Join/Follow with Our Social Media Links

Navarasa Review - 3

நவரசா 9-கதைகள் 9-திரைவிமர்சனம் பகுதி-3 (7 முதல் 9 பாகம்)


நவரசா 9-கதைகள் 9-திரைவிமர்சனம் பகுதி-3 (7 முதல் 9 பாகம்)

நவரசா வெப்சீரிஸ் ஆந்தாலஜி எனப்படும் ஒன்பது குறும்பட தொகுப்பாக வெளியாகியுள்ளது. இதை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் குயூப் சினிமா டெக்னாலஜிஸ் சார்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேஷன் தயாரித்துள்ளார்கள். ஒன்பது இயக்குனர்கள், ஒன்பது கதைகள், ஒன்பது இசையமைப்பாளர்கள் தங்கள் பங்களிப்பை ஒன்பது தொடர்களுக்கு கொடுத்துள்ளனர்.

நவரசா வெப்சீரிஸ் 06.08.2021 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகின்றது.

 

ஒன்பது பகுதிகளின் திரைவிமர்சனம் ஒன்றன் பின் ஒன்றாக பிரித்தும் மொத்த அடிப்படையிலும்

இந்த வெப்தொடர் கொரேனா பெருந்தொற்றினால் ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் திரையுலக தொழிலாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒன்று.

ஏழாம் பாகம்

7) இன்மை (தமிழ்)-  భయానక (தெலுங்கு)- Fear (ஆங்கிலம்)

ரத்திந்திரன் R பிரசாத் இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு விசால் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். விராஜ் சிங்க் கோலி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஆனந்த் ஜெரால்டின் படத்தை தொகுத்துள்ளார்.

சித்தார்த் (முஹமது ஃபரூக் ஜாபர்)), பார்வதி திருவொத்து (வஹிதா), பவேல் நவகீதம் (அன்வர்), ராஜேஷ் பாலசந்திரன் (ஹூசைன் ஹோஜா), அம்மு அபிராமி  (வஹிதா சிறுவயது) மற்றும் பலர் நடித்துள்ளனர்..

கதைக்கரு:

பயம் என்ற அடிப்படையை கொண்டு உருவாகியுள்ள வெப்தொடர். பயம் என்பது ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கும். பயம் என்பது வெளியிலிருந்து வருவது அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பது என்ற அடிப்படையை வைத்து உருவாகியுள்ளது.

கதை::

வஹிதா பாண்டிச்சேரியில் மிக பிராமாண்ட வீட்டில் தனியாக வசித்து வருகின்றாள். அவளிடம் கையொப்பம் வாங்க வீட்டிற்கு வருகின்றான் அலுவல பணியாளன் பரூக். அப்போது அவனின் பேச்சும் திறமையும் வஹிதாவை ஈர்க்கின்றது. அப்போது வஹிதாவிற்கு ஒரு போன் வருகின்றது. அதில் பரூக் என்று யாரையும் அணுப்பவில்லை என்பது தெரிந்து அவனை யார் என்று கேட்கின்றாள். அதற்கு அவன் இப்போது பிரமாண்ட வாழ்கை வாழும் வஹிதா யார்? முத்துபேட்டை ஹூசைன் ஹோஜாவை தெரியுமா? என்று கேட்கின்றான்?

அதிராம்பட்டினம் உப்பு வியாபாரி வஹிதா இவர் பல வருடங்களுக்கு முன்பு பணத்திற்கு ஆசைப்பட்டு மரணத்தருவாயில் இருக்கும் மரைக்காயரை திருமணம் செய்து கொள்கின்றாள். விரைவில் இறந்து விடுவார் இறந்த பின் தன் காதலன் அன்வருடன் வாழ்கையை தொடரலாம் என்று நினைத்திருந்த வஹிதாவிற்கு மரைக்காயர் பிழைத்துக்கொண்டது அதிர்ச்சியை கொடுக்கின்றது.

