Join/Follow with Our Social Media Links

Netrikann

நெற்றிக்கண் தமிழ்பட திரைவிமர்சனம்..


ரௌடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் சார்பில் விக்ணேஷ் சிவன் மற்றும் ஹியூன்வூ தாமஸ் கிம் தயாரித்துள்ள படம் நெற்றிக்கண். ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் திரைப்பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். கீரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தை தொகுத்துள்ளார்.

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த கதையின் நாயகியாக நயன்தாரா (துர்கா), வில்லனாக அஜமல் அமீர் (டாக்டர் ஜேம்ஸ்), மணிகண்டன் R ஆச்சாரி (மணிகண்டன்), சரண் சக்தி (கௌதம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கொரேனா சூழலில் படங்கள் வெளியிடுவதில் உள்ள சிக்கல் காரணமாக படங்கள் ஒடிடி தளத்தை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கின்றன. பல தடைகளை தாண்டி இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் ஒடிடி தளத்தில் 13.08.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

கதைக்கரு:

கதாநாயகிக்கி முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவிற்கு தீனி போடும் படமாக இது அமைந்துள்ளது. கொரியன் படமான பிளைண்ட்(BLIND) கதையை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். கண் தெரியாத நாயகி சைக்கோ மனிதனை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதுதான் கதைக்கரு.

கதை:

துர்கா ஒரு சி.பி.ஐ அதிகாரி. தன் சகோதரன் ஆதித்யா தவறான வழியில் செல்லாமல் இருக்க அவனை பப்பிலிருந்து கூட்டி வர முயலும் போது மீண்டும் பப்பிற்குள் செல்ல இருக்கும் அவன் கூட்டி வந்து கைவிலங்கை மாட்டி கூட்டிக்கொண்டு செல்கின்றாள். இருவரும் சமதானமாகி கைவிலங்கை வண்டியை ஓட்டிக்கொண்டே கழற்ற முயலும் போது விபத்து ஏற்படுகின்றது அந்த விபத்தில் துர்காவின் சகோதரன் ஆதித்யா இறந்து போகின்றான். துர்காவிற்கு கண் பார்வை பறி போகின்றது.

 

ஜேம்ஸ் பெண்களை கடத்தி கொடுமைபடுத்தி வல்லூறவில் ஈடுபடும் சைக்கோ நாட்டில் உலவிக்கொண்டிருக்கின்றான்.

கண் பார்வையிழந்து சகோதரனை இழந்த துர்கா பார்வையின்றி வாழ தன்னை பழக்கப்படுத்திக்கொள்கின்றாள்.கண்ணா என்ற நாயின் துணையுடன் வாழ்ந்து வருகின்றாள். ஒரு நாள் சாலையை கடக்கும் போது கண்ணாவிற்கு அடிபடுகின்றது. அதனால் கண்ணாவை வீட்டிலேயே விட்டுவிட்டு தான் வளர்ந்த ஆசிரமத்திற்கு செல்கின்றாள். ஆனால் அங்கே ஏற்படும் ஆசிரம நிர்வாகியுடன் (துர்காவால் தாயாக மதிக்கப்படுவர்) ஏற்படும் சிறு பிரச்சனை காரணமாக தனியாக ஆசிரமத்தை விட்டு வெளிவருகின்றார் துர்கா. மழை பெய்துகொண்டிருப்பதால் கால் டாக்ஸிக்கா பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கின்றாள் துர்கா. கால் டாக்ஸி வர நேரமாவதால் சற்று கோபத்தில் இருக்கின்றார். அப்போது அந்த வழியாக காரில் வரும் சைக்கோ ஜேம்ஸ் பார்வையில் அவள் படுகின்றாள். காரை திருப்பி அவளை கடத்த முயல்கின்றான். கார் தன் அருகில் வந்தது கால் டாக்ஸியா என்று கேட்கின்றாள். ஆமாம் என்று சொல்ல காரில் ஏறுகின்றாள். மயக்க மருந்து கொடுத்து கடத்த முயலும் போது ஒரு விபத்தை ஏற்படுத்துகின்றான். விபத்தில் அடிப்பட்ட அல்ல இறந்த நபரை தூக்கி டிக்கியில் போடுகின்றான். துர்காவை கடத்த முயன்ற அவனிடம் போராடி பெப்பர் ஸ்பிரே அடித்து தப்பிக்கின்றாள்.

