Join/Follow with Our Social Media Links

டைம் என்ன பாஸ்? (Time Enna Boss) வெப்சீரிஸ் விமர்சனம்..

பரத், ப்ரியா பவானி சங்கர் நடித்த டைம் என்ன பாஸ்? (Time Enna Boss) வெப்சீரிஸ் விமர்சனம்..


கவிதாலயா சாரிபில் புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் இணைந்து தயாரித்திருக்கும் வெப்சீரிஸ் டைம் என்ன பாஸ்? சூப்பர் சுப்பு எழுதி இயக்கியிருக்கின்றார். இதற்கு மேட்லி புளூஸ் இசையமைத்துள்ளார். V.முரளி கிருஷ்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.R.M.அருண் படத்தை தொகுத்துள்ளார். 10 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் 18.09.2020 முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகின்றது. இந்த ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் அடிப்படையில் நகைச்சுவை  வெப்சீரிஸாக இது இருக்கின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைமில் இதை காணலாம்.

இதில் பாலா என்கின்ற பாலமுருகனாக பரத், டாக்டர் பாரதியாக பிரியா பவானி சங்கர். கிள்ளிவளவனாக ரோபோ சங்கர், ஹென்னா கிளார்க்காக சஞ்சனா சாரதி, பக்கியாக கருணாகரன் வாட்ஸ்மேன் சந்தோஷமாக அலெக்ஸாண்டர் பாபு, ரூன் ஜகம்மாக R.S.சிவாஜி, ஆளவாயனாக ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு: காலம் என்பது மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னிருந்து இருக்கின்றது இன்னும் இருக்கும். ஆனால் பல்வேறு காலசூழலில் இருந்தவர்கள் ஒரே காலத்தில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதே கதைக்கரு.

கதை:

பாலா என்கிற பாலமுருகன் சென்னையில் மென்பொருள் நிறுவணத்தில் பணிபுரிகின்றான். சென்னையில் ஒரு அபார்மெண்ட் எடுத்து தங்கியிருக்கின்றான். அவனுக்கு பிரைவசி என்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. கும்பலாக இருப்பது பிடிக்காது. அவனுக்கு அவன் சொந்தகாரர்கள் வருவதை கூட விரும்பமாட்டான்.

கி.பி 1976 ல் இஸ்ரோவில் டைம் மிஷின் சார்ந்த பிரிவில் பணிபுரிபவள் டாக்டர் பாரதி. அப்போது ஏற்படு ஒரு தவறு காரணமாக 2019 ல் பாலாவின் வீட்டிற்குள் வருகின்றார். அவளை தொடர்ந்து கி.பி 1000 (10 ஆம் நூற்றாண்டை) சார்ந்த கிள்ளிவளவனும் வருகின்றான். அவனை தொடர்ந்து கி.பி 2075 எதிர்காலத்தை சார்ந்த பக்கியும் வருகின்றான், இறுதியாக கி.பி. 1895 சார்ந்த ஹன்னா கிளார்க்கும்(ஆங்கிலோ இந்தியன்) வருகின்றாள்.

பாலாவின் அப்பார்ட்மெண்டில் வாட்ஸ்மேனாக இருப்பவன் சந்தோஷம். இவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முயல்கின்றான். ஒரு கட்டத்தில் அவர்களுடன் இணைகின்றான். அவன் ஆசை செம சிங்கர் பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற வேண்டும் என்பது தான்.

பாலாவின் அப்பார்மெண்ட்டிற்கு வந்த டாக்டர் பாரதி இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்தவர், கிள்ளிவளவன் தஞ்சை தேச சோழ அரசிலிருந்து ஒரு விழாவை சிறப்பிக்க பல்ல தேசத்திற்கு (தற்ப்போதைய) சென்னை) வந்தவர் கூவம் நதியில் குளிக்கும் போது டைம் டிரவலில் 2019 க்கு வந்தவன். பக்கி நடப்பு 2075 காலத்தில் வாழ்ந்தவன் அவனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட தெரியாதவன். ஹன்னா கிளார்க் சிறந்த பாடகி ராப் பாடலில் விருப்பம் கொண்டவர். 2019 ஆம் ஆண்டிற்கு வந்தவர்கள் பாலாவுடனே தங்குகின்றனர்.

நடப்பு ஆண்டு சூழலில் வாழ நினைக்கின்றனர். பக்கிக்கு பாலாவுடைய மென்பொருள் நிறுவணத்திலேயே வேலை வாங்கி கொடுக்கின்றான். ஆனால் அவனது திறமையாள் வெகுவிரைவில் பதவி உயர்வும் பெருகின்றான். டாக்டர் பாரதி ஒரு பள்ளியில் வேலையில் சேர முயற்சிக்கின்றாள் ஆனால் அங்கு பணிபுரியும் வேலையிலிருந்து தூக்கப்பட்ட ஆலவாயனுக்கு சொந்தமாக ரிச்சி தெரிவில் உள்ள செல்போன் கம்யூட்டர் கம்பெனியில் வேலைக்கு சேருகின்றாள். அங்கிருந்து எப்படியாது தவறுகளை சரிசெய்து பழைய காலத்திற்கு செல்ல முயற்சிக்கின்றாள். கிள்ளிவளவன் தனது சமையல் திறைமை காரணமாக ரூன் ஜஹம் ஹோட்டலில் பணிபுரிகின்றான். ஹன்னா கிளார்க் தன் பாடல் திறமையை வைத்து செம சிங்கர் பாட்டு போட்டியில் கலந்து கொள்ள முயச்சி [i]செய்கின்றாள்.

