Join/Follow with Our Social Media Links

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்




சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். D இமான் இசையமைத்துள்ளார். R ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தை தொகுத்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யா கண்ணபிரான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் ஆதினி கதாப்பாத்திரத்தில் கண்ணபிரான் காதல் மனைவியாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் ஆதிராயர் கதாப்பாத்திரத்தில் கண்ணபிரான் தந்தையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன் கோசலை கதாப்பாத்திரத்தில் கண்ணபிரான் தாயாக நடித்துள்ளார். வினய் ராய் வில்லனாக இன்பா என்கிற இன்பசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மதுசூதனராவ் இன்பாவின் தந்தையாக நடித்துள்ளார். ஹரீஸ் பேராடி இன்பாவின் மாமனாராக நடித்துள்ளார். இளவரசு ஆதினி தந்தையாக நடித்துள்ளார். தேவதர்ஷினி அஞ்சுமனி கதாப்பாத்திரத்தில் ஆதினி தாயாக நடித்துள்ளார். M S பாஸ்கர் கருப்பையா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி ஆதினி மாமா சூலாமணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் வேல ராமமூர்த்தி, புகழ், சாய் தீனா, சுப்பு பஞ்சு போன்றோரும் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

சமூக வலைதளங்கள் மூலமும் காதலில் விழ வைத்தும் பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்து மிரட்டும் வில்லனை பெண்களின் காவலனாக இருக்கும் நாயகன் சட்டப்படி தண்டிக்க முயல்கின்றார். முடியாமல் போகவே சட்டத்தை கையிலெடுத்து வில்லன்களை கொன்று பெண்களை காப்பாற்றுவதே கதைக்கரு.

கதை.:

வடநாடு, தென்நாடு இரு கிராமங்கள் தங்கள் கிராமங்களிலேயே பெண் கொடுத்து பெண் எடுத்து கொள்ளும் அமைதியான கிராமம். தென்னாட்டை சேர்ந்தவர்கள் பெண்களை மிகவும் மதிப்பவர்கள். வட நாட்டில் தென்னாட்டை சேர்ந்த ஒரு பெண் கணவனின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் தென்னாட்டை சேர்ந்தவர்களுக்கும் வடநாட்டை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இரு கிராமங்களிலிருந்து திருமண பரிமாற்றங்கள் எல்லாம் தடைபடுகிறது.

தென்னாட்டை சேர்ந்ததவர் ஆதிராயர் அவர் மனைவி கோசலை. அவர்களது மகன் கண்ணபிரான் அறிவியல் தெரிந்த ஒரு வழக்கறிஞர். அவர்களது ஒரே மகளை பால்ய பருவத்திலேயே பாலியல் கொடுமை செய்து கொன்றுவிடுகின்றனர். அந்த குழந்தையை தங்கள் வீட்டு தெய்வமாக பாவித்துவருகின்றனர்.

வடநாட்டை சேர்ந்த இளவரசு மற்றும் அஞ்சுமணியின் மகள் ஆதினி. அஞ்சுமணி தென்னாட்டை சேர்ந்தவள். ஆதினியின் தாய்மாமன் சூலாமணி. கண்ணபிராணும் ஆதினியும் காதலிக்கின்றனர். ஆனால் இரண்டு ஊருக்கும் பிரச்சனை என்ற காரணத்தால் பெண் கொடுக்க மறுக்கிறார் ஆதினியின் தந்தை.

அதே நேரம் வடநாட்டை சேர்ந்த அமைச்சரின் மகன் இன்பா என்ற இன்பசேகரன். மிகவும் மோசமான குணம் கொண்டவன். இவனின் செயல்களை தட்டி கேட்ட மனைவியையே கொலை செய்துவிட்டு டிரைவருடன் அவள் ஓடிவிட்டதாக மாமனாரிடம் சொல்கிறான். மருமகன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர் தன் மகளை கண்டுபிடித்து கொல்லப்போவதாக சொல்கிறார். ஆனால் எந்த டிரைவருடன் ஓடிப்போனாள் என்று இன்பா கதைகட்டி விட்டானோ அந்த டிரைவரையும் கொன்றுவிடுகிறான்.

இன்பா தன் பணக்கார தீய குணம் கொண்ட நண்பனுக்கு ஆதினியை கட்டிவைக்க இளவரசுவிடம் பேசி சம்மதம் வாங்குகிறான்.

தன் மகன் கண்ணபிரானின் காதலுக்கு உறுதுணையாக அவனின் தாயும் தந்தையும் இருக்கின்றனர். ஆதினியை கடத்தி திருமணம் செய்துகொள்ள சொல்கின்றனர். வடநாட்டின் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அவளை கடத்த சொல்கின்றனர். இதை கேள்விபட்ட ஆதினியின் தந்தை தன் மச்சான் சூலாமணியின் உதவியுடன் தடுக்க முயல்கிறான். அதே நேரம் இன்பாவின் நண்பனிடம் இன்பா, ஆதினியை கடத்த முயலும் போது கண்ணபிராணை கொல்ல சொல்கிறான். ஆனால் கண்ணபிரான் ஆதினியை கடத்தாமல் கோயில் கும்மாபிஷேகத்தின் போது கோயில் கோபுரத்தை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆதினி கழுத்தில் தாலியை கட்டுகிறான். அப்போது ஆதினியின் தோழி யாழினிக்கு ஆபத்து என்று தெரிந்து அவளை காப்பாற்ற செல்கிறான் கண்ணபிரான். அவளை கடத்த முயல்பவர்களை அடித்து போட்டுவிட்டு அவளை காப்பாற்றுகிறான் கண்ணபிரான். யாழினி தன் காதலனை சந்திக்க செல்லும் போது அவள் காதலன் நாம் நன்றாக வாழ இன்பாவின் வியாபார பார்ட்னருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்கிறான். அங்கிருந்து தப்பிவந்த யாழினையைத்தான் கண்ணபிரான் காப்பாற்றினான்.

ஆதினியின் தந்தை கண்ணபிரான் ஆதினியின் திருமணம் செல்லாது என்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஆனால் ஆதினிக்கு தாலி கட்டும் முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிய வருகிறது. அந்த திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டது தன் மனைவி அஞ்சுமணி தான் என்று தெரிந்து கொள்கிறார். வேறுவழியில்லாமல் திருமணத்தை ஏற்றுகொள்கிறார்.

இன்பா கண்ணபிரானிடம் யாழினியை ஒப்படைத்துவிடு இல்லையென்றால் நான் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட பெண்களை ஆபாசப்படம் எடுத்துள்ளேன். அதையெல்லாம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வேன் என்று சொல்கிறான். கண்ணபிரான் அதிர்ச்சியடைகிறான். சட்டத்தின் வாயிலாக நியாயத்தை நிலை நாட்டவும் அந்த பெண்களின் ஆபாசப்படங்கள் வெளிவராமல் தடுக்கவும் முயல்கிறான்.

இதை கேள்விப்பட்ட இன்பா கண்ணபிரானின் மனைவி குளிக்கும் போது படமெடுத்து அந்த படத்தை கண்ணபிரானுக்கும் ஆதினிக்கும் அனுப்புகிறான். ஆதினி மணமுடைந்து போகிறாள். ஆனால் கண்ணபிரான் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். இதில் உன் தவறு எதுவுமில்லை. உன் போல் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நீதான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்களையெல்லாம் ஒன்று திரட்டி வழக்கு போடலாம் என்று சொல்கிