Join/Follow with Our Social Media Links

Cindrella

சிண்ட்ரெல்லா திரைப்பட விமர்சனம்


SSi புரொடெக்ஷ்ன்ஸ் சார்பில் S.சுப்பையா தயாரித்துள்ள படம் சிண்ட்ரெல்லா. SJ சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த வினு வெங்கடேஷ் கதை எழுதி இயக்குனராக இந்த படத்தில் அறிமுகமாகின்றார். அஸ்வாமித்ரா இசையமைத்துள்ளார், ராமி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தை தொகுத்துள்ளார்.

கதாநாயகியை முக்கியத்துவப்படுத்தி உருவாகியுள்ள இந்த கதையில் ராய் லக்ஷ்மி  நாயகியக முதன்மை பாத்திரத்திலும், துளசி  மற்றும் அகிரா  என மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக உணர முடிகின்றது. இவருடன் சாக்ஷி அகர்வால்  ரம்யா  கதாப்பாத்திரத்திலும், ரோபோ சங்கர் குரு  கதாப்பாத்திரத்திலும், அபிலாஷ் கயாம்பு  கதாப்பாத்திரத்திலும்,  கல்லூரி வினோத், அன்புதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு:

சிண்ட்ரெல்லா கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த சிண்ட்ரெல்லாவை பணக்காரர்கள் கொலை செய்கின்றனர். அவர் பேயாக வந்து பழிவாங்குவதே கதைக்கரு.

கதை:

காவல்துறை அதிகாரி ஜான் காட்டில் ஜீப்பில் சென்று கொண்டிருக்கின்றார். அப்போது ஏதோ அமானுஷ்ய சக்தியால் தாக்கப்பட்டு இறந்து போகின்றார். அந்த பிணத்தின் தலை தூண்டிக்கப்பட்டு வெறும் முண்டம் மட்டுமே இருக்கின்றது. தலையை காணவில்லை. அதை துப்பறிய வரும் காவல்துறை அதிகாரி ஒரு சைக்கோ மட்டுமல்ல அமைச்சரின் மருகனும் கூட. மோப்ப நாய் அருகில் இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுஸிற்கு செல்கின்றது. அங்கே இருக்கும் அகிராவை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றார். அகிராவை துண்புறுத்தி கொலைப்பழியை அவள் மீது சுமத்த நினைக்கின்றார். ஆனால் அவள் தவறு செய்யவில்லை என்பதை ஆய்வுகள் உணர்த்துகின்றன.

சென்னையை சேர்ந்த அகிரா சிறப்பு சப்தங்களை ஒளிப்பதிவு செய்பவர். மிகவும் மார்டனாக வளர்ந்தவர். அகிராவுடன் அவள் தோழி, கல்லூரி வினோத், அன்பு தாசன் அனைவரும் இணைந்து குயிலின் சப்தத்தை ஒளிப்பதிவு செய்ய காட்டிற்கு வருகின்றனர். அங்கே இருக்கும் கெஸ்ட் அவுஸில் நண்பர்களுடன் தங்கியிருக்கின்றார்கள். ஜாலியான எண்ணம் கொண்ட இவர்கள் மது, சிகரெட் சகிதமாக இருக்கும் உயர்தட்டு வாழ்கை வாழ்பவர் என்று தெரியவருகின்றது. அங்கே அகிராவிற்கு சில அமாணுஷ்ய பயமுறுத்தல்கள் ஏற்படுகின்றது. ஆனால் அதைப்பற்றி அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றாள். அப்போது பஜாருக்கு செல்லும் அவள் ஒரு சிண்ட்ரெல்லா உடையை பார்த்து அதை விலைக்கு வாங்குகின்றாள். தனது பிறந்த நாளுக்கு அந்த உடையை அணிந்து பிறந்த நாளை கொண்டாடுகின்றாள்.

