Jurassic World Dominion-தமிழ் திரை விமர்சனம்ஆம்பிளின் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பர்ஃபெக்ட் வோல்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஜூராஸிக் வோல்ட் டோமினியன் கொலின் ட்ரெவோரோ எழுதி இயக்கியுள்ளார் மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ளார் ஜான் ஸ்வார்ட்ஸ்மேன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மார்க் சாங்கர் படத்தை தொகுத்துள்ளார்
ஜூராஸிக் வோல்ட் டோமினியன் படத்தில் கிரிஸ் பிராட் ஓவன் கிரேடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் கிளாரி டியர்ங்க் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சாம் நெய்ல் டாக்டர் ஆலன் கிரான்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் லாரா டெர்ன் டாக்டர் எல்லீ சாட்லெர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெஃப் கோல்ட்ப்ளம் டாக்டர் இயான் மால்கம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இசெபெல்லா செர்மோன் மைசி லாக்வுட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மாமௌடோ ஆய்தி ராம்சே கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் டேவாண்டா வைஸ் கைலா வாட்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் கேம்பெல் ஸ்காட் டாக்டர் லீவிஸ் டாட்சன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் BD வாங் டாக்டர் ஹென்றி வூ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர்
கதைக்கரு:
மரபணு மாற்றப்பட்டு விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க முயலும் நிறுவனம் பயோசின் அந்த நிறுவனம் ஜூராஸிக் வோல்டில் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்ட டைனோசர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றும் நிறுவனம் அந்த நிறுவனத்தில் வெறும் பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டவனிடமிருந்து தன் வளப்பு மகளை காப்பாற்றுகின்றான் நாயகன் மற்றும் வெட்டுக்கிளிகளை அழிக்க போராடும் இயற்கை ஆர்வலர் அதற்கான தீர்வையும் கண்டுபிடிக்கின்றனர்
கதை:
அரசாங்கம் அழிந்து கொண்டிருக்கும் ஜூராஸிக் வோல்ட் மிருகங்களை பாதுக்காக்கும் பொறுப்பையும் அவைகளை ஆராயவும் பயோசின் நிறுவனத்தினத்திற்கு அனுமதி கொடுக்கிறது அந்த நிறுவனத்தை நடத்துபவர் ஜூராஸிக் பார்க்கில் இருந்த டாக்டர் மால்கம் அவருடன் டாக்டர் லீவீஸ் இருவரும் நடத்துகின்றனர் அங்கே நடந்த ஒரு ஆய்வின் எதிர்வினையாக மரபனு மாற்றம் பெற்ற வெட்டுக்கிளிகள் உருவாகின்றது அதை சரிசெய்ய நினைக்கின்றனர் அதற்கு டாக்டர் ஹென்றி வூ உதவியாக இருக்கின்றார்
இயற்கை ஆர்வலராகவும் டைனோசர்களை பாதுகாப்பவரகவும் இருக்கிறார் எல்லி வெட்டுக்கிளிகள் வேளான்நிலத்தை அழிப்பதை உணர்ந்து அங்கே சென்று பார்க்கிறாள் அங்கே இருக்கும் வெட்டுக்கிளிகள் பயோசின் நிறுவனத்திலிருந்து உருவாகியுள்ளதாக தெரிந்து கொள்கிறாள் அதை நிரூபிக்க டைனோசர் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஆலன் உதவியுடன் பயோசின் நிறுவனத்திற்கு செல்கின்றாள்
முந்தைய பகுதியில் பார்த்த டாக்டர் பெஞ்சமின் பேத்தி மைசியை காப்பற்றி மகளாக வளர்க்கின்றனர் ஓவன் மற்றும் கிளாரி ராப்டர் புளூவுடனும் தலைமறைவாக இருக்கின்றனர் மைசி ஒரு அபூர்வ பிறவி