7G எண்டர்டெயின்மெண்ட் பி லிமிடட் சார்பில் P.ஆறுமுககுமார் மற்றும் விஜய சேதுபதி புரெக்ஷன் சார்பில் விஜய சேதுபதியும் இணைத்து தயாரித்துள்ள படம் லாபம். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படம் இது. இந்த படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார். மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படம் லாபம்
விஜய் சேதுபதி (பக்கிரி) ஸ்ருதிஹாசனுடன் (கிளாரா) ஜகபதிபாபு (வணங்க முடி), சாய் தன்ஷிகா, கலையரசன் (பென்னி), சண்முகராஜன் (பெத்த பெருமாள்), ரமேஷ் திலக், டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு:
(முதலாளித்துவம் என்றால் கோட்டு சூட்டு முதலாளித்துவம் ஏழ்மை முதலாளித்துவம் புரிந்து கொள்ள முடியாத பொதுவுடமை). பொதுவுடமைவாதியான மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் பொதுவுடமை பிரச்சார படம் தான் லாபம். கார்ல் மார்க்ஸ் மூலதன கோட்பாடு அடிப்படையிலான லாபம் என்ற வார்த்தைகான விளக்கத்தை தனது கோணத்தில் விளக்க முயன்றிருக்கும் படம் தான் லாபம். உலகின் முதல் முதலாளித்துவம் வேளாண்மை. அழித்து கொண்டிருக்கும் ஏழ்மை முதலாளித்துவத்தை தூக்கிப்பிடிக்து பொதுவுடமை அடிப்ப்டையிலான விளக்கத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். லாபம் என்றால் கொள்ளை என்ற அடிப்படையை விளக்க முயன்றுள்ளார்.
கதை:
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பெருவயல் கிராமத்திற்கு திரும்பி வருகின்றார் பக்கிரி. அங்கே முதலாளித்துவத்தில் முதன்மை வகிக்கும் வணங்கா முடி முதலாளிகளுக்கெல்லாம் முதலாளி, அவர் கூட்டனியில் இருக்கும் முதலாளிகள் பெத்த பெருமாள், வீரபாகு, ரங்கமன்னார் போன்றோர்கள். விவசாயிகளின் உழைப்பை சுரண்டி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
அங்கே விவசாய சங்க தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் வணங்கா முடி. பக்கிரி ஊருக்குள் வந்ததும் விவசாய சங்கத்திற்கு போட்டியாளராக மணு தாக்கல் செய்கின்றார். பக்கிரியின் ஆதரவு நிலைப்பாட்டை கண்டு போட்டியிட விரும்பாமல் மணுவை திரும்ப பெருகின்றார் வணங்காமுடி. அதனால் விவசாய சங்க தலைவராகவும் அதன் செயலாளர்,பொருளாளராகவும் பக்கிரியும் அவன் கூட்டாளிகளும் போட்டியின்று தேர்தெடுக்கப்படுகின்றனர்.
அரசின் நில உச்ச வரம்பு சட்டத்தால் நிலம் பெற்ற விவசாயிகளை ஏமாற்றி அணுபவித்துக்கொண்டிருக்கும் பணமுதலைகளிடமிருந்து நிலங்களை திரும்ப ஏழைவிவசாயிகளுக்கு திரும்ப கொடுக்கின்றார்.
அனைத்து விவசாயிகளையும் ஒன்றினைத்து கூட்டுப்பண்ணை திட்டத்தை உருவாக்க முயல்கின்றார். ஆனால் அந்த முயற்சியில் பின்னடைவு ஏற்படுகின்றது. நடன குழு நடத்திவரும் கிளாராவை கூட்டுப்பண்ணை பிரச்சார பாடலுக்கு நடனமாடவைக்க முயற்சிக்கின்றார். கிளாரா மற்றும் பக்கிரியின் முயற்சியால் கூட்டுறவு பண்ணை முறையை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
கூட்டுறவு பண்ணை முயற்சியை வெற்றிகரமாக தொடங்கி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுகின்றார். அவர்களாள் உற்பத்தி செய்த பருத்திக்கு மிக அதிக அளவு விலை வைக்கின்றார். அது இந்தியா முழுவது எதிரொளித்தி பருத்தி விலை வெகுவாக ஏறுகின்றது. பருத்தி ஏற்றுமதியில் முன்னனியில் இருக்கும் இந்தியாவின் பருத்தி விலை உலகசந்தையையே உலுக்குகின்றது.
கூட்டுப்பண்ணை பத்திரங்கள் மற்றும் அவற்றின் மூலம் கிடைத்த பெருந்தொகை போன்றவை வைத்திருந்த லாக்கரை கம்யூட்டர் வரைகலை மூலம் முகமாற்றம் செய்து பக்கிரியும் அவனது சக ஆட்களும் கொள்ளையடித்தாக சித்தரிக்கின்றார் வணங்காமுடி.
மக்கள் (போர்வையில் பக்கிரியின்) பக்கிரியை அடிக்கின்றனர். கிளாரா பக்கிரியையும் அவனது சக ஆட்களையும் காப்பாற்றுகின்றாள். அவர்கள் அனைவரும் காட்டுக்குள் தஞ்சம் புகுந்து தங்களை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.
காட்டுக்குள் இருக்கும் அவர்களை சுட்டு கொல்ல காவல்துறைக்கு பணம் கொடுத்து கொல்ல சொல்கின்றார் வணங்கமுடி அதேவேலையில் தன் மகன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களின் உதவியுடன் பயோ டீசல் உற்பத்தி நிறுவணத்தை அந்த கிராமத்தில் உருவாக்க முயற்சிக்கின்றார். மக்களின் நிலங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு ரூ.20 லட்சம் கொடுப்பதாக சொல்லி நிலத்தை 99 வருடம் குத்தகைக்கு எழுதி வாங்க முயற்சிக்கின்றனர்.
காட்டிலிருக்கும் வணங்காமுடி லாக்கரை மீட்டு மக்களின் பத்திரங்கள் மற்றும் பணத்தை திருப்பி கொடுக்கின்றார். மீண்டும் கூட்டு பண்ணையை வலுப்படுத்த முயல்கின்றார். அதே வேலை காவல்துறையை தூண்டிவிட்டு பக்கிரிக்கு துணையாக நிற்கும் மக்களையும் பக்கிரியையும் கொல்ல சொல்கின்றார் வணங்கா முடி. போலிஸ் தனது அராஜக செயலால் மக்களை சுட்டு கொல்கின்றது. பக்கிரி போலிஸ் அதிகாரியை சுட்டு கொல்கின்றார்.
ஆனால் வணங்கா முடி மக்களை வயலில் இறங்குவதை தடுக்க முயற்சிக்கும் போது வணங்கா முடியையும் கொல்கின்றான் பக்கிரி.
பாராட்டுக்குறியது:
துறுபிடித்திருக்கும் அருவாள் சுத்தியலுக்கும் பட்டை தீட்ட முயற்சித்திக்கும் இயக்குனர் ஜனநாதன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குறியது.
பெரும்பாலும் தனது பொதுவுடமை கருத்துக்களை தனது படங்களில் அள்ளி தெளிக்கும் இயக்குனர். இந்த படத்தில் அந்த கருத்துக்களையே முதன்மைபடுத்தி இயக்கியுள்ளார்.
கார்ல் மார்க்ஸ் மூலதன கோட்பாட்டை மக்களுக்கு தனது கோணத்தில் விளக்க முயன்றுள்ளார்.
பக்கிரி என்ற கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒரு தலைவனுக்குறிய அடிபப்டையில் அருமையாக நடித்திருக்கின்றார் விஜய் சேதுபதி
படத்திற்குள் முழுவதுமாக நிறைந்திருப்பது பொதுவுடமை சித்தாந்தம் அதை முன்னெடுக்கும் நாயகன் பக்கிரி மட்டுமே.
நெருடலானவை:
நெருடலானவைகளை இருவகையாக பிரிக்கலாம் ஒன்று திரைப்படம் சார்ந்தது மற்றொன்று கருத்தியல் சார்ந்தது.
சித்தாந்த அடிப்படையில் ஒரு திரைப்படம் எடுக்கப்படும் போது அந்த சித்தாந்ததின் கோணத்திலான விமர்சனமும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. சிந்தாந்தம் சார்ந்த விமர்சனம் அல்ல இது. சிந்தாந்தத்தின் கோணத்திலான விமர்சனமாக கருத்தியல் சார்ந்த விமர்சனம் இங்கே இடம் பெற்றுள்ளது.
நெருடலானவை (திரைப்படம்):
ஒரு கருத்தை வலிமையாக பதிவு செய்ய வேண்டுமென்றால் அதைவிட எதிர்மறைகருத்துகளையும் பாதிப்புக்களையும் வலிமையாக பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் சொல்ல வந்த கருத்தின் வலிமை தெளிவாக பதிவுறும். இங்கே தனது கருத்தை மட்டுமே பதிவு செய்ய முயன்றுள்ளதால் இந்த திரைப்படம் முழுமை பெறாமல் வெற்று பிரச்சார படமாக மட்டுமே உணர முடிகின்றது.
பொதுவுடமை கருத்துக்களை வலிமையாக சொல்ல முதலாளித்துவத்தின் கொடுமைகளை சொல்லவதை விடுத்து. அதன் சுக போக கேவலத்தை வைத்து திரைக்கதையை நகர்த்த முயன்றதால். இது பிரச்சார படமாக மாறிவிட்டது.
வணங்கா முடி கதாப்பாத்திரப்படைப்பு மக்களின் மனதில் சிறிய அளவு கூட தாக்கத்தை கொடுக்கமால் திரைக்கதை தன் தோன்றி கோணத்தில் பயணிக்கின்றது.
கிளாரா கதாப்பாத்திரத்திலும் பெரிய அளவு வலிமை இல்லை.
சாதாரண கதாப்பாத்திரமாக இருக்கும் பக்கிரி. ஆறாண்டுகளில் பொதுவுடமை கருத்தை கரைத்து கொடுத்துள்ளவராக திரும்பி வந்தது லாஜிக் இல்லாத திரையுலக மேஜிக்.
லாபம் என்பதை பணக்காரன் கோணத்தில் கொள்ளை. அதே லாபம் என்பது இல்லாதவன் பார்வையில் உழைப்பு. இந்த லாஜிக்தான் தான் பொதுவுடமை அழிவு பாதைக்க்கு திரும்பவே அடிப்படை.
பெருமுதலாளி தன் பொருளுக்கு கண்ணாபின்னாவென்று விலை வைத்தால் அந்த லாபம் கொள்ளை. அதே விலை நிர்ணயத்தை இல்லாதவன் வைத்தால் அது உழைப்பு என்று நியாயப்படுத்த முயற்சித்திருப்பது ஏற்புடைய ஒன்றாக இல்லை.
ஒரு கொலை செய்த காரணத்திற்காக அந்த பழியை இன்னொருவர் ஏற்றுகொண்டு ஆறு ஆண்டு ஊரைவிட்டு பக்கிரி வெளியேறுவது. மக்கள் அந்த ஒரு கொலைக்க அவரை சாமியாக்கும். ஆறு ஆண்டுகழித்தி திரும்பி வரும் அவரை ஒரு தீர்க்க தரிசியை போல் மக்கள் கொண்டாடுவதும். திரைக்கதையின் மிகப்பெரிய சொதப்பல்.
இதில் சொல்லியிருப்பது கோட்டு சூட்டு முதலாளித்துவம் ஏழ்மை முதலாளித்துவம். இங்கே சொல்லியிருக்கும் அடிப்படை பொருளாதார சமநிலையே.
ஆறாண்டு பொதுவுடமை சித்தாந்தம் தெரிந்த பக்கிரியால் சாத்திக்க முடியாத ஒன்றை ஒரு நடனக்காரியை வைத்து புரியவைப்பதாக காட்சியமைப்பு. அதவாது பொதுவுடமை சித்தாந்தம் அந்த அளவிற்கு கடிண ஒன்று என்று சொல்ல வருகின்றாரா? இல்லை மக்கள் சிந்தாந்த பார்வையை விட ஈர்க்கு அடிப்படையை நோக்கி இருக்கின்றனரா? இயக்குனர் சொல்ல வருவது என்ன? கார்பரேட் அரசியல் முதாலாளித்துவ விளம்பர அரசியலை போல் பொதுவுடமை அரசியலும் மாற்றம் பெற வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா?
