Join/Follow with Our Social Media Links

இயக்குனர் சிகரத்தின் நினைவலைகள் பகுதி-1..…

Article by : SSRaj on 09-07-2021

இயக்குனர் சிகரம் பாலசந்தர் திரையுல சாதனையாளர் என்று சொன்னால் மிகையாகாது. அவர் இந்திய திரையுலகின் சகாப்தம் மற்றும் சரித்திரம் என்று சொல்லலாம். அந்த சகாப்தத்தை பற்றி எழுத வேண்டுமென்றால் அது ஒரு சமுத்திரம். ஆனால் அந்த சமுத்திரத்தின் சிறுபகுதி அலைகள். அந்த நினைவலைகளை பகிர்நதுகொள்வதில் பெருமை கொள்வோம்.

K.பாலசந்தர் (கைலாசம் பாலசந்தர்) தமிழ் திரையுலக சரித்திரத்தில் மறக்க முடியாத மறைக்க முடியாத பெயர். பச்சை பசேல் என்று பசுமை நிறைந்திருக்கும் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் பகுதியில் 09 ஜூலை 1930 ல் பிறந்தார். 8 வயது முதல் சினிமா மீது காதல் கொண்டவர். 12 வயது முதல் சிறு சிறு நாடகங்களை போட்டவர். நடிப்பு, கதை, இயக்கம் போன்ற பரிமாணங்களில் பயணித்தவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றவர். முத்துபட்டினத்தில் 1950 ஆசிரியராக தன் வாழ்கையை தொடங்கியவர். பிறகு சென்னை வந்து AGS அலுவலகத்தில் பயிற்சி அலுவலராக சேர்ந்தார்.

திரையுலக பயணம்:

AGS அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்ற நாடக குழுவில் இணைந்தார். பின் தனியாக ஒரு நாடக கம்பெனியை தொடங்கினார். மேஜர் சந்திரகாந்த நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். ஆனால் ஆங்கிலம் என்பது அந்த காலத்தில் அனைவராலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு மொழியாக இருந்தது. அதனால் அந்த நாடகத்தை தமிழில் எழுதி இயக்கினார்.

அந்த நேரத்தில் தான் எம்.ஜி.ஆர் நடிக்க R.M.வீரப்பன் தயாரிக்க, P.மாதவன் இயக்கிய “தெய்வத்தாய்” படத்திற்கு கதையை நனாபாய் பட் எழுதியிருந்தார். இயக்குனர் சிகரத்திற்கு அந்த படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

பின் எம்.ஜி.ராமச்சந்திரன் எந்த படத்திலும் இவர் இணைந்து வேலை செய்ததில்லை என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

மேடை நாடகத்திற்காக இயக்குனர் சிகரம் எழுதிய “சர்வ சுந்தரம்” கதை அதே தலைப்பில் படமாக எடுக்கப்பட்டது. அதன் வசனம் மற்றும் திரைக்கதையை எழுதியது இவரே. நாகேஷ் இந்த படத்தில் நாயகனக நடித்தார். ஆனால் கதாநாயகனுக்குறிய உடல்வாகு இல்லாமல் இருந்த நாகேஷ் ஒரு காட்சியில் நடித்து காட்டி சினிமா வாய்ப்பு பெற்றது போல் காட்சியமைப்பு இருக்கும். ஒரு எதார்த்தை திரைக்குள் புகுத்தில் மாற்றத்தை உருவாக்கினார். இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார்கள். இந்த படத்தில் வரும் “அவளுக்கென்ன அழகியமுகம் அவளுக்கென்ன” பாடல் இன்றும் புதிதாக தெரியும். இந்த படம் ஹிந்தியிலும் “மெய்ன் சுந்தர் ஹூன்” என்ற பெயரில் மெஹமுத் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த “பூஜைக்கு வந்த மலர்” படத்திற்கு கதை வசனம் எழுதியவர் இயக்குன் சிகரம் தான்

23.10.1965 ல் வெளியான “நீர்குமிழி” படம் தான் இயக்குனர் சிகரம் இயக்கிய முதல் படம். இயக்குனரின் மனம் கவர்ந்த நாயகன் நாகேஷ் தான் இந்த படத்தின் நாயகன். இந்த படம் பின் நாளில் “சிரஞ்சீவி” என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளாத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

அதனை தொடந்து “நாணல்”, அவரின் முதல் நாடகமான “மேஜர் சந்திரகாந்த்” போன்ற படங்களை எழுதி இயக்கின்னார். 1967 ல் வெளியான இயக்குனர் சிகரத்தின் “பாமா விஜயம்” திரைப்படம் “பலே கொட்டாலு” என்ற பெயரில் தெலுங்கில் இவரால் எழுதி இயக்கப்பட்டது. தெலுங்கில் இவர் தடம் பதித்த முதல் படம் இது. இந்த படம் ஹிந்தியிலும் “டீன் பாகுரானியன்” என்ற பெயரில் எடுக்கப்பட்டது இதை ஹிந்தியில் SS.பாலன் மற்றும் SS.வாசன் இயக்கினார்கள்.

