Join/Follow with Our Social Media Links

மீம்ஸ் நாயகன் வடிவேலு ரீ எண்டீரி படத்தின் கெத்தான தலைப்பு

Article by : Admin on 10-10-2021

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பிரச்சினை காரணமாக வடிவேலுக்கு நடிக்க தடை விதிப்பட்டிருந்தது. அந்த தற்போது நீங்கியுள்ள சூழலில். பிரமாண்டமாக ரீ எண்டிரி கொடுக்க வேண்டும் என்று இருக்கின்றார். நடிகர் வடிவேலுவை வைத்து தலைநகரம் மற்றும் மருதமலை படங்களில் காமெடி சதிராட்டம் நடத்தியவர் இயக்குனர் சுராஜ். இவரின் கத்தி சண்டை படத்தில் கூட டாக்டர் பூத்ரியாக வந்து நடிகர் வடிவேலு கலக்கியிருப்பார்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் இடம் பெற்ற நாய் சேகர் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மீம்ஸ் கிரியேட்டர்கள் கூட நாய் சேகர் கதாப்பாத்திரத்தை வைத்து டிரெண்டிங்க் செய்து கொண்டே இருக்கின்றனர். நடிகர் வடிவேலுவை வைத்து தடைக்கு பிறகு சுராஜ் இயக்கவிருக்கும் படத்திற்கு நாய்சேகர் என்று பெயர்வைத்து இயக்க நினைத்தார் சுராஜ். ஆனால் நாய்சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் நடிக்கும் காமெடி படத்திற்கு ஏற்கனவே வைக்கப்பட்டதால் அதிர்ச்சியில் இருந்தார் நடிகர் வடிவேலு மற்றும் சுராஜ். ஏராளமானோர் சமூக வலைதளத்தில் கூட இந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் நாய் சேகர் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அந்த பெயரை விட்டு அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில். வடிவேலுவின் படத்திற்கு “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லைகா புரெடெக்ஷ்ன் சார்பில் சுபாஸ்கரன் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தை தயாரிக்கின்றார். இயக்குனர் சுராஜ் எழுதி இந்த படத்தை இயக்குகின்றார். முதன் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் மூலம் இயக்குனர் சுராஜூடன் இணைந்துள்ளார். பிற நடிகரகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுப்பணி நடந்து கொண்டிருக்கின்றது.

ரசிகர்களிடமும் மீம்ஸ் கிரியேட்டர்களிடமும் பெரிய எதிர்பார்பை உருவாக்கியுள்ள “நாய் சேகர் ரிட்டன்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மாப்பு வைச்சுட்டியே ஆப்பு என்ற வடிவேலு வசனத்தின் படி சுராஜ் கெத்தாக தலைப்பை வைத்துள்ளார். இவர் தலைநகரம் படத்தில் ஒரு வசனம் வரும் திரிஷா இல்லாட்டி நயன்தாரா என்று.. அதே போல் “நாய் சேகர்” இல்லாட்டி “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று கெத்து காட்டியுள்ளார் இயக்குனர் சுராஜ்.







3 BHK Flat For Sale in Chennai
3 BHK Flat For Sale in Chennai
Explore verified 3 BHK Flat For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/3-bhk-flat-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Anikha

  • news

    Aparna Balamuralli

  • news

    Kausalya

  • news

    Samyuktha Hegde

  • news

    Darshana Banik

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Sunaina

  • news

    Anukreethy Vas

  • news

    Ramya Krishnan

  • news

    Kaniha

  • news

    Shriya Saran

  • news

    Poonam Bajwa

  • news

    Sheela Rajkumar

  • news

    Kangana Ranaut

  • news

    Pooja Umashankar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.