அங்கிருந்து வேகமாக செல்லும் போது பிங்கோ உணவு (Swiggy போல்) டெலிவரி செய்யும் கௌதம் மீது வண்டியை மோதுகின்றான்.

ஷோபி என்ற பெண்னை காணவில்லை என்று அவளின் தாய் புகார் கொடுக்க காவல்நிலையத்திற்கு செல்கின்றாள். அங்கே இன்ஸ்பெக்டர் ரிஷிகுமார் மற்றும் சப் இன்ஸ்பெகடர் அருள் இருவரும் இணைந்து பணியாற்றுகின்றனர். அங்கே பணியாற்றும் மற்றொரு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டனை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர், முக்கியமான வழக்குகளை அருளிடமே ஒப்படைக்கின்றார் இன்ஸ்பெக்டர்.

காவல்துறையில் இந்த நிகழ்வை பற்றி புகார் கொடுக்க செல்கின்றாள் துர்கா அந்த வழக்கு விபத்து சார்ந்த ஒன்றான கோணம் முக்கியத்துவம் இல்லாத வழக்கு என்ற காரணத்தால் மணிகண்டனை கையாள சொல்கின்றார் இன்ஸ்பெக்டர்.

சற்றே வெறுப்படையும் மணிகண்டன் மேம்போக்காக விசாரித்து கிளம்ப முயலும் போது துர்கா அவனை தடுத்து நிறுத்தி தன் தரப்பு விவரங்களை விரிவாக சொல்கின்றாள். அவள் ஒரு சி.பி.ஐ முன்னாள் அதிகாரி என்ற காரணத்தால் அவளிடமே இந்த வழக்கை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கின்றான் மணிகண்டன்.

காரில் பம்பர் அடிபட்டுள்ளது, காரில் சொட்டை விழுந்துள்ளது என்ற அடிப்படையை வைத்து விசாரிக்கும் மணிகண்டன் இது பற்றி தெரிந்தவர்கள் தகவல் கொடுக்குமாறும் அவ்வாறு தகவல் கொடுப்பருக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதாகவும் சொல்கின்றான். இந்த தகவலை கேட்ட கௌதம் இன்ஸ்பெக்டர் மணிகண்டனை பார்க்க செல்கின்றான். அப்போது துர்காவுடன் காவல் நிலையத்திற்கு வரும் மணிகண்டனிடம் அவன் பார்த்தது தனியார் கார் கால் டாக்ஸி இல்லை என்று சொல்கின்றான். ஆனால் துர்காவின் தகவலில் அது கால் டாக்ஸி என்று அடித்து சொல்கின்றாள். கண்தெறியாவர் சாட்சியை ஏற்று கொள்ளும் நீங்கள் இரண்டு கண்ணால் பார்த்த என்னை நம்பவில்லை என்று துர்காவின் பார்வையின்மையை பரிகாசிக்கின்றான் கௌதம். இதனை பார்த்த மணிகண்டனும் துர்காவும் கௌதமை வெளியேற்றுகின்றனர். அப்போது காவல்துறை அலுவலகத்திலிருந்து வெளியே வரும் கௌதம் மற்றும் துர்காவை பார்க்கின்றான் ஜேம்ஸ். தான் மாட்டிக்கொள்ளப்போவதாக உணர்ந்த ஜேம்ஸ் கவுதமை கொல்ல முடிவு செய்கின்றான்.