இயக்குனர் சிகரத்தின் “மேஜர் சந்திரகாந்த்” படம். கண் தெரியாத ஒரு நபர் தன் மகனை கொலை செய்தவனின் உணர்வை புரிந்து அவனை காப்பாற்றும் கதாப்பாத்திரத்தில் மேஜர் சுந்தராஜன் (இந்த படத்தில் நடித்த காரணத்தாலேயே சுந்தராஜான் மேஜர் சுந்தராஜனாய் அடைமொழிபெற்றார்). இந்த படம் தெலுங்கில் “சுக துக்காலு” என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

இயக்குனர் சிகரத்தால் எழுதி இயக்கப்பட்ட “அணுபவி ராஜா அணுபவி” படம் நாகேஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம்.

இவர் தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தா விருதை “தாமரை நெஞ்சம்” படத்திற்காக பெற்றார்.

“எதிர் நீச்சல்” படத்தில் இருமல் தாத்தா கதாப்பாத்திரம் உருவமே இல்லாமல் வெறும் இருமல் சத்ததை மட்டுமே வைத்து ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கியிருப்பார் இயக்குனர். இந்த படத்திற்கும் தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தா விருதை இயக்குனர் பெற்றார். இந்த படமும் தெலுங்கில் “சம்பராஜா ராம்பாபு” என்ற பெயரில் GVR சேஷாகிரி ராவ் இயக்கத்தில் வெளியானது. “லக்கோன் மெய்ன் ஏக்” என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியானது.

தமிழ் படங்களிலிருந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள் பலவற்றில் இவர் முத்திரை பதித்தார். ஆனால் தெலுங்கில் நேரடியாக முதன் முதலில் இவர் எழுதி இயக்கிய படம் “சட்டெகலப்பு சட்டெய” என்ற படம் பின் “பத்தாம் பசலி” என்ற பெயரில் தமிழில் இயக்கினார், இந்த படம் “மஸ்தானா” என்ற பெயரில் ஹிந்தியிலும், “மன்கு திம்மா” என்ற பெயரில் கண்ணடத்திலும் வெளியானது.

“பூவாதலையா” என்ற படமும் தெலுங்கில் “பொம்மா பொருஷா” என்ற பெயரில் வெளியானது மற்றும் மலையாளத்தில் “பாலா பரீக்ஷனா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

1969 ல் இவர் இயக்கிய “இருகோடுகள்” படம் மத்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது.

எதிரொளி, நவகிரகம், காவிய தலைவி, நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புண்ணகை, கண்ணா நலமா, வெள்ளிவிழா, அரங்கேற்றம்,(இந்த படம் “ஜீவிதா ரங்கம்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது, “ஆய்னா” என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது)  படங்களை எழுதி இயக்கிய இயக்குனர் சிகரம் தனது 25வது படமாக “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தை எழுது இயக்கினார்.

ஒரு பெண்ணின் வலியை வலிமை மிகுந்த பெண்ணின் கதையாக “அவள் ஒரு தொடர்கதை” படத்தை எழுதி இயக்குனர். இந்த படம் சுஜாதா, ஜெய்கணேஷ், படாபட் ஜெயலக்ஷ்மி என்ற நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்தது. இதில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்று ஒரு காவியமாக இன்றும் இருக்கின்றது. சிறந்த இயக்குனருக்கான ஃபில்ம் ஃபேர் விருது இந்த படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த படம் “அதுலேனி கதா” என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்குனர் சிகரமே இயக்கியுள்ளார்.

பெண்களை ஏமாற்றும் வில்லத்தனாமான கதாப்பாத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேஷனை வித்தியாசமான கோணத்தில் “நான் அவனில்லை” படத்தின் மூலம் காண்பித்திருந்தார்.

 

1975 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “அபூர்வராகங்கள்” தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகப்படுத்திய படமும் இதுதான். காதல் மன்னன் கமல்ஹாசனையும் இணைந்து ரஜினி நடித்த முதல் படமும் இதுதான். சிறந்த தமிழ்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் விருதும், சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் இந்த படத்திற்கு வழங்கப்பட்டது.