தன் காதலன் அன்வரின் அறிவுரையின் பேரில் பில்லி சூன்யம் வைக்கும் முத்துப்பேட்டை ஹூசைன் ஹோஜாவை பார்கின்றாள். அவனிடம் மரைக்காயர் தன்னை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டார். நான் மிகவும் கஷ்டப்படுகின்றேன் அவரை கொல்ல பூதத்தை ஏவிவிட சொல்கின்றாள். அதற்கு ஹூசைன் ஹோஜா நீ சொல்வதெல்லாம் உண்மையா என்று கேட்கின்றான். அதற்கு அவள் உண்மை என்று சொல்கின்றாள். ஹூசைன் ஹோஜாவோ நீ பொய் சொன்னால் என்றாவது ஒருநாள் நான் ஏவும் பூதமே உன்னை கொல்லும் என்று சொல்கின்றான். அவன் ஏவிய பூதத்தால் மரைக்காயர் இறக்கிறார்.

தற்போது பரூக்கை பார்த்த அவள் முத்துப்பேட்டை ஹூசைன் ஹோஜா சொல்லிய வார்த்தை அவள் நினைவுக்கு வருகின்றது. பொய் சொன்னால் என்றாவது ஒரு நாள் நான் ஏவிய பூதமே உன்னை கொல்லும் என்ற அடிப்படை வந்து போகின்றது. பரூக் ஜெபிக்கின்றான். பூதத்தால் மரணம் ஏற்பட்டால் அது கொடூரமாக இருக்கும் என்பதால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொள்கின்றாள்.

ஆனால் உண்மை என்பது வஹிதாவின் ஏற்படுத்திய வீண்பழி காரணமாக இறந்த மரக்காயர் உதவியாளராக இருந்த தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க பூதத்தின் பெயரை பயன்படுத்தியாக சொல்கின்றான்

பாராட்டுக்குறியவை:

பயத்தின் அடிப்படையை ஊழ்விணை வந்து உறுத்தும் என்ற பானியில் அழகாக கொடுத்துள்ளனர்.

பயத்தின் அடிப்படை மனிதனின் மனதில் இருப்பது. அது வெளியிலிருந்து உருவாகாது என்ற அடிப்படையை அழகாக சொல்லியிருக்கின்றனர்.

பரூக் மற்றும் வஹிதா கதாப்பாத்திர படைப்பு அருமை.

ஒரு சில விநாடிகளே வந்தாலும் அருமையாக நடித்து திரைக்கதைக்கு வலுசேர்க்கும் கதாப்பாத்திரமாக உள்ளது முத்துபேட்டை ஹூசைன் ஹோஜா

நெருடலானவை:

காதலானாக அமைக்கப்பட்ட அன்வர் கதாப்பாத்திரம் என்னவானது என்பதில் திரைக்கதை தெளிவில்லாமல் இருக்கின்றது.

தந்தை இறந்தவுடன் வரும் கபீர் கதாப்பாத்திரத்திற்கு முன் கதை எப்படி தெரியும் என்பதற்கான காட்சியமைப்பில் வலுவில்லாமல் இருக்கின்றது.

தொகுப்பு:

பயம் என்ற உணர்வை அமாணுஷயங்கள் அடிப்படையில் தொடங்கி எதார்த்த அடிப்படையில் பகுதியை நிறைவு செய்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. காட்சியமைப்புகள் பராட்டுக்குறிய ஒன்றாக இருக்கின்றனது.

எட்டாம் பாகம்

8) துணிந்த பின் (தமிழ்)- వీర -(தெலுங்கு)- Valour (ஆங்கிலம்)

சர்ஜூன் K M இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு கதை எழுதியிருப்பவர் மணிரத்னம், சுந்தரமூர்த்தி K.S இசையமைத்துள்ளார். சுதர்சன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா G.K படத்தை தொகுத்துள்ளார்

அதர்வா (வெற்றி), அஞ்சலி (முத்து லக்ஷ்மி), கிஷோர் (காம்ரேட்), அழகம் பெருமாள் (சக்கரவர்த்தி), மாரிமுத்து, பவா செல்லதுரை, ஆதிரா, N.அருண்மொழிதேவன், R.மதி மற்றும் பலர் நடித்துள்ளனர்

கதைக்கரு:

வீரம் தைரியம் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வெப் தொடர். தைரியம் என்பதற்கு அடிப்படை நாம் செய்வது சரியென்ற எண்ணமே..

