O2 தமிழ்பட திரைவிமர்சனம்ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S R பிரகாஷ் பிரபு மற்றும் S R பிரபு தயாரித்துள்ள படம் O2 அறிமுக இயக்குனர் G S விக்ணேஷ் எழுதி இயக்கியுள்ளார் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார் செல்வா R K இப்படத்தை தொகுத்துள்ளார்
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் O T T தளத்தில் O2 திரைப்படம் 17-06-2022 முதல் ஒளிபரப்பாகிறது
O2 படத்தில் நயன்தாரா பார்வதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மாஸ்டர் ரித்விக் வீரா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சிபி புவனா சந்திரன் ரஃபீக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பரத் நீலகண்டன் போலிஸ் இண்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆடுகளம் முருகதாஸ் பேருந்து ஓட்டுனராக நடித்துள்ளார் R N R மனோகர் Ec M L A கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் லீனா மனோரமா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஸா ரா பார்வதி சகோதரர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளார்
கதைக்கரு,:
தன் மகனை காக்க போராடும் ஒரு தாயின் கதை
கதை:
பார்வதி தன் கணவனை இழந்து மகன் வீராவுடன் வசித்து வருகிறாள் வீராவிற்கு நுரையீரல் சார்ந்த பிரச்சனை காரணமாக செயற்கை சுவாசத்துடன் வாழ்ந்து வருகிறான் அவனது சிகிச்சைக்காக கொச்சின் செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறாள் பார்வதி
குழந்தைசாமி செய்யாத தவறுக்காக 14 வருடம் சிறைதண்டனை பெற்று விடுதலையாகி கொச்சினில் இருக்கும் தன் தாயிடம் சென்று தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமென்று கிளம்புகிறான்
மருத்துவ கல்லூரியில் படிக்கும் ரஃபீக் இந்து மதத்தை சேர்ந்த உயர் ஜாதிப்பெண்ணான மித்ராவை காதலிக்கிறான் அவனிடமிருந்து அவளை பிரிக்க கொச்சினுக்கு அழைத்து செல்கிறார் அவளது தந்தை அதை தெரிந்த ரஃபீக்கும் அவர்களுக்கு தெரியாமல் அந்த பேருந்தில் ஏறுகிறான்
ரெய்டில் பிடித்த போதைப்பொருளை கள்ள சந்தையில் விற்க பாலக்காடு செல்ல முயல்கிறார் இன்ஸ்பெக்டர்
கொச்சின் செல்லும் பேருந்தில் பார்வதி, வீரா, குழந்தை சாமி, ரஃபீக், மித்ரா, மித்ராவின் தந்தை, Ex M L A தன் உதவியாளனுடன் கொச்சின் செல்லும் பயனிகளும் அவர்களுடன் பாலக்காடு இன்னும் பிற பகுதிகளுக்கு செல்பவர்களுடன் புறப்படுகிறது வழியில் இண்ஸ்பெக்டர் போதைபொருள் பையுடன் பாலக்காடு செல்ல வேண்டுமென்று ஏறுகிறார்
மழை காரணமாக வழியில் டிராபிக் ஜாம் ஏற்பட பாலக்காடு மற்றும் இன்னும் பிற பகுதிகளுக்கு செல்லும் பயனிகளை இறக்கிவிட்டு கொச்சின் செல்லும் பயனிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு டிரைவர் கிளீனருடன் மாற்று பாதையில் கொச்சின் நோக்கி புறப்படுகிறது
தூங்கி கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் டிரைவருடன் தகராறு செய்கிறான் மீண்டும் வந்த வழியில் வண்டியை திருப்ப சொல்கிறான் கிளீனர் பேருந்திலிருந்து இறங்கி வண்டியை பின்னால் எடுக்க உதவ முயல்கிறான் அப்போது மலையிலிருந்து பாறை உருண்டு கிளீனர் மீது விழ அங்கேயே அவன் இறக்கிறான் மலையில் நிலச்சரிவு அதிகமாகி மண்ணுக்குள் பேருந்து புதைந்து போகிறது அப்போது ஏற்படும் பேருந்தின் தடுமாற்றம் காரணமாக Ex MLA உதவியாளன் இறந்துபோகிறான் குழந்தைசாமி கடுமையாக பாதிக்கப்படுகிறார்
பேருந்துக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் 10 மணி நேரத்திற்கு மட்டுமே தாங்கும் பையனுக்காக தான் எடுத்து வந்த மற்றொரு ஆக்ஸிஜன் சிலிண்டரை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாள் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைசாமியை இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்கிறான்