டாக்டர் பாரதிக்கு பிரில்லியண்ட் என்ற வார்த்தையை கேட்டால் தான் காதலன் கண்ணன் நினைவில் உறைந்துவிடுவாள் மீண்டும் கண்ணன் என்ற வார்த்தையை கேட்டால் நினைவு திரும்புவாள்

அதே ஹன்னா கிளார்க் தன் கழிப்பறையை அடுத்தவர்கள் உபயோக்கியோக்கிக் கூடாது. எல்லாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவள்.

தனிமையை விரும்பும் பாலாவிற்கு திருமணத்தில் விருப்பமில்லை. அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்பதே அவன் விருப்பம். சிறுவயதில் தான் பார்த்த மாமா மகளை கல்யாணம் செய்வதிலிருந்து தப்பிக்க நண்பர்கள் உதவி புரிகின்றனர். ஆனால் மாமா மகளை நேரில் பார்க்கும் போது அவன் எதிர்பார்த்ததைவிட அழகாக இருக்க அவளை திருமணம் செய்ய நினைக்கின்றான். ஆனால் முன்பே திட்டமிட்டபடி அவர் நண்பர்கள் தடுக்கின்றனர்.

பின் தன் நிறுவணத்தில் பணிபுரியும் பெண்ணை காதலிக்கின்றான். ஆனால் பக்கியும் அவளை காதலிக்க அந்த காதலையும் தடுக்கின்றான்.

டாக்டர் பாரதி மீண்டும் அவரவர்கள் காலத்திற்கு திரும்பி செல்ல மிஷினை கண்டுபிடிக்கின்றாள். அதன் வழியே அவரவர்கள் காலத்திற்கு திரும்பி சென்றனரா? என்பதே கதை.

பாராட்டுக்குறியவை:

இந்த லாக்டவுன் காலத்தில் கள்ள காதலன், பயோபிக், தீவிரவாதம், கொலை என்ற அடிப்படையிலான வெப்சீரியல்கள் பலரை ரசிக்க வைக்கும். ஆனால் காமெடி வெப்சீரியல்கள் என்பது அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒன்று. அந்த அடிப்படையில் இதை ரசிகர்கள் ரசிக்க முடியும்.

இதில் கிள்ளிவளவனாக நடித்திருக்கும் ரோபோ சங்கர் அந்த கதாப்பத்திரதிற்கு பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கின்றார்.

ஆங்கிலோ இந்தியன் ஹன்னா கிளார்க்கா நடித்திருக்கும் சஞ்சனா சாரதி ஆங்கிலோ இந்தியன் கதாப்பாத்திரத்தை கண்முன்னே நிறுத்தியிருக்கின்றனது சஞ்சனா சாரதி நடிப்பு. மிகவும் தத்தூருபமாக இருக்கின்றது.

நெருடலாணவை:

டைம் மிஷின் கோளாரில் பயணிக்கும் நபர்கள் ஏன் பாலாவின் வீட்டில் அதுவும் டாய்லெட் வழியாக வருகின்றனர் என்பதற்கான விளக்கம் இல்லை.

எப்பொழுதுமே ஒரு காலத்தை இணைக்கும் டைம் மிஷின் அடிப்படையிலான கதைகளில் எப்படி முடிப்பது என்ற தெளிவு வேண்டும். ஒருவர் மட்டும் சரியான காலத்திற்கு சென்ற போது மற்றவர்கள் போகமல் இருப்பதற்கான அடிப்படையில் தெளிவு இல்லை.

ஒரு வேலை இன்னொரு பகுதி எடுப்பதற்கான் முன்னெடுப்பாக வைத்து இதை இயக்குனர் கதாசிரியர் இந்த தொடரை முடித்துள்ளனரா? என்ற கேள்வி எழுகின்றது.

தொடர் ஆரம்பத்தில் இருந்த நகைச்சுவையின் தாக்கம் செல்ல செல்ல குறைவது போல தெரிவது ஏன்?

தொகுப்பு:

லாக்டவுன் காலத்தில் கள்ளக்காதல், கொலை, வன்முறை, ஆக்ஷ்சன், பயோபிக் அடிப்படையிலான் கதைகளை பார்த்து சலிப்புற்றவர்கள்  ஜாலியாக ஒரு வெப்சீரிஸ் பார்க்க விரும்புபவர்கள் அமேசான் பிரைமில் இந்த வெப் சீரிஸை பாக்கலாம். லாஜிக்கெல்லாம் பார்க்காதீர்கள்.



Movie Gallery

  • review

    Dimple Hayathi

  • review

    Sonakshi Sinha

  • review

    Shriya Saran

  • review

    Sayyeshaa

  • review

    Malavika

  • review

    Anjali

  • review

    Malavika Mohanan

  • review

    Priyamani

  • review

    Lakshmi Gopalaswamy

  • review

    Vidya Pradeep

  • review

    Megha Akash

  • review

    Anikha

  • review

    Sherin Shringar

  • review

    Aishwarya Rai

  • review

    Ramya Krishnan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.