கதை::

சக்கரவர்த்தி தலையிலான அதிரடிப்படை குழு நக்சலை தேடி காட்டிற்குள் செல்கின்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர். ஆனால் நக்சல் காட்டில் தான் தங்கியிருப்பார்கள் என்று அங்கேயே காத்திருக்க முடிவு செய்கின்றனர். காட்டிலிருந்து வெளிப்பட்ட நக்சலுக்கும் அதிரடிப்படையினருக்கும் யுத்தம் நடக்கின்றது. அந்த யுத்ததில் வெற்றியை தவிர பலர் இறக்கின்றனர். பலர் படுகாயமடைகின்றனர்.

வெற்றி நக்சல் தலைவனை சுட்டுவிடுகின்றான். இன்னொரு அதிரடிப்படை குழு அங்கே வருகின்றனது. குண்டடிபட்ட நக்சல் தலைவனை தலைமையிடத்துக்கு கொண்டு செல்ல சொல்லி இன்னொரு குழுவின் அதிரடிப்படையின் தலைமை பொருப்பில் இருக்கும் அதிகாரி சொல்கின்றார்.

இதற்கிடையில் கர்பிணியான வெற்றியின் மனைவியும் வெற்றியின் தாயும் கணவனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையிடம் சொல்லுகின்றனர்.

நக்சல் தலைவனை கூட்டி செல்லும் வெற்றிக்கு வழியில் பல தடங்கள் ஏற்படுகின்றது. குண்டடிப்பட்ட படுகாயமடைந்த நக்சல் தலைவன் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு வெற்றியிடம் சொல்கின்றான். மருத்துவமனையில் விலங்கை வண்டியில் பூட்டிவிட்டு டாக்டரை அழைத்து வருவதற்குள். நக்சல் தலைவன் தப்பிவிடுகின்றான். தப்பிய அவன் மருத்துமனையில் மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கின்றான். அவனை பார்த்த வெற்றிக்கு அவனை சுட முயல்கின்றான். ஆனால் துணிவில்லாத காரணத்தால் தப்பிவிடுகின்றான். வெற்றி சுட முயற்சிக்கும் போது நக்சல் தலைவன் சொல்லும் வார்த்தை தைரியம் என்ற ஒன்று வரவேண்டுமென்றால் நாம் செய்வது சரியென்ற எண்ணம் வரவேண்டும் என்று சொல்கின்றான். அப்போது தன் செயல்பாடு சரியென்ற எண்ணம் உந்த நக்சல் தலைவனை தேடி காட்டுக்குள் செல்கின்றான்.

பாராட்டுக்குறியவை:

கம்பி மேல் நடக்க வேண்டியகதை நக்சல் அடிப்படை நியாயத்தில் அதிரடிப்படை செயல்பாடுகள் தவறு என்ற எண்ணம் உருவாகாமல் இரண்டு தரப்பின் அடிப்படை நியாயத்தில் திரைக்கதை அமைத்திருப்பது நல்ல விஷயம்.

ஒரு நக்சல் அதிரடிப்படை யுத்தகளத்தை அழகாக காட்டியுள்ளனர்.

பின்னனி இசை அருமை

நெருடலானவை:

இந்த பகுதியில் மனைவி, தாய் கதாப்பாத்திரங்கள் எதற்காக கொடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறிய ஒன்று.

வெற்றி என்ற தனி ஒருவனின் குண்டடிபட்டவனை அழைத்து செல்ல சொன்ன காரணம் என்ன? அதுவும் நக்சல் நிறைந்த காட்டுக்குள் தனியாக ஒருவனை நம்பி அணுப்பியது ஏன்?

திரைக்கதையில் எதையும் முழுமை படுத்தாமல் காட்சிகள் நகர்வது பொருமையிழக்க வைக்கின்றது

தொகுப்பு:

ஏதோ அடிப்படையை சொல்ல வேண்டும் என்று நினைத்து எதையும் தெளிவாக சொல்லமல் வெறும் காட்சியமைப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட பகுதி.

