Article by : Admin on 19-11-2021
நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெங்கட் போயனப்பள்ளி தயாரித்துள்ள தெலுங்கு படம் ஷ்யாம் சிங்கா ராய். ஜங்கா சத்யதேவ் கதையை எழுதியுள்ளார். ராகுல் சங்கிரித்யன் படத்தை இயக்கியுள்ளார், மிக்கி J மேயர் படத்திற்கு இசையமைத்துள்ளார், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தை தொகுத்துள்ளார்.
ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின், ஜிசு சென்குப்தா, முரளி சர்மா, ராகுல் ரவீந்திரன், அபினவ் கோமதம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஷ்யாம் சிங்கா ராய் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலும் வெளியாகவுள்ளது. இந்த படம் 24-12-2021 முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஷ்யாம் சிங்கா ராய் திரைப்பட டீசரை படக்குழு இன்று 18-11-2021 வெளியிட்டுள்ளது.
ஷ்யாம் சிங்கா ராய் திரைப்பட தமிழ் டீசர் உங்கள் பார்வைக்கு.