Join/Follow with Our Social Media Links

Raame Aandalum Raavane Aandalum

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்


2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ள திரைப்படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம். அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். க்ரிஷ் இசையமைத்துள்ளார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவ சரவணன் படத்தொகுப்பு, ராக் பிரபு சண்டை பயிற்சி.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் மித்துன் மாணிக்கம் (குன்னிமுத்து), ரம்யா பாண்டியன் (வீராயி), வாணி போஜன் (நர்மதா), வடிவேல் முருகன் (மண்தின்னி) மற்றும் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர்.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் 24.09.2021 முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

கதை கரு:

மக்கள் மனநிலை இன்று ஆட்சிமுறைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. வாக்களிப்பது மட்டுமே தங்கள் வேலை மற்றவைகளைப்பற்றி கவலையில்லை. அதாவது இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற அடிப்படையை வைத்து உருக்கியுள்ள கதை. மாட்டை வைத்து ஒரு அரசியல் படத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு நிமிடம் மாட்டு அரசியல் என்றாலே வேறோரு கோணத்திற்கு மனம் செல்லும் இல்லை அந்த அடிப்படையில்லை இது வேறு அடிப்படை.

கதை:

குன்னிமுத்து காவல் நிலையத்தில் தன் மகன் வெள்ளையன் மற்றும் கருப்பன் இருவரையும் காணவில்லை என்று புகார் கொடுக்க செல்கின்றான். ஆனால் புகாரை வாங்க மறுக்கின்றார். காவல் துறை அதிகாரி. வெள்ளையன் மற்றும் கருப்பன் என்ற இரு மாடுகளையும் தன் மகனை போல் வளர்த்ததால் அவைகளை மகன் என்று சொல்கின்றான். மாடுகளை காணவில்லை என்ற புகாரை வாங்க மறுக்கின்றார் காவல் நிலைய அதிகாரி. ஆனால் அதே நேரம் அரசியல்வாதி மனைவி ஆசையாய் வளர்க்கும் நாய் காணவில்லை என்ற புகாரை எடுத்துக்கொள்கின்றார்.

குன்னிமுத்துவின் ஊர் பூச்சேரி, குன்னிமுத்துவின் மனைவி வீராயி. நான்காண்டுகளுக்கு முன் குன்னிமுத்துவின் நண்பன் மண்தின்னியுடன் தன் பாட்டியை மஞ்சள் காமாலை வைத்தியத்திற்காக மருத்துவரை பார்க்க செல்கின்றான். அங்கே ஒரு குடிகாரனுடன் ஏற்படும் தகராறு காரணமாக அடியாட்களுடன் குடிகாரன் விரட்டி வர வீராயி வீட்டில் ஒளிந்து கொள்கின்றனர், அவர்களை களவானிகள் என்று வீராயி நினைக்கும் போது அங்கே வந்த மருத்துவர் தன் மகள் வீராயியிடம் இவர்கள் மருந்து வாங்க வந்ததையும் குடிகாரர்களிடம் ஏற்பட்ட தகராறையும் சொல்லி அவர்கள் செல்லும் வரை இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கின்றார், அப்போது தான் வீராயி தந்தை கலப்பு திருமணம் செய்த காரணத்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதை தெரிந்த பாட்டி குன்னிமுத்துக்கு வீராயியை திருமணம் செய்ய கேட்டு நிச்சயக்கின்றனர். குன்னிமுத்து வீராயிக்கு திருமண சீராக மருத்துவர் வீராயி ஆசையுடன் வளர்க்கும் தாயை இழந்த காளை கன்றுக்குட்டிகளான வெள்ளையன் மற்றும் கருப்பனை கொடுக்கின்றார்,

வெள்ளையன் மற்றும் கருப்பனை தன் குழந்தைகளுக்கு நிகராக பாசத்தை கொட்டி வளர்க்கின்றனர். குன்னிமுத்து தன் நண்பன் மண்தின்னியுடன் தேடி அலைகின்றான்,

ஒரு நாள் சென்னையிலிருந்து நீயூஸ் 10 தொலைக்காட்சி நிருபர் நர்மதா பூச்சேரி கிரமாத்தில் பேட்டியெடுக்க வருகின்றாள். மண்தின்னி அவர்களுக்கு உதவியாக செல்கின்றான். அப்போது மாட்டு சந்தையில் தன் மாடு இருக்கின்றதா என்று பார்க்க சென்ற குன்னிமுத்துவை மாட்டு திருடன் என்று எண்ணி கட்டி வைத்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர் சந்தையை சேர்ந்தவர்கள். அந்த வழியாக நர்மதாவுடன் வந்த மண்தின்னி குன்னிமுத்துவை நர்மதாவின் உதவியுடன் காப்பாற்றுகின்றான்.