ஒரு நாள் சிண்ட்ரெல்லா உடையில் பைக்கில் ஒரு காரை அகிரா பின் தொடர்வதை அவளது நண்பர்கள் பார்க்கின்றனர். அவர்களை பின் தொடர முனைகின்றனர். ஆனால் பின் தொடர முடியாமல் நின்றுவிடுகின்றனர்.

ரம்யா மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். தன் தாயுடன் வசித்து வருகின்றார். அவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள். ரம்யாவிற்கு நடண பயிற்சி கொடுப்பவர் ராபின். ராபின் வெளிநாட்டை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரன். ரம்யாவிற்கு அவன் மீது காதல் என்று சொல்வதைவிட வெறித்தனமான காதல். வேறுயாரவது அவன் கூட பேசினாலோ அல்லது பழகினாலோ பிடிக்காத ஒரு சைக்கோவாக இருக்கின்றார்.

துளசி தன் குடிகார தந்தையால் தாயை இழந்து ரம்யா வீட்டில் சிறுவயதிலேயே விற்று விட்டார். துளசி துடிப்பான பெண் அவளுக்கு நண்பன் என்றால் பக்கத்து வீட்டு பையன் அபிலாஷ் தான். அவள் அழக்காக நடணமாடுகின்றாள். ரம்யா வீட்டிற்கு வரும் ராபின் அதைப்பார்த்து பிரமித்து போகின்றான். துளசிக்கு சிண்ட்ரெல்லா கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கின்றது என்று சொல்வதைவிட தன்னையே சிண்ட்ரெல்லாவாகவே நினைத்துக்கொண்டிருப்பவள். ஒரு நாள் கடைவீதிக்கு செல்லும் துளசி அங்கே கடையில் இருக்கும் சிண்ட்ரெல்லா உடையை பார்க்கின்றாள். அதன் விலை ரூ.7000/- என்று கடைக்காரர் சொல்கின்றார். மனமுடைந்து போகும் துளசி எப்படியாவது அந்த உடையை வாங்க வேண்டுமென்று முடிவு செய்து கடுமையாக உழைக்கின்றாள். பூ  விற்பது, துணி என்று விற்று சிறுக சிறுக பணம் சேர்க்கின்றாள். பக்கத்து வீட்டு அபிலாஷ் உதவியால் ஆடை வடிவமைப்பாளர் குருவை சென்று பார்க்கின்றாள். ஆனால் அவரோ சிண்ட்ரெல்லா உடைக்கு பதில் வேறு உடையை தைக்கின்றார். கையிலிருந்த பணம் கரைந்து போகின்றது. இதனால் மனமுடைந்து துளசியும் அபிலாஷ் இருவரும் ஒரு சர்ச் சென்று வேண்டுகின்றனர். அப்போது ஒரு பெண் தன் மகனை காப்பாற்ற அறியவகை ரத்தம் தேவைப்படுவதாகவும் அதற்காக சிறப்பு பிரார்த்தனை செய்ய சர்ச் ஃபாதரிடம் சொல்கின்றாள். இதை கேட்ட துளசி தன் ரத்தத்தை கொடுக்கின்றாள். அவள் அதிகம் பணம் கொடுக்க அவள் சிண்ட்ரெல்லா உடைக்கு தேவையான் ரூ.7000/- மட்டுமே வாங்கிகொண்டு சிண்ட்ரெல்லா உடையை விலைக்கு வாங்குகின்றாள்.

ரம்யாவின் பிறந்த நாளான்று அவள் திருமணத்தைப்பற்றி அறிவிக்கவிருக்கும் சூழலில் ராபின் சிண்ட்ரெல்லா உடையில் வரும் துளசியை பார்த்து மெய்மறந்து போகின்றான். திருமண நிச்சயதார்த்தை மறந்து துளசியை பார்த்து மெய்மறந்து அவள் கையில் ஆங்கில முறைப்படி முத்தம் கொடுக்கின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகும் ரம்யாவும் அவள் தாயும் துளசியை கொடூரமாக சித்ரவதை செய்து கொள்கின்றனர்.

