கட்டிங்க் வெட்டிங்க் ஸ்டீடுயோ சார்பில் எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரித்துள்ள படம் நாயே பேயே.. அறிமுக இயக்குனர் சக்திவாசன் எழுதி இயக்கியிருக்கின்றார். N.R.ரகுநாதன்,இசையமைத்துள்ளார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
குப்பைக்கதை மூலம் அறிமுகமான் நடண இயக்குனர் தினேஷ், அறிமுக நடிகை ஐஸ்வர்யா, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
கதை
“The Real Salute” என்ற குறும்படத்திற்காக மத்திய அரசின் சிறந்த இயக்குனர் விருது பெற்றவர் இயக்குனர் சக்தி வாசன். ஏராளமான குறும்பட இயக்குனர்கள் திரைப்படத்தை இயக்க வரும் போது நடப்பில் திரையுலகில் பிரபலமாக வெற்றிபெற்றிருக்கும் கதையின் அடிப்படையிலான கதையை தேர்ந்தெடுப்பார்கள். அந்த அடிப்படையில் பேய்கதை என்பது ஒரளவிற்கு வெற்றிக்கான அடிப்படையாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இயக்குனர் சக்தி வாசனும் அந்த அடிப்படையிலான ஒரு கதையை கையிலெடுத்திருப்பது ஒன்று புதிதல்ல.
கர்ணா (நடண இயக்குனர் திணேஷ்),, சுப்பு (ஆடுகளம் முருகதாஸ்), மதி, மற்றும் சுல்தான் நால்வரும் ஒன்றாக திருட்டு தொழிலை செய்துவருபவர்கள். அவர்கள் திருடுவது நகைகளையோ இல்லை பணத்தையோ அல்ல நாயை. அப்படி திருடி விற்ற ஒரு நாயை திருப்பிக்கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி கிடைக்கும் என்ற பேப்பர் விளம்பரத்தை பார்த்தி விற்ற இடத்திலேயே திருடி உரிமையாளரிடம் ஒப்படைக்கின்றனர். நாயை திருப்பி ஒப்படைக்கும் போதே ரூ.5 லட்சம் கொடுக்கின்றார். அவர் பெண்ணை கடத்தி பணம் கேட்டால் ரூ.5 கோடி வரை வாங்கலாமே என்று திட்டமிடுகின்றனர். பணக்காரரின் மகள் கரீணா (அறிமுக நாயகி ஐஸ்வர்யா) மருத்துவகல்லூரி மாணவி மட்டுமல்ல Don’t try அதாவது ஆபத்தான விளையாட்டு மற்றும் நடவடிக்கைகளை விளையாடக்கூடாது செய்யக்கூடாது என்று எச்சரிக்கும் விஷயங்களை தைரியாமக செய்பவர். அவளை கடத்த செல்லும் போது ஒரு ஆபத்தான விளையாட்டில் கரீணா இறந்து போகின்றார். கரீணாவை கடத்துவதாக எண்ணி பேயை கடத்துகின்றனர். அவர்களுக்குள் சபல எண்ணம் வருகின்றது. ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுபவர்களை நான் கட்டிப்பிடிப்பேன் என்று பேய் சொல்ல அந்த விளையாட்டில் கர்ணா வெற்றி பெருகின்றான். நண்பர்கள் அவர்கள் இருவரையும் தனியாக விட்டுவிட்டு கரீணா வீட்டுக்கு செல்கின்றனர். அங்கே அவர் பிணமாக கிடப்பதை பார்த்து கர்ணாவிடம் சொல்லுகின்றனர்.ஆனால் கரீணா இறப்பதற்கு முன்பே கர்ணாவை ஒரு தலையாக காதலித்துள்ளார், அவள் காதலின் ஆழத்தை உணர்ந்து கர்ணா பேயை காதலிக்கின்றார். அவர்கள் காதல் என்ன ஆனது என்பதே கதை..