மன்மதலீலை, மூன்று முடிச்சு, அவர்கள், பட்டின பிரவேசம், நிழல் நிஜமாகின்றது போன்ற தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கில் இவர் எழுதி இயக்கிய “மரோ சரித்திரா” தெலுங்கு படம் கமல்ஹாசன், சரிதா, மாதவி நடித்திருந்த இந்த படம் தெலுங்கு படம் என்றாலும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த படம். இந்த படத்திற்காம் சிறந்த தெலுங்கு பட இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது.

1978 ல் வெளியான படம் தப்பு தாளாங்கள் இந்த படம் தமிழ் மற்றும் கண்ணடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது வழங்கப்பட்டது. இதே படம் மலையாளத்திலும் “கலுக்கன்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

“நினைத்தாலே இனிக்கும்” திரைப்படத்தையும் அதன் பாடல்களையும் எவராலும் மறக்கமுடியாது. அது போல் ரஜினி ஸ்டைலாக சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் காட்சி முதன் முதலில் இடம் பெற்றதும் இந்த படத்தில் தான். அன்று முதல் இன்று வரை அந்த ஸ்டைல் ரஜினி ரசிகர்களின் மனதில் நீங்காத நினைவாய் இன்றுவரை தொடர்கின்றது. இந்த படம் தெலுங்கு (ஆனந்தமாயின அணுபவம்) மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டபடம்.

1979 ல் “நூல்வேலி” படமும் தமிழ் மற்றும் தெலுங்கில்(குப்பெட்டு மனசு) ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.

ரஜினி மற்றும் கமல்ஹாசன் நடித்த “அவர்கள்” படத்தை தெலுங்கி “இதி கத காது” என்ற பெயரில் இயக்கினார்.

1980 வரை இருந்த இயக்குனர் சிகரத்தின் படைப்புகளில் ஒருவித மாற்றம். மாற்றம் என்பது புதிய பரிணாமத்தை நோக்கி இருந்தது. குறிப்பாக சமூக சிந்தனைகள் சார்ந்த படைப்புகளை கொடுத்தார். குறிப்பாக வறுமையின் நிறம் சிவப்பு, அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி போன்ற சமூக மற்றும் அரசியல் அக்கரை கொண்ட கதைகளை எழுதி இயக்கினார்.

“வறுமையின் நிறம்” சிவப்பு படம் “ஜாரா சி ஜிந்திகி” என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

1981 ல் வெளியான படம் “தில்லு முல்லு” நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் சிகரம் எழுதி இயக்கிய நகைச்சுவை படம். அதுவரை மீசையுடன் மட்டுமே பார்த்துகொண்டிருந்த ரஜினை மீசையில்லாமல் நடிக்க வைத்திருப்பார், படம் தொடங்கியது முதல் இறுதி காட்சிவரை நகைச்சுவைக்கு பஞ்சமில்லாம ஓரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல் இந்த படத்தை கொடுத்திருந்தார். எத்தனை முறை இந்த படத்தை பார்த்தாலும் பார்ப்பவர்களுக்கு புதிதாகத்தான் பார்ப்பது போல் இந்த படம் தெரியும்

1981 ல் ஹிந்தியில் வெளியான திரைப்படம் “ஏக் துஜே கேலியே” இன்றுவரை எத்தனையோ காதல் காவியப்படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் அவைகளில் முதன்மையாக இருக்கும். குறிப்பாக SPB பாடிய ஹிந்திப்பாடல் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் மொழி புரியவில்லையென்றாலும் உதடு முணுமுனுக்க வைக்கும்.

சிரஞ்சிவி, சரிதா, சரத்பாபு வைத்து “47 நாட்கள்” என்ற திரைப்படத்தை “47 ரோஜுலு” என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இயக்கினார்.

1983 ல் வெளியான “பொய்கால் குதிரை” திரைப்படம் இயக்குனர் சிகரத்தின் 50 வது திரைப்படம். இந்த படத்தில் கவிஞர் வாலியை சம்மந்தம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகார அறிமுகம் செய்தார். இயக்குனர் சிகரம். இந்த திரைப்படம் கிரேஸி மோகனின் “மேரேஜ் மேட் இன் சலூன்” என்ற நகைச்சுவை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.

நினைவலைகள் மீண்டும் கரையை நோக்கி….

இரண்டாம் பாகத்தில்..

 

                             





Movie Gallery

  • news

    Sheela Rajkumar

  • news

    Madhu Shalini

  • news

    Sneha

  • news

    Adah Sharma

  • news

    Nayanthara

  • news

    Remya Nambeesan

  • news

    Sshivada

  • news

    Ramya Pandian

  • news

    Priyamani

  • news

    Ritu Varma

  • news

    Keerthy Suresh

  • news

    Aishwarya Rai

  • news

    Charmy Kaur

  • news

    Charmy Kaur

  • news

    Dimple Hayathi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.