சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு மற்றுமொரு தீபாவளி டீரிட்சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு தீபாவளி திருநாள் தொடங்கி விட்டது தீபாவளி திருநாளில் ரசிகர்களை மகிழ்விக்க வரவுள்ள சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் பாடல்கள் மற்றும் முதல் டீசர் வெளிவெந்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றது அண்ணாத்தே அண்ணாத்தே, சார காற்றே பாடலை தொடர்ந்து கடந்த 14-10-2021 ஆயுத பூஜையன்று டீசர் வெளியிடப்பட்டது அதை தொடர்ந்து மருதாணி சிவப்பு பாடலும் வா சாமி பாடலும் வெளியிடப்பட்டது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து சன் பிக்சர்ஸ் அண்ணாத்த படத்தை தயாரிக்கின்றது அல்டிமேட் ஸ்டாரின் விசுவாசம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகின்றார் சிவா டிஇமான் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கின்றார் வெற்றி ஒளிப்பதிவு செய்கின்றார் ரூபின் படத்தை தொகுத்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப் ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்திருக்கின்றனர்
அண்ணாத்த படம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ள இந்த சூழலில் மற்றுமொரு டீசர் இன்று (27-10-2021) வெளியிடப்பட்டுள்ளது