Join/Follow with Our Social Media Links

குருப் தமிழ் மொழிமாற்று பட விமர்சனம்

குருப் தமிழ் மொழிமாற்று பட விமர்சனம்


வேஃபர்ம் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் குருப். ஜித்தின் கே ஜோஸ் கதையை எழுதியுள்ளார். கே எஸ் அரவிந்த் மற்றும் டேனியல் சாயூஜ் நாயர் திரைக்கதையை அமைக்க ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார்.

குருப் படத்தில் துல்கர் சல்மான், கோபிகிருஷ்ணன், சுதாகர குருப் மற்றும் அலெக்ஸாண்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷோபிடா துலிபலா ஸ்ரதாம்மா கதாப்பாத்திரத்தில் சுதாகர குருப் காதலி மற்றும் மனைவியாக நடித்துள்ளார், இந்திரஜித் சுகுமாரன் துணை போலிஸ் சூப்பிரடண்டட் கிருஷ்ண தாஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டாம் சாக்கோ பாஸ்கர் பிள்ளையாக நடித்துள்ளார். சிவஜித் பத்மனாபன் சாபு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டொவினோ தாமஸ் சார்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அணுபமா சார்லி மனைவியாக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

மலையாளத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள படம் குருப். 1984 ல் நிகழ்ந்த சாக்கோ கொலைவழக்கு என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் குருப். காப்பீட்டு தொகைக்காக நடைபெற்ற அந்த கொலை வழக்கை பின்னனியாக கொண்டு உருவாகியுள்ளது குருப் படம்.

கதை.:

துணை போலிஸ் சூப்பிரடண்டட் கிருஷ்ண தாஸ் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். மற்றொரு போலிஸ் அதிகாரி கிருஷ்ண தாஸ் விசாரித்த குற்ற வழக்கான குருப் கோப்புகளை பார்க்கின்றார். அந்த கோப்புகளின் அடிப்படையில் கதை தொடங்குகின்றது.

1966 கோபிகிருஷ்ணன் கிராமத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் இளைஞன், பியூசி பெயிலானவர். இந்திய விமானப்படையில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே பணிபுரிய செல்கின்றான். அங்கேயும் ஜாலியாக இருக்கின்றான். அதிகாரிகளிடம் அடிக்கடி தண்டனை பெறுகின்றான். ஆனால் ஜாலியாக இருப்பதை விடவில்லை. அதற்காக மிலிடெரி கேண்டினில் இருக்கும் பொருட்களை வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்று பணமும் சம்பாதிக்கின்றான்.

அவனை பம்பாயில் இருக்கும் ராணுவ விமானப்படை பிரிவில் பணியாற்ற இடமாற்றம் செய்கின்றனர். அங்கேயும் ஜாலியாக இருக்கின்றான். அங்கே ஆயுத தளவாட பாதுகாப்பகத்தில் பொருட்கள் கணக்கு வழக்கை பார்க்கின்றான். அங்கே ரியாஸ் என்பவன் உதவியுடன் கிடங்கில் இருக்கும் பொருள்களை திருட்டுத்தனமாக விற்று பணம் சம்பாதிக்கின்றான். ஒரு கட்டத்தில் தான் மாட்டிகொள்வோம் என்ற பயத்தில் ஊருக்கு செல்லும் கோபிகிருஷ்ணன் அங்கே தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகின்றது.

இந்த தகவலை கோபிகிருஷ்ணன் உடன் பணிபுரியும் பீட்டர் ஸ்ரதாம்மாளிடம் சொல்கின்றான்.

பம்பாயில் நர்ஸாக பணிபுரிபவர் ஸ்ரதாம்மா. கோபிகிருஷ்ணன் பண்ணையில் வேலைசெய்த கூலியாள் மகள் தான் ஸ்ரதாம்மா. அவளை தீவிரமாக கோபிகிருஷ்ணன் காதலித்திருந்தான். கோபிகிருஷ்ணன் மரண செய்தி அவளை வெகுவாக பாதிக்கின்றது. அந்த பாதிப்பிலிருந்து மீளாத அவள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவளிடம் ஒரு கை ஒரு துண்டு சீட்டை கொடுத்துவிட்டு நகர்கின்றது. அந்த துண்டு சீட்டில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் அவளை ஒருவன் கட்டி பிடிக்கின்றான். அதிர்ச்சியில் அவள் பார்க்கும் போது கோபிகிருஷ்ணன் தான் ஆளே மாறி வந்திருப்பது தெரிந்து இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றாள். அங்கே குறிபார்க்க வரும் பெண் குறி சொல்ல முயலும் போது அவன் பேரை கேட்கின்றாள். அதற்கு அவன் சுதாகர குருப் என்று சொல்கிறான். என்ன நடந்தது என்று ஸ்ரதா கேட்க அவன் அது தேவையில்லாதது. இனி நாம் வாழப்போவதை பற்றி பேசலாம் என்று சொல்கிறான். சுதாகர குருப் மற்றும் ஸ்ரதாம்மா திருமணம் செய்து கொண்டு பெர்ஸியாவில் செட்டிலாகின்றனர். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர்.