ஆவியாக இருக்கும் சிண்ட்ரெல்லா ரம்யாவை பயமுறித்தி, சித்ரவதை செய்து கொல்கின்றாள். இதனால் ரம்யாவின் தாய் உடைந்து போகின்றாள். எப்படி தன் மகள் இறந்தாள் என்ற குழப்பத்தில் இருக்கின்றாள்.

தன் மகள் கொலையை பற்றி விசாரிக்க காவல் நிலையம் வரும் ரம்யாவின் தாய். சிறையிலிருந்து குற்றமற்றவர் என்று வெளிவரும் அகிராவை பார்த்து மிரண்டு போகின்றாள். காரணம் அவளால் கொலை செய்யப்பட்ட துளசியும் அகிராவும் ஒரே மாதிரி இருப்பதால். பீட்டர் என்பர் மூலம் ஒரு மந்திரவாதியை சந்திக்கின்றாள் ரம்யாவின் தாய்.

இதற்கிடையில் அகிரா வாங்கிய சிண்ட்ரெல்லா உடையால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று அவளது நண்பர்கள் அந்த உடையை தூக்கியெறிகின்றனர். கெஸ்ட் ஹவுசை காலி செய்துவிட்டு நண்பர்கள் அகிராவுடன் சென்னைக்கு திரும்புகின்றனர். அந்த சிண்ட்ரெல்லா உடை காற்றில் பறந்து வருகின்றது. அகிரா காரை நிறுத்த சொல்கின்றாள்.

மந்திரவாதி பூஜை செய்யும் போது அங்கே சிண்ட்ரெல்லா(துளசி) ஆவி புகுந்த அகிரா வருகின்றாள். அவளை கட்டுபடுத்திய மத்திரவாதி அவளது உடையையும் அவளையும் அழிக்க முற்படும் போது அகிரா உடலில் இருப்பது ஒரு ஆவி மட்டுமல்ல இரண்டு ஆவிகள் என்று அறிகின்றான். ஒன்று துளசி மற்றொன்று ரக்ஷ்னா.

ரக்ஷ்னா ஒரு போலிஸ் அதிகாரி, ரக்ஷ்னாவின் கணவர் ஜானும் ஒரு போலிஸ் அதிகாரி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். ரக்ஷ்னா கர்பமாகவும் இருக்கின்றாள். ரக்ஷ்னா ரம்யா மற்றும் அவள் தாயின் கடத்தலை கண்டு பிடித்து தன் கணவன் ஜானுக்கு போன் செய்து கடத்தல்காரர்களை கைது செய்ய வரச்சொல்கின்றாள். ஆனால் ஜானும் கடத்தல்காரர்களுடன் இணைந்து தன் மனைவியை கர்பிணியென்றும்பாராமல் கொலை செய்கின்றான்.

துளசி மற்றும் ரக்ஷ்னா ஆவி இணைந்து மந்திரவாதியையும் ரம்யாவின் தாயையும் கொலை செய்கின்றன.

பாராட்டுக்குறியது:

இயக்குனரின் முதல் படம் பல கதாநாயகிகளை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து கடைசியாக ராய் லக்ஷ்மி  மட்டுமே ஒப்புக்கொண்டதால் அவரை நடிக்க வைத்திருக்கின்றார். அவரும் அகிரா மற்றும் துளசி என்ற இரண்டு கதாப்பாத்திரதிலும் முற்றிலும் வித்யாசபடுத்தி நடித்துள்ளார்.

காமெடி பேய்படங்களாக வந்து கொண்டிருக்கும் சூழலில் திரில்லர் பேய் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனரின் முயற்சி பாராட்டுக்குறியது

சிண்ட்ரெல்லா என்ற ஃபேண்டஸி கதையை அடிப்படையாக வைத்து ஒரு திரில்லர் கதையாக மாற்றியுள்ளனர்.