குன்னிமுத்துவை நர்மதா எங்கேயோ இவரை பார்த்தது போல் இருக்கின்றது என்று சொல்கின்றாள். அப்போது மண்தின்னி கால்நடைத்துறை அமைச்சர் மதுக்கூர் மணிவேலன் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தீர்களா என்று கேட்கின்றான். ஆம் என்கின்றாள் நர்மதா.

மக்களுக்கு தன் பிறந்த் நாளை முன்னிட்டு கால்நடைகளை பரிசளிக்க மந்திரிக்கு வாடகைக்கு தன் நண்பன் குன்னிமுத்து ஆலோசனை பேரில் இரண்டு மாடுகளையும் கொடுக்கின்றான். அப்போது மாடுகள் மேடையில் ஏற தயங்கும் போது கட்சிக்காரர்கள் அந்த மாட்டை அடித்து துண்புறுத்துகின்றனர். இதை கண்டு பொறுக்கமுடியாமல் கட்சிகாரகள் மற்றும் அமைச்சரை கீழே தள்ளிவிட்டு தன் மாட்டை ஓட்டி செல்கின்றான். அதற்கு அடுத்த நாள் தான் அவன் மாடுகள் காணாமல் போனது. அப்போது நர்மதா உன் மாடுகள் காணாமல் போகவில்லை அமைச்சரின் ஆட்கள் தான் கடத்தி சென்றுள்ளதாக சொல்கின்றாள்.

சேனலுக்கு திரும்பி செல்லும் வழியில் ஒரு பெரியவர் நிலத்தை தோண்டிக்கொண்டிருப்பதை பார்க்கும் நர்மதா அதைப்பற்றி ஏன் தனியாக இங்கே தோண்டிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கின்றார். அதற்கு அவர் இந்த குளம் நீண்ட நாட்களாலாக பராமரிப்பில்லாமல் இருக்கின்றது. இதை தூர்வாரி தண்ணீர் சேமித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அதனால் நான் தனியாகவே என்னால் முடிந்தவரை இதை செய்கின்றேன் என்று சொல்கின்றார்.

சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றது நர்மதா வேலை செய்யும் தொலைக்காட்சி. இந்த பூச்சேரி குன்னிமுத்து மாடுகள் விவகாரத்தை கையிலெடுத்து பெரிதுபடுத்துகின்றது சேணல்.

தமிழகம் முழுவது பரபரப்பாக பேசப்பட்டது இந்த விவகாரம். உண்மையில் அமைச்சர் அவமானபடுத்தப்பட்டதால் கட்சி தொண்டர்கள் குடிபோதையில் குன்னிமுத்து மாடுகளை திருடி விற்றுவிட்டதாக சொல்கின்றனர். குடிபோதையில் விற்றதால் யாருடம் விற்றார்கள் என்று தெரியவில்லை என்கின்றனர். எதிர்கட்சிகளையும் மீடியாவையும் சமாளிக்க வேறு வழியில்லாமல் இரண்டு மாடுகளை வாங்கி குன்னிமுத்து வீராயியிடம் கொடுக்கின்றனர். அமைச்சரிடம் வீராயி உங்கள் குழந்தை காணாமல் போனால் பக்கத்து தெரு குழந்தையை உங்கள் குழந்தை என்று சொல்லி கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா? என்று கேட்டு வாங்க மறுக்கின்றாள்.

மீடியாவில் குன்னிமுத்து விவகாரத்தில் பார்வையாளர்களின் தாக்கம் குறைந்த காரணத்தால் அந்த செய்தியை கைவிட்டு வேறு செய்திக்கு மாறச்சொல்கின்றது நிர்வாகம்.

அதே நேரம் அந்த குளத்தை தனியாக வெட்டிகொண்டிருந்த பெரியவர் இறந்து விடுகின்றார். அப்போது தான் அந்த கிராமத்திற்கு கிடைக்க வேண்டிய பல திட்டங்கள் முடிக்கப்படாமலேயே முடிக்கப்பட்டதாக சொல்லி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கொள்ளையடித்திருப்பதை கண்டுபிடிக்கின்றாள். தான் வேலை செய்த நீயூஸ் 10 தொலை காட்சியிலிருந்து வெளியில் வந்து நமது உரிமை என்ற யூடியூப் சேணலை நடத்தி அதன் மூலம் ஊழல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை உருவாக்குகின்றாள். பூச்சேரி கிராமத்திலிருந்து சென்னையில் குடியிருக்கும் மொஹமது அஸ்லாம் மூலம் வழக்குபதிந்து அந்த கிராமத்திற்கான தேவைகளை பெற்று கொடுக்கின்றாள் நர்மதா.

