்கள் ஹிட்டடித்தது. இப்போது மீண்டும் “பீஸ்ட்” படம் மூலம் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

முன்னனி கதாநாயகிகள் பலரும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் ஒரேஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆடிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பூஜா ஹெக்டேவும் நடிகர் ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் உருவான “ரங்கஸ்தலம்” என்ற தெலுங்கு படத்தில் “ஜிகுலு ராணி” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.







Movie Gallery

  • news

    Kannika Ravi

  • news

    Kajal Agarwal

  • news

    Ananya

  • news

    Reshma Pasupuleti

  • news

    Nandita Swetha

  • news

    Pavithra Lakshmi

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Alia Bhatt

  • news

    Nivetha Thomas

  • news

    Surabhi

  • news

    Rakul Preet Singh

  • news

    Shalini

  • news

    Anupama Parameswaran

  • news

    Anandhi

  • news

    Sobhita Dhulipala

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.