மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் K.வீர குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் “சேசிங்” ஒரு கிரைம் திரில்லர் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வி வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். தாசி இசையமைக்கின்றார், E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு கிரேசன்-பாலசுப்ரமனியன் படத்தொகுப்பை செய்துள்ளார், பாலசரவணன், இமான் அண்ணாச்சியும் இதில் நடித்துள்ளனர்.
கதை:
மைக். ஜெரால்ட், படிகொடுத்தான் ஆகிய மூவரும் பெண்பித்தர்கள் மற்றும் போதை பொருள்கடத்தல் செய்கின்றனர். இவர்களின் வியாபார இடைத்தரகராக இருக்கின்றார் சோனா. அதிரா நேர்மையான போலிஸ் அதிகாரி. பெண்களை கடத்தி இச்சையை தீர்த்துக்கொள்ளும் காமவெறியர்கள் மற்றும் போதை பொருள்கள் கடத்தி விற்கும் வில்லன் கூட்டத்தை கருவருக்கும் கதைதான் சேஸிங்
பாராட்டுக்குறியவை:
போலிஸ் அதிகாரி அதிராவாக நடித்திருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கின்றார்.
வில்லன் படிகொடுத்தானாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் நன்றாக நடித்துள்ளார்.
மலேசியாவை தன் கேமராக்குள் அடக்கிய ஒளிப்பதிவாளார்.
நெருடலானவை:
ஒரு திரைப்பட ரசிகனாய் எதிர்மறை விமர்சணங்கள் செய்யும் போது மனதில் ஒரு வித மன வ்லி ஏற்படும். காரணம் ஒரு திரைப்படம் என்பது மேலோட்டமாக பார்த்தால் இரண்டு முதல் மூன்று மணி நேரம். ஆனால் அது உள்ள உழைப்பு என்பது மகத்துவம் வாய்ந்தது. அந்த அடிப்படையில் ஒரு படத்தின் எதிர்மறை விமர்சனம் பலர் உழைப்புகளை பொய்யாக்கும் அடிப்படையில் இருக்கும். ஆனால் ஒரு சராசரி விமர்சகனாய் இந்த படத்தில் பாரட்டுக்குறிதை விட விமர்சிக்க வேண்டியது ஏராளம். முதலில் ஒரு பட தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டிய அதில் முதன்மையானவர் இயக்குனர், அடுத்தது சரியான விஷயத்தை தேர்வு செய்து தயாரிக்காத தயாரிப்பாளர்.
முதலில் இது சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லர் திரைப்படமா? என்பதை இயக்குனர் தெளிவுபடுத்த வேண்டும். ஆம் என்றால் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் என்றால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவது முக்கியத்துவமான ஒன்று. சேஸிங் என்று பெயர்வைப்பது முக்கியமல்ல. ரசிகர்களை அடுத்தடுத்த காட்சிகளின் விறுவிறுப்பு அடிப்படையில் மனவோட்டத்தை சேஸ் செய்ய வைக்கவேண்டும்.
ஒரு போலிஸ் படம் என்றால் ஒரு வசனம் தேவை என்று இயக்குனர் முடிவு செய்துள்ளார் என்று நினைக்கின்றேன். அதாவது எனக்குறிய டீமை நான் தான் தேர்வு செய்ய வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்க சொல்லக்கூடாது என்று வசனம் வைத்துள்ளார். சிங்கம் படத்தை பல தடவை பார்த்து இருப்பார் இயக்குனர் என்று நினைக்கின்றேன். சரி ஒரு டீமை உருவாக்கியுள்ளார் அந்த டீம் ப்டத்தில் ஏற்ற பங்களிப்பு விறுவிறுப்பை உருவாக்குவதை மொக்கையாக பயன்படுத்தியிருக்கின்றார்.
இயக்குனரிடம் மற்றொரு கேள்வி நாயகி இன்ஸ்பெக்டரா?, IPS முடித்தவரா? போலிஸ் டிரைய்னிங்க் காலேஜீல் பணியில் இருப்பவரா? ஒரு கதாபாத்திர அமைப்பிலேயே ஏன் இத்தனை குழப்பம்.
சேஸிங் என்று பெயர்வைத்தால் டாப் ஆங்கிலில் தான் காட்டவேண்டும் என்று முடிவெடுத்தது சரி ஆனால் எதற்கெடுத்தாலும் டாப் ஆங்கிலில் படத்தை நகர்த்துவது ஏன்?
வில்லன்களுக்கு பெரிய அளவு பில்டப் கொடுத்தால் மட்டும் போதாது அதற்கேற்ப கட்சியில் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
சண்டை காட்சியில் கூட பெரிய அளவு பிரமாண்டம் இல்லை.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரிடம் ஒரு கேள்வி போலிஸ் அதிகாரி வேடம் என்று சொன்னவுடன் ஏற்றுகொள்வது நல்லது தான். காரணம் அது அவருக்கு கச்சிதமாக பொருந்து என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதேற்ற கதையின் வலிமை அவர் உணர்ந்து ஏற்றுக்கொண்டாரா? என்பது சந்தேகத்துகுறியது. ஏற்கனவே டேனி என்ற படத்தில் சறுக்கியது நினைவில் இருந்திருக்கின்றதா?
தயாரிப்பாளர் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு பெரிய பில்டப் கொடுத்துவிட்டு காட்சியமைப்பில் அழுத்தத்தை கொடுக்கவில்லை.
தொகுப்பு: ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்றால் எப்படியிருக்க வேண்டுமென்று சாஜிகைலாஷ் திரைப்படங்களை பார்த்தாவது தெரிந்து கொள்வது நல்லது. அதே போல் பெண் போலிஸ் அதிகாரி கதாபாத்திரம் எப்படி அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு விஜயசாந்தி திரைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.
மொத்தத்தில் சேஸிங் துரத்தமுடியாமல் தள்ளாட்டத்தில்..
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