மதுரையில் மாட்டுக்கறிக்கடைகளிலெல்லாம் தன் மாட்டை தேடி சலித்துப்போன குன்னிமுத்து. குமிளி செல்லும் ஒரு லாரி மூலம் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறான். அப்போது மாடுகளை கேராளாவிற்கு ஏற்றி செல்லும் லாரி பழுதாகி நிற்கும் போது தன் மாடுகளை பார்த்து சண்டைபோட்டு தன் மாட்டை ஒட்டிக்கொண்டு ஊருக்கு திரும்பி வருகின்றான். அப்போது ஊரில் ஏராளமான அடிப்படை வசதிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு அடிப்படை வெள்ளையன் மற்றும் கருப்பன் தான் காரணம் என்று மக்கள் சொல்கின்றனர். வெள்ளையனும் கருப்பனும் திரும்பி வந்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வழிக்கின்றனர்.குன்னிமுத்தும் வீராயி, பாட்டி மற்றும் மண்தின்னி.

பாராட்டுக்குரியது:

நடப்பு அரசியல், சம்பவங்கள், மற்றும் சமகால நிகழ்வுகளை தொகுத்து இயக்கியிருப்பது, அருமை. இன்றைய தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அரசியல் நையாண்டி செய்துள்ளார் இயக்குனர்.

வீராயியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் வரும் காட்சிகளில் காட்சிக்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். அதே போல் குன்னிமுத்துவாக நடித்திருக்கும் மித்துன் மாணிக்கமும் காட்சிகேற்ற நடிப்படை கொடுத்துள்ளார்கள்.

நடப்பு அரசியலில் விவசாயசங்க தலைவர், வங்கி வராக்கடண், பெட்ரோல் விலைவாசி உயர்வு, தமிழ் இணம் என்று பேசிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர், கார்பரேட் அரசியல், அரசியல்வாதிகளின் இலவச மாய்மாலம், பசுமாடு அரசியல் போன்ற விஷயங்களை அங்கங்கே தெளித்துவிட்டுள்ளது ரசிக்கும் படி இருக்கின்றது.

மண்தின்னியாக நடித்தவர் நடிப்பு படத்திற்கு மெறுகேற்றுகின்றது

நர்மதாவாக நடித்த வாணி போஜனுக்கு நடிப்பிற்கேற்ற கதாப்பாத்திரம் இல்லையென்றாலும் கொடுத்த கதாபாத்திற்கு பொறுந்தியுள்ளார்..

நெருடலானவை:

இயக்குனர் எதையோ சொல்ல நினைத்து எப்படியோ ஆரம்பித்து அழகாகத்தான் திரைக்கதையை கொண்டு சென்றார். ஆனால் அவர் சொல்ல வந்த அடிப்படையிலிருந்து விலகியதால் அருமையான திரைக்கதையை தேவையில்லாமால் திசை திருப்பி சொல்ல வந்ததை சொல்லிவிட்டு அவசர அவசரமாக படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தால் விறுவிறுப்பில்லாமல் சப்பென்று ஆரம்பித்த புள்ளியில் கதையை முடிச்சு போட்டு தலைப்புக்கேற்ற கதையை சொல்லிவிட்டதாக நினைத்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது..

நடிக்க வாய்ப்பு அதிகமுள்ள நாயகன் மற்றும் நாயகி பாத்திரங்களை ஏதோ கௌரவ தோற்றத்தில் நடிக்கும் நடிகர்களின் காட்சியமைப்பு அளவிற்கு சுருக்கி வீணடித்திருப்பது தெளிவாக தெரிகின்றது.

மாட்டிற்கும் குன்னிமுத்து வீராயி போன்றோருக்கு இருக்கும் பாசப்பிணைப்பில் அழுத்தம் குறைவாக இருப்பதை போல் உணர முடிகின்றது.

அரசியல் விஷயங்களை அள்ளி தெளித்த போது இருந்த விறுவிறுப்பு தலைப்புகேற்ப கதை நகர்த்த வேண்டுமென்ற முழுமையான அரசியல் அவலத்திற்குள் செல்லும் போது திரைக்கதை நொண்டியடிக்கின்றது.

திரைக்கதை துவண்டு தூண்டடப்படுவதை அடிப்படையாக படத்தை இரண்டு பாகமாக பிரிக்கலாம்  ஒன்று மாட்டை அடிப்படையாக கொண்ட பகுதி, இரண்டாவது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அவலங்களை பற்றி பேசுவது. முதல் படத்திலிருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பகுதிக்கு செல்லும் போது இல்லை. முதல் பகுதி ரசிகர்களுக்காவும் இரண்டாம் பகுதி படத்தின் தலைப்புக்காகவும் இயக்குனர் உருவாக்கியிருப்பது தெரிகின்றது.

தொகுப்பு:

இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் கடைசி அரை மணிநேரம் படத்தின் தலைப்புக்கு, மீதமுள்ளவை ரசிப்பதற்கு.

Movie Gallery

 • review

  Dia Mirza

 • review

  Ramya Pandian

 • review

  Sri Divya

 • review

  Anandhi

 • review

  Lavanya Tripathi

 • review

  Ammu Abhirami

 • review

  Navya Nair

 • review

  Sneha

 • review

  Vedhika

 • review

  Poorna

 • review

  Krithi Shetty

 • review

  Losliya

 • review

  Mirnalini Ravi

 • review

  Parvati Nair

 • review

  Anandhi