படத்திற்குள் முழுவதுமாக நிறைந்திருப்பது பொதுவுடமை சித்தாந்தம் அதை முன்னெடுக்கும் நாயகன் பக்கிரி மட்டுமே. இதை தாண்டி வேறு எந்த அடிப்படையையும் அழுத்தமாக சொல்ல இயக்குனர் தவறிவிட்டார்.
இயக்குனரின் முந்தைய படங்களை ஒப்பிடும் போது இந்த படம் சராசரிக்கும் கீழ்தான் உள்ளது.
நெருடலானவை (கருத்தியல்):
பொதுவுடை தத்துவம் எந்த இடத்தில் தன் தோல்வியை தொடங்கியதோ அந்த அடிப்படையை மீண்டும் நியாயப்படுத்துவது என்பது தவறானது.
பொதுவுடமை சித்தாந்தம் கால பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் தொடக்க புள்ளீயிலே அதுவும் தோல்வி தொடங்கிய இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பது தவறான ஒன்று.
லாபம் என்பதில் தெளிவில்லாதா சித்தாத்தபார்வை தான் பெருமுதலாளி லாபத்தின் பெயர் கொள்ளை. இல்லாதவன் லாபத்தின் பெயர் உழைப்பு. பொதுவுடமை சிந்தாந்ததின் இந்த அடிப்படை தான் அதன் தோல்வியை நோக்கி நகர செய்கின்றது.
இன்றைய பொதுவுடமை சித்தாந்தம் என்பது முதலாளி தொழிலாளி என்ற அடிப்படை மாறி இருப்பவன் இல்லாதவன் என்ற பரிணாம கோணத்தில் தான் இருக்கின்றது.
இங்கே லாபம் என்பது பொதுவுடமை சித்தாந்தம் அல்ல. பொருளாதார சமநிலை என்பதே அடிப்படை. அதாவாது கோட்டு சூட்டு முதலாளி கோவன முதலாளி. அதாவது பொதுவுடமை வாதிகளிகளின் பார்வையில் பெரு முதலாளியின் லாபம் கொள்ளை. ஏழ்மை முதலாளித்துவத்தின் லாபம் உழைப்பு.
இங்கே பிரச்சனையே உழைப்பின் மதிப்பீடு தான். பொதுவுடமை தோல்வியின் பின்னனியே உழைப்பின் மதிப்பீட்டின் தோல்வி தான்.
பொருளாதார சமநிலை, லாபம் இரண்டிலும் உள்ள பொதுவுடமை சிந்தாந்த நிலைதன்மையின்மையே பொதுவுடமை தோல்வியை நோக்கி செல்ல அடிப்படை.
இப்போது பொதுவுடமை என்பது பொருளாதார சமநிலை என்ற கோணத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இங்கே முதலாளித்துவம் தொழிலாளி என்ற அடிப்படையெல்லாம் இல்லை. இங்கே சிந்தாந்த அடிப்படை கருத்துக்கள் பல குழப்பத்திற்கே வித்திடும்.
பொதுப்படையானது:
ஒரு திரைவிமர்சனம் என்ற அடிப்படை. கோணத்தில் நேர்மறை எதிர்மறைவிமர்சனங்கள் இருக்கலாம். அது விமர்சகனின் கடமை. தனிப்பட்ட முறையில் மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதனின் பொதுவுடமை சித்தாந்தம் மற்றும் அவைகளின் விளக்கம் சார்ந்த அவர் முயற்சிகளையும் திரைப்படங்களையும் பாராட்டும் சராசரி தனி மனித ரசிகனாய் ஒரு வேலை அவர் நம்முடன் இருந்திருந்தால் இன்னும் பல நல்ல படைப்புகளை தந்திருப்பார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று தான்.
தொகுப்பு:
துறுபிடித்த அருவாள் சுத்தியலுக்கு பட்டை தீட்ட முயன்றிருக்கும் இயக்குனரின் முயற்சி பாராட்டுக்குறியது. ஆனால் முயற்சிகள் அனைத்தும் திருவினையாகாது. காரணம் அடிப்படை சித்தாந்த விளக்கத்தில் மக்கள் விளக்கம் பெருவதற்கு பதில் மேலும் மக்களை குழம்ப வைத்திருக்கின்றது. மொத்தத்தில் லாபம் லாஜிக்கில்லா பொதுவுடமை பிரச்சார மேடை.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