எல்லா கால்டாக்ஸி டிரைவர்களையும் விசாரித்து பயனில்லாமல் போனதால் ஓரு வேலை கௌதம் சொல்லியது சரியாக இருக்குமோ என்ற கோணத்தில் கௌதமை தொடர்பு கொள்ள முயல்கின்றனர். ஆனால் முடியாத காரணத்தால் அவன் இருக்கு இடம் தேடி மணிகண்டனும் துர்காவும் செல்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே ஜேம்ஸ் கௌதமை கொல்ல முயன்று தாக்குகின்றான். ஆனால் அந்த பகுதி மக்கள் சத்தம் கேட்டு கௌதமை அடித்து போட்டுவிட்டு போகின்றான். கௌதமை தேடி வரும் மணிகண்டன் துர்கா இருவரும் கௌதமை மருத்துவமனை சேர்க்கின்றனர். துர்கா கௌதம் கண்விழிக்குவரை கூடவே இருந்து உதவுகின்றாள். கண்விழிக்கும் கௌதம் துர்காவை அவமானபடுத்தி மருத்துவமனையை விட்டு வெளியேற்றுகின்றான்.

வீட்டிற்கு வரும் துர்காவிற்கு போன் செய்து ஜேம்ஸ் தான் கவுதமை கொல்லப்போவதா சொல்கின்றான். இதை கேள்விபட்ட துர்கா கௌதமை தன் நாய் கண்ணாவின் துணையுடன் சென்று காப்பாற்ற முயல்கின்றாள். ஆனால் துர்காவின் மேல் இருக்கும் கோபத்தால் கௌதம் அவளைவிட்டு விலகி செல்ல முயல்கின்றான். அந்த நேரத்தில் ஜேம்ஸ் துர்காவை கொல்ல முயல்வதை தெரிந்த கவுதம் அவளை காப்பாற்ற முயல்கின்றான். அந்த போராட்டத்தில் துர்கா மயக்கமாகின்றாள். துர்காவின் நாய் அவளை காப்பாற்றிவிட்டு ஜேம்ஸ் கையாள் கொல்லப்படுகின்றது.

கௌதமிற்கு துர்காவின் மேல் பாசம் ஏற்படுகின்றது. மணிகண்டன், துர்கா கௌதம் மூவரும் சேர்ந்து ஜேம்ஸை கண்டுபிடிக்க முயல்கின்றனர், கௌதம் ஜேம்ஸை நேரில் பார்த்து இருப்பதால் அவனை கொண்டு வரைகலை நிபுணர்கள் உதவியுடன் ஜேம்ஸ் படத்தை வரைகின்றனர்.

கடத்தப்பட்ட பெண்களின் வழக்கிற்கு இதற்கு தொடர்பிருப்பதாக உணர்ந்து விசாரணையை தொடங்கும் போது ஒரு உண்மை தெரிகின்றது. கடத்தப்பட்ட பெண் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்ய சென்றவர்கள் என்று தெரியவருகின்றது. அதனால் தானும் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி ஜேம்ஸை கண்டுபிடித்து போலிஸில் ஒப்படைக்கின்றனர்.

ஜேம்ஸ் தன் மனைவி நான்சி அவளுடன் உடலுறகொள்ள முடியாத காரணத்தால் மனைவி மீது சந்தேகப்படுகின்றான். அவர்களுக்கிடையே நிகழும் ஒரு சண்டையில் அவளை தள்ளிவிட அவள் சுவ்றில் அடிபட்டு துடித்துக்கொண்டிருக்கின்றாள். அவள் துடிப்பை பார்த்த அவனுள் காம உணர்வு வெளிப்படுகின்றது. அதிலிருந்து அவன் பிறறை கொடுமைபடுத்தி காம உறவில் ஈடுபடுவது விசாரனையில் தெரிய வருகின்றது.

அவன் இடங்களை சோதனையிட்டு பெண்களை காப்பாற்றுகின்றது காவல்துறை. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மணிகண்டனுக்கும் நல்ல பெயர் கிடைக்கின்றது.

சகோதரனை இழந்து வாடும் துர்காவிடம் தன்னையே சகோதரனாக ஏற்றுகொள்ள சொல்கின்றான் கௌதம். இதன் நான் மிகவும் சந்தோசம் கொள்கின்றாள் துர்கா.

