Article by : Admin on 03-09-2021
RES எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ராதகிருஷ்னா டெலு தயாரித்திருக்கும் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், இஷான், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரமணா கோபிஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். சாம் C S இசையமைத்துள்ளார். ஷ்யாம் K நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட் K வெங்கடேஷ் படத்தை தொகுத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டை பயிற்சி.
வரலக்ஷ்மி சரத்குமார், நடித்துள்ள இந்த திரைப்படம் ஆக்ஷ்ன் திரில்லர் அடிப்படையில் உருவாகவுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது.
இந்த படத்திற்கு தத்வமசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பு மோஷன் போஸ்டர் இன்று (03.09.2021) வெளியிடப்பட்டுள்ளது.