அங்கே அரச குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கிறான் சுதாகர குருப். அரச குடும்பத்தின் நான்காவது இளவரசனுடன் மிக நெருங்கிய நட்பில் இருக்கிறான் சுதாகர குருப். அரச குடும்பத்தில் நான்காவது இளவரசனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. இளவரசருக்காக கச்சா எண்ணையை கள்ள சந்தையில் விற்று பணம் சம்பாதித்து கொடுக்கின்றார் குருப். அதற்கு கமிஷன் வாங்கிக்கொள்கின்றான். ஆனால் அந்த பணம் அவனுக்கு போதவில்லை.

தன் பெயரில் ரூபாய் 8 லட்சத்திற்கு பெர்சியாவில் காப்பீடு செய்கின்றான். தான் இறந்த பின் தன் மனைவிக்கு அந்த பணம் செல்லுமாறு காப்பீடு செய்கிறான். பெர்சியாவிலிருந்து சாபுவுடன் இந்தியா வருகின்றான் குருப் (வருடம் 1984).

சுதாகர குருப் உறவினரான பாஸ்கர் பிள்ளை, சாபு, மற்றும் டிரைவர் பொன்னையன். நால்வரும் சேர்ந்து சுதாகர குருப் பெயரில் இருக்கும் காப்பீட்டு பணம் ரூபாய் 8 லட்சத்தை பெற திட்டம் தீட்டுகின்றனர். சுதாகர குருப் இறந்தால் தான் அந்த பணம் கிடைக்கும் இல்லாவிட்டால் எப்படி என்று கேட்கின்றனர். கோபி கிருஷ்ணன் சுதாகர குருப்பாக மாறியது எப்படி சாத்தியமோ அப்படி சுதாகர குருப் இன்னொரு நபராக மாற முடியுமென்று சொல்கின்றான். சுதாகர குருப்பிற்கு இணையாக உருவ ஒற்றுமையுள்ள பிணத்தை தேடச்சொல்கின்றான் சுதாகர குருப். பாஸ்கர், சாபு மற்றும் பொன்னையன் பிணத்தை தேடுகின்றனர். ஒரு பிணம் கூட கிடைக்கவில்லை. பேசாமல் சுதாகர குருப்பையே கொலை செய்யலாமே என்று திட்டம் போடுகின்றனர். ஆளுக்கு தலா இரண்டு லட்சம் பிரித்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.

வயல்வெளியில் சுதாகர குருப் காரில் எரிந்த நிலையில் பிணமாக இருப்பதாக தகவல் கிடைத்து அதை விசாரிக்க அங்கே வருகின்றார் காவல்துறை அதிகாரி கிருஷ்ணதாஸ். காரில் பிணம் சேதமடைந்துள்ளதால் அங்கேயே போஸ்ட்மார்டம் செய்கின்றனர். அந்த காருக்கு அருகில் ஒரு கையுறை இருக்கின்றது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அந்த பிணம் முன்பே கொலை செய்யப்பட்டு காரில் போட்டு எரித்துள்ளதாக சொல்கின்றனர். சுதாகர குருப் உறவினர் பாஸ்கர் வீட்டில் இருந்த தகவல் தெரிந்து மாறுவேடத்தில் போலிஸ் மூலம் பாஸ்கர் வீட்டை கண்கானிக்க சொல்கின்றார் கிருஷ்ண தாஸ். ஆனால் சுதாகர குருப் இறந்ததை யாரும் பெரிதாக நினைக்கவில்லை. அனைவரும் சந்தோஷமாக இருப்பதாக மஃப்டியில் இருக்கும் காவல் துறையினர் சொல்கின்றனர்.