சிறையிலிருக்கும் ஜேம்ஸ் மணிகண்டனை கொன்றுவிட்டு தப்பி சென்று துர்காவையும் கௌதமையும் கொல்ல முயல்கின்றான். அந்த போராட்டத்தில் துர்கா ஜேம்ஸை கொல்கின்றாள்.

இறக்கும் தருவாயில் மணிகண்டன் தன் கண்னை துர்காவிற்கு பொருத்த சொன்ன காரணத்தால் துர்கா மீண்டும் பார்வை பெருகின்றாள். மணிகண்டன் எதிர்பார்த்தபடி காவல்துறையினரால் பாராட்டுக்குறியவனாகின்றான் அவன் இறந்த பிறகு.. துர்கா மீண்டும் சி.பி.ஐ அதிகாரியாகின்றாள்.

பாராட்டுக்குறியது:

நானும் ரௌடிதான் படத்தில் காது கேளாதவறாக அழகாக நடித்த நயன்தாரா இந்த படத்தில் கண்தெரியாவராக துர்கா கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

இது ஒரு ரீமேக் படம் என்றாலும் காட்சியமைபுகள் புதுமையாக நம் கதைக்களத்திற்கேற்ப கொடுத்துள்ளனர்.

ஒரு திரில்லர் கதைக்கு அடிப்படை சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இசை. இந்த படத்தில் இவையிரண்டும் சிறப்பாக உள்ளது.

ஜேம்ஸ் என்ற சைக்கோ கதாப்பாத்திரத்தில் அருமையாக தன் பங்களிப்பை அஜ்மல் கொடுத்துள்ளார்.

காவல்துறையில் நடக்கும் உள் அரசியலை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

காவல்துறையில் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற அடிப்படையில் இருக்கும் மணிக்கண்டன் என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் மொத்த திரைப்படத்தை நகர்த்தியிருப்பது அருமை.

நெருடலானவை:

பெரிய அளவிலான விமர்சனங்களை கவணிக்க தவறிய சிறு சிறு பிழைகள்.

கால்டாக்ஸியா பிரைவேட் வண்டியா என்ற கோணத்தில் விசாரிக்கும் போது கால் டாக்ஸி என்றால் போனில் தான் தொடர்பு கொண்டிருப்பார்கள். அந்த அடிப்படையில் விசாரணை செய்தாலே துர்கா பயணித்தது கால்டாக்ஸியாக் இல்லை தனியார் வாகணமா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆனால் பயணம் செய்தது கால்டாக்ஸி என்ற கோணத்திலேயே விசாரணை சவ்வாக இழுத்திருப்பது ஏன்?

இன்னும் கொஞ்சம் காட்சிகளில் துப்பறியும் அடிப்படையில் படத்தை இன்னும் விறு விறுப்பாக மாற்றியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.

தொகுப்பு:

ஒரு கிரைம் திரில்லர் அடிப்படையில் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகாக கொடுத்துள்ளனர். நிச்சயம் நயன்தாராவின் நடிப்பில் மற்றுமொரு மைல்கலாக இந்த படம் இருக்கும்.. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாமே? என்று தோன்றுகின்றது காரணம் இந்த கதைக்களம் அதற்கேற்ப உள்ளது. ஒரு வேலை சைக்கோ தமிழ்ப்படத்தை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த உணர்வு ஏற்பட்டிருக்காதோ என்னவோ?

Movie Gallery

  • review

    Priya Anand

  • review

    Kajal Agarwal

  • review

    Vani Bhojan

  • review

    Sonia Agarwal

  • review

    Mehreen Pirzada

  • review

    Dhanya Balakrishna

  • review

    Regina Cassandra

  • review

    Lakshmi Menon

  • review

    Lavanya Tripathi

  • review

    Amy Jackson

  • review

    Raashi Khanna

  • review

    Aathmika

  • review

    Priyamani

  • review

    Poonam Bajwa

  • review

    Dharsha Gupta

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.