விக்ரம் திரை விமர்சனம்ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் விக்ரம் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிலோமின் ராஜ் படத்தை தொகுத்துள்ளார்
விக்ரம் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கர்ணன் எனும் விக்ரம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி சந்தனம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பகத் பாசில் அமர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நரேன் இன்ஸ்பெக்டர் பிஜோய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம் ACP பிரபஞ்சன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் செம்பன் வினோத் ஜோஸ் போலிஸ் அதிகாரி ஜோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சந்தான பாரதி ஏஜெண்ட் உப்பிலியப்பன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இளங்கோ குமாரவேல் ஏஜெண்ட் லாரன்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் வசந்தி ஏஜெண்ட் டினா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் காயத்திரி சங்கர் அமர் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அருள்தாஸ் ருத்ரபிரதாப் கதாப்பாத்தில் நடித்துள்ளார் ஸ்வத்திகா கிருஷ்ணன் பிரபஞ்சன் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் VJ மகேஸ்வரி சந்தனம் முதல் மனைவியாக நடித்துள்ளார் ஷிவானி நாராயணன் சந்தனம் இரண்டாவது மனைவியாக நடித்துள்ளார் மைனா நந்தினி சந்தனம் மூன்றாவது மனைவியாக நடித்துள்ளார் சூர்யா ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர்
கதைக்கரு:
தன் மகனை கொன்ற போதை பொருள் கடத்தல் தொடர்புடைய நபர்களை கொல்வதுடன் போதை பொருள்களே இல்லாத சமூகத்தை உருவாக்க முயலும் ஒரு தந்தையின் செயல்பாடுகளே இப்படத்தின் கதைக்கரு
கதை:
முகமூடி போட்ட தீவிரவாதிகளலால் போலிஸ் அதிகாரி பிரபஞ்சன், மற்றுமொரு நபர், பிரபஞ்சன் தந்தை கர்ணன் மூன்று பேரும் கொல்லப்படுகின்றனர் இந்த கொலைகாரர்களை கண்டுபிடிக்க வெளியிலிருந்து அமர் என்ற புலணாய்வு மனிதனை பணியமர்த்துகிறார் போலிஸ் அதிகாரி ஜோஸ்
அமர் டீம் இந்த கொலைகளை பற்றி விசாரிக்கின்றது அதில் போதைப்பொருள் கடத்தல்காரன் சந்தனம், அரசியல்வாதி ருத்ரபிரதாப் மற்றும் இறந்த கர்ணன், ஜிம் உரிமையாளர் உப்பிலியப்பன், கர்ணன் வீட்டு வேலைக்கார் டினா மற்றும் டாக்ஸி டிரைவர் லாரண்ஸ் போன்றவர்களை விசாரிக்கின்றான் இந்த விசாரனைக்கிடையில் தன் காதலியை திருமணம் செய்துகொள்கிறான் தன் தொழிலைப்பற்றி கேட்ககூடாது என்ற நிபந்தனையுடன்
சந்தனம் மிகப்பெரிய ரவுடி இவனுக்கு மூன்று மனைவிகள் இவன் குடும்பத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பகலில் டாக்டராகவும் இரவில் போதை பொருள் பகுப்பாளன் ஆராய்ச்சியாளனாகவும் ரௌடி தொழிலை அதுவும் குறிப்பாக போதைபொருள் கடத்தல் தொழிலை முதன்மையாகவும் கொண்டிருப்பவன்