ரம்யாவாக நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால்  வில்லத்தனத்திலும், பயத்திலும் அருமையாக நடித்திருக்கின்றார்.

அஸ்வாமித்ரா இசையில் திரில்லர் அடிப்படைக்கேற்ப உள்ளது.

இரண்டு காட்சிகளில்  மட்டுமே வந்தாலும் ரோபோ சங்கர் கதாப்பாத்திரம் ரசிக்கும்படியுள்ளது.

பேய்கதைக்குறிய சிறப்பு VFX கொஞ்சம் மிரட்ட வைக்கின்றது.

இறுதிகாட்சியில் இரட்டை பேய்களை காண்பித்து டிவிஸ்ட் வைத்துள்ளது வித்தியாசம்

நெருடலானவை:

அழகான கதைக்களத்தை எடுத்துள்ள இயக்குனர் திரைக்கதையில் அழுத்தத்தை இன்னும் கொடுத்திருக்கலாம்.

படோடாபா, பணக்கார மார்டன் வாழ்கையை காட்டுவதற்காக அனைத்து கதாப்பாத்திரங்களும் தண்ணி அடிப்படிப்பதும் புகைபிடிப்பதையுமே அதிகம் காட்சிபடுத்தியிருப்பது சற்று மிகையாக தெரிகின்றது.

காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தை மிரட்டலாக காட்டிவிட்டு காட்சியமைப்பில் டம்மி செய்திருப்பது ஏனோ தெரியவில்லை.

அகிரா காதாப்பாத்திரம் மூலம் சிண்ட்ரெல்லா பழிவாங்குவதாக படத்தின் திரைக்கதையில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அகிரா சிறையில் இருக்கும் போது ரம்யா கொலை செய்யப்படுகின்றார். அப்படியானால் ஆவி தனியாக இதை செய்கின்றது என்றால் அகிரா கதாப்பாத்திரத்திற்கும் சிண்ட்ரெல்லா(துளசி) கதாப்பாத்திரத்திற்கு தொடர்பு இல்லை என்ற அடிப்படையில் அகிரா கதாப்பாத்திரம் தேவையில்லாத ஒன்று தானே. இயக்குனரின் இந்த மிகப்பெரிய ஒட்டையை கவணிக்க தவறியது ஏன்? அகிரா மற்றும் சிண்ட்ரெல்லா பாத்திரத்தின் இணைப்பு சரிவர சொல்லதா காரணத்தால் படமே மொக்கையாக தெரிகின்றது.

இரண்டாம் பகுதியில் சிண்ட்ரெல்லா கதாப்பாத்திரப்படைப்பை இன்னும் ஃபேண்டஸியாக கொடுத்திருக்கலாம்.

பேய் சில இடங்களில் பயமுறுத்தலை உருவாக்கினாலும் திரைக்கதை ஒட்டாத காரணத்தால் அதை முழுமையாக உணரமுடியாமல் போகின்றது.

தொகுப்பு:

மிரட்டலாக இருக்கவேண்டிய சிண்ட்ரெல்லா திரைப்படம் கொஞ்சம் ஃபேண்டஸி அடிப்படையில் மட்டும் திருப்தியடைய வைக்கின்றது. ராய் லக்ஷ்மி  மற்றும் சாக்ஷி அகர்வால்  நடிப்பு மட்டுமே மனதில் நிற்கின்றது.

Movie Gallery

 • review

  Arundhati

 • review

  Keerthi Pandian

 • review

  Meenakshi Dixit

 • review

  Taapsee Pannu

 • review

  Dimple Hayathi

 • review

  Shirin Kanchwala

 • review

  Kajal Agarwal

 • review

  Vega Tamotia

 • review

  Meera Mithun

 • review

  Raai Laxmi

 • review

  Trisha Krishnan

 • review

  Taapsee Pannu

 • review

  Priyanka Chopra

 • review

  Samantha

 • review

  Tanya Ravichandran