பாஸ்கர் வீட்டிற்கு விசாரணைக்கு செல்கின்றார் கிருஷ்ண தாஸ். அங்கே ஒரு இடத்தில் எதையோ எரித்த தடயத்தை பார்க்கின்றார். அதோடு பாஸ்கர் கையில் தீக்காயங்கள் இருப்பதையும் கவனிக்கிறார். பாஸ்கர் மீது சந்தேகம் வந்து அவனை விசாரணைக்கு கூட்டி சென்று விசாரிக்கிறார். போலிஸ் கெடுபிடி விசாரணையில் சுதாகர குருப் என்னை பெர்ஸியாவில் ஏமாற்றியதாகவும் அதற்கு பழிவாங்க நான் தான் அவரை கொன்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றான்.

கிருஷ்ண தாஸிற்கு அவன் சொல்வதில் திருப்தி வராத காரணத்தில் விபத்து / கொலை நடந்த நாளிலிருந்து அந்த பகுதியில் பதிவான ஆட்கள் காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை சேகரிக்கின்றார். அந்த பகுதியில் சார்லி என்ற ஃபிலிம் ரெப்ரசன்டேட்டிவ் காணாமல் போயிருப்பதை அறிந்து அங்கே விசாரிக்கின்றார். பிணத்திலிருந்து கைப்பற்றிய பொருளை வைத்து விசாரித்ததில் அவர் மனைவி இறந்தது தன் கணவன் சார்லி என்பதை உறுதி செய்கின்றாள்.

உண்மையை தெரிந்துகொள்ள பாஸ்கரை அடித்து துண்புறுத்தி கிருஷ்ண தாஸ் விசாரிக்கின்றார். போலிஸ் அடி தாங்காமல் பாஸ்கர் தாங்கள் பிணத்தை தேடி அழைந்த போது ஒரு பிணமும் கிடைக்கவில்லை. காரில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்துகள் இல்லாத காரணத்தால் சார்லி லிப்ட் கேட்டான். அவன் வண்டியில் ஏறியதும் அவனையே கொலை செய்து தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக பாஸ்கர் வாக்குமூலம் கொடுக்கின்றான். வண்டியில் ஏறிய சார்லிக்கு மதுவை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை எடுத்து கொண்டு பாஸ்கர் வீட்டிற்கு சென்று முகத்தை மட்டும் அங்கேயே அடையாளம் தெரியாமல் இருக்க சுதாகர குருப் முடிவு செய்து எரித்தான். பின் பிணத்தை காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கும் போது கையுறை கழன்று விழுந்ததால் தன் கையில் தீப்பிடித்து விட்டதையும் தன் வாக்குமூலம் வழியாக பாஸ்கர் தெரிவிக்கின்றான். கோர்ட் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கின்றது. தப்பி சென்ற சுதாகர குருப்பை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுதாகர குருப் பற்றி அனைத்து விவரங்களை சேகரிக்கின்றார் கிருஷ்ண தாஸ். இந்த கொலை நாடகம் காப்பீடு பணத்திற்காக இல்லை. வேறு ஒரு விஷயத்திற்காக தான் நடந்திருக்கும் என்று எண்ணுகிறார் கிருஷ்ண தாஸ்.

இந்தியா முழுவது அவன் புகைப்படத்தை ஒட்டி அவனை தேடுகின்றார். சுதாகர குருப் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றான். அதையும் கண்டுபிடித்து அவனை பின் தொடர்கின்றார் கிருஷ்ண தாஸ். கடைசியில் அவன் கப்பலில் தப்பி வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதாக தகவல் வர அவனை தேடி காவல்படையுடன் துறைமுகத்திற்கு செல்கின்றார் கிருஷ்ண தாஸ். ஆனால் சுதாகர குருப் காவல்துறையில் ஒருவராக வாகன ஓட்டியாக வேஷம் போட்டு தேடுவது போல் கப்பலுக்குள் சென்று தப்பிக்கின்றான். அங்கே தன் பெயரை அலெக்ஸாண்டர் என்று சொல்கின்றான்.