பாரட்டுக்குறியது
பேய்ப்படம் என்றால் அதில் புதுமை செய்ய வேண்டும். ஒருகாலத்தில் பேய்ப்படம் என்றால் திகிலாக இருக்கும். பின் பேயின் மீது பரிதாபம் ஏற்படும் வகையில் கதைகள் மாறின, தற்போது பேய்ப்படம் என்றால் பயத்திலிருந்து நகைச்சுவையாக மாறியது. இதில் என்ன புதுமை செய்யலாம் ஏன் பேயை காதலிப்பது புதுமை தானே அதையே செய்யலாம் என்ற இயக்குனரின் எண்ணம் பிற பேய்ப்படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றது.
கலை இயக்குனர் நாய்திருடர்கள் வீட்டை நாய்கள் அடிப்படையில் அனைத்டு பொருள்களையும் காட்டியிருப்பது புதுமை. (ஏன் ஒரு காட்சியில் மட்டும் அதை செய்துவிட்டு மற்ற காட்சிகளில் கோட்டைவிட்டார் கலை இயக்குனர்)
Don’t try அடிப்படையை கையிலெடுத்து அதன் அடிப்படையிலான மரணத்தை சுட்டிகாட்டியிருப்பது வித்தியாமன திரைக்கதையோட்ட அடிப்படை.
அறிமுக நாயகி ஐஸ்வர்யா அழகுப்பதுமையாக நடித்துள்ளார். ஒரளவிற்கு திரையுலகிற்கு தேவையான அளவு அழகை வெளிக்காட்டியுள்ளார் தொடர்ந்து தமிழ்லில் வலம் வரவாய்ப்பிருக்கின்றது.
சுப்புவாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸின் பங்களிப்பு படத்தில் சிறப்பாக உள்ளது.
நெருடலாணவை”
முதலில் இது திகில் படமா? காமெடி படமா? காதல் படமா? எதற்குமே அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லை. திரைக்கதை அழுததமோ அல்லது வலுவோ இல்லாமல் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
பேய் படம் என்றால் லாஜிக் பார்க்ககூடாது தான்.. ஆனால் பேய் என்பதற்கான லாஜிக்கே இல்லாமல் இருக்கின்றது. இந்த லாஜிக் இல்லாமையை நியாயப்படுத்த ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குனர். ஆனால். லாஜிக் இல்லாமை ஒரு நியாப்படுத்தல் மூலம் அதை லாஜிக்காக மாற்றமுடியும் என்று எப்படி இயக்குனர் நினைத்தார்?
கொஞ்சம் சபலதனத்தை காட்ட சில அபத்த காட்சிகள் இருப்பதை போல் உணரமுடிகின்றது.
பேயுடன் காதல் என்பது புதுமைதான் ஆனால் அதை சொல்லவந்த விஷயத்தை அழுத்தமாக சொல்ல மறந்துவிட்டார் இயக்குனர்.
முதல் காட்சியில் நாயகனின் வீட்டை நாய்கள் அடிப்படையிலான பொருட்கள் வழியாக காட்டிய கலை இயக்குனர். அதன் பிறகு அதை தொடராமல் விட்டது ஏன்?
ஒரு குப்பைக்கதை படத்தில் சிறப்பாக நடித்திருந்த திணேஷ்ற்கு நடிப்பிற்கேற்ற அழுத்தமான கதாப்பாத்திர்ம் இல்லை. அவர் பேயை காதலிக்க அழுத்தமான காட்சிகள் இல்லை. கரீணா காதலிப்பதற்கு சில காட்சிகளை அமைத்துத்திருந்த இயக்குனர். வெறும் காமத்திற்காகவோ அல்லது கதாநாயகின் உணர்வுக்கு மதிப்பளித்தோ உடனடியாக ஒரு பேயை யாரும் காதலிக்க முன்வருவார்களா.? .
தொகுப்பு::
ஒரு கதையை வித்தியாசமாக சிந்திப்பது புதுமையல்ல. அதை எப்படி ரசிப்பதற்கேற்பே கொடுக்கவேண்டும் என்பதில் கவணம் செலுத்துவது முக்கியம். மொத்தத்தில் நாயே பேயே காதலா? திகிலா? காமெடியா? குழப்பத்தில்…
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
