Join/Follow with Our Social Media Links
83 ல் சரித்திரம் படைத்த நிகழ்வு சினிமா டீசர்ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், Phantom ஃபிலிம்ஸ், வைப்ரி மீடியா, K A ப்ரெடெக்ஷன், நாடியாட்வாலா கிரேண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கபீர்கான் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 83 கபீர்கான் எழுதி இயக்கியுள்ளார் ஜூலியஸ் பேக்யம் இசையமைத்துள்ளார் அசீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார் நிதின் பைட் படத்தை தொகுத்துள்ளார் 25-06-1983 கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத நாள் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் வென்று சரித்திரம் படைத்த நாள் 1975 ல் முதல் உலக கோப்பை போட்டி தொடங்கியது இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று சாதனை படைத்தது 1979 ல் நடந்த இரண்டாவது உலக கோப்பை போட்டி, அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே கோப்பையை வென்றது 1983 ல் நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நிபுணர்களின் கணிப்பை பொய்யாக்கி இந்தியா கோப்பையை வென்றது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி லாட்ஸ் மைதானத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று, கோப்பையை வென்ற நிகழ்வை யாரும் எப்போதும் மறக்கவே முடியாது