உண்மையில் இந்த நாடகத்தின் பின்னனி வெளிநாட்டு கம்பெனியிடமிருந்து 6 மில்லியன் டாலர் பணத்தை பெர்ஸியா இளவரசருக்கு தெரியாமல் ஏமாற்றுகின்றான். அதிலிருந்து தப்பிக்கவே இந்த நாடகம். இதையும் கண்டு பிடித்த கிருஷ்ண தாஸ் இளவரசனுக்கு தகவல் கொடுக்கின்றார். கப்பலைவிட்டு கீழே இறக்கும் அலெக்ஸாண்டரை யாரோ பேர் சொல்லி கூப்பிடுவது போல் இருக்க திரும்பி பார்க்கின்றான். அங்கே இவனால் ஏமாற்றபட்ட பெர்ஸியா இளவரசர் இருக்கின்றார்.

சார்லியின் மனைவியை சந்திக்கும் கிருஷ்ண தாஸ் உன் மகனை உன் கணவரை கொன்றவரை பழிவாங்க வளர்க்காதே. நானே அந்த காரியத்தை செய்துவிட்டதாக சொல்கின்றார் கிருஷ்ண தாஸ்.

கிருஷ்ண தாஸ் ஓய்வு பிரிவு உபச்சார விழா மூடிந்து செல்லும் கிருஷ்ண தாஸை இந்த வழக்கு விவரங்களை முழுமையாக படித்த போலிஸ் அதிகாரி டைரியை கிருஷ்ண தாஸிடம் கொடுத்துவிட்டு சல்யூட் அடிக்கின்றார்.

வெளிநாட்டில் ஒருவன் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கின்றான். ஒரு போட்டோவில் அலெக்ஸாண்டர் காரில் ஏறுவதாக இருக்கின்றது.

பாராட்டுக்குறியவை.:

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சுவராஸ்மாக கொடுக்க முயன்ற படக்குழுவினருக்கு பாராட்டு.

கோபிகிருஷ்ணன், சுதாகர குருப் மற்றும் அலெக்ஸாண்டர் என்ற மூன்று எதிர்மறை கதாப்பாத்திரத்தையும் வித்தியாசப்படுத்தி நடித்துள்ளார் துல்கர் சல்மான்.

ஸ்ரதாம்மாவாக நடித்துள்ள ஷோபிடா துலிபலா மிகப்பெரிய அளவிலான கதாப்பாத்திரமாக இல்லாமல் இருந்தாலும் வரும் கட்சிகளில் அருமையான நடித்துள்ளார்.

கிருஷ்ண தாஸாக நடித்துள்ள இந்திரஜித் சுகுமாரன் கதாநாயகனுக்கு இணையாக அருமையாக் நடித்துள்ளார்.

பாஸ்கர் பிள்ளையாக டாம் சாக்கோ அருமையாக நடித்துள்ளார்.

1984 முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்ட கதைகளத்தில் அதற்கேற்ப காட்சி பின்புலங்களை நுணுக்கமாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசை அருமை.

நெருடலானவை.:

முதல் பாதியில் குழப்பத்துடன் நகரும் திரைக்கதை இரண்டாம் பகுதியில் அந்த குழப்பத்தின் விடைகளை வெளிவருவது போன்று திரைக்கதையை அமைத்துள்ளனர். சில இடங்களில் அதை பொருத்திப்பார்ப்பதில் சற்று கடினத்தன்மை இருக்கின்றது.

போலிஸ் விசாரணை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். அது மேம்போக்காக இருக்கிறது.

இறுதி காட்சியில் அலெக்ஸாண்டர் கதாப்பாத்திரம் வெளிநாடுகளில் நடமாடுவது போன்ற காட்சி பக்கா சினிமாத்தனம்.

தொகுப்பு.:

குருப் திரைப்படம் சற்று மெதுவாக நகரும் திரைக்கதையாக தெரிந்தாலும் காட்சிகள் அனைத்தும் அருமை. சஸ்பென்ஸ் அதன் முடிச்சுகளை அவிழ்ப்பது போன்றவை அருமையான திரைக்கதை நகர்வு. உண்மை சினிமாவை ரசிக்க விரும்பும் ரசிகர்களின் மனதை கவரும்.

Movie Gallery

  • review

    Athulya Ravi

  • review

    Shruti Haasan

  • review

    Mehreen Pirzada

  • review

    Meghashree

  • review

    Parvati Nair

  • review

    Vidya Pradeep

  • review

    Madhu Shalini

  • review

    Pranitha Subhash

  • review

    Kangana Ranaut

  • review

    Pooja Umashankar

  • review

    Poorna

  • review

    Amyra Dastur

  • review

    Anukreethy Vas

  • review

    Sujitha

  • review

    Priyanka Arul Mohan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.