ஒன்பதாம் பாகம்

9) கிடார் கம்பி மேலே நின்று (தமிழ்)- శృంగార -(தெலுங்கு)- Romance (ஆங்கிலம்)

கவுதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு கார்திக் இசையமைத்துள்ளார். P C ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார்

சூர்யா (கமல்), பிரயாகா மார்டின் (நேத்ரா) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு:

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தொடர். காதல் என்பது உணர்வு என்றுமே வாழும் ஒன்று. அது இணைந்தாலும் பிரிந்தாலும்.

கதை::

கமல் ஒரு இசையமைப்பாளன். இங்கே இசை என்பது தனித்துவமாக வெற்றிபெற வாய்ப்புகள் என்பது குறைவு. அதானல் லண்டன் செல்ல தீர்மானிக்கின்றான் கமல். அப்போது ஒரு ஒலிப்பதிவிற்காக அவனைத்தேடி வருகின்றாள் நேத்ரா லண்டன் செல்வது தொடர்பாக தாயிடம் பேசிய வார்த்தைகளையே அவளும் சொல்வதை பார்க்கின்றான். நேத்ராவிடம் பழகிய சில நொடிகளிலேயே இசைசார்ந்த அவளது பார்வையும் கமலின் பார்வை ஒத்துப்போகின்றது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மையல் கொள்கின்றனர். இசைத்துவமாக அவர்கள் காதல் வெளிப்படுகின்றது. வயது வேறுபாடு கமலுக்கு ஒரு உறுத்தலாக இருக்கின்றது. நேத்ராவோ காதலிக்க வயது என்பது ஒரு பொருட்டல்ல. வாழ்கை என்பதைபற்றி பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றாள். லண்டன் செல்வதை கூட விட்டுவிட்டு காதலிக்கின்றான்.

இறுதியில் கமல் லண்டனில் இருக்கின்றான். அங்கே இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடும் போது காதல் பிரிவை பற்றி பேசும் போது காதலை பிரிவா இணைப்பா என்பதை தாண்டி காதல் என்பது காதல் தான் என்று சொல்கின்றான்.

பாராட்டுக்குறியவை:

கவித்துவமான காதல் கதையை காதலின் அடிப்படையிலேயே இயக்கியுள்ளார் இயக்குனர்.

கமலி மற்றும் நேத்ரா கதாப்பாத்திரங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

காதலின் அழகை பாடலின் வழியிலும் இசையின் வழியிலும் நம் இதயமும் காதலின் சுவையை ருசிக்க முடியும். அதாவது ருசி என்பது நாவிற்குமட்டுமல்ல இதயத்திற்கும் என்று உணர வைத்துள்ளார்கள் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்.

P.C.ஸ்ரீராம் ஒளிப்பதிவைபற்றி தனியாக பாராட்டத்தேவையில்லை. காரணம் அவரின் ஒளிப்பதிவு பாராட்டாமல் இருக்கும் இடமே கிடையாது.

நெருடலானவை:

காட்சியமைப்பில் மனதை உருத்தும் அடிப்படையை தேட வேண்டியிருக்கின்றது. ஒன்று மட்டும் தெரிகின்றது இயக்குனர் எல்லாப்படங்களிலும் பைக்கை தனது திரைக்கதையில் அதிகம் புகுத்துகின்றார். இதிலும் அந்த அடிப்படையில் பைக் காட்சிகளை அதிகம் கொடுத்துள்ளார். இவை நெருடலானவை அல்ல. ஆனால் காட்சியமைப்புகள் அருமைதான்.

தொகுப்பு:

காதலின் உணர்வை அழகாக வெளிப்படுத்தி அனைவர் இதயத்தில் அதை நிலை நிறுத்தும் தொடர். அருமையான இசை, ஒளிப்பதிவு, பாடல் மற்றும் காட்சியமைப்பு.

Movie Gallery

  • review

    Kangana Ranaut

  • review

    Neetu Chandra

  • review

    Raashi Khanna

  • review

    Iswarya Menon

  • review

    Rithika Singh

  • review

    Manasa Radhakrishnan

  • review

    Sakshi Agarwal

  • review

    Lavanya Tripathi

  • review

    Surabhi

  • review

    Parvati Nair

  • review

    Swasika

  • review

    Priya Varrier

  • review

    Mamta Mohandas

  • review

    Sreeleela

  • review

    Nivetha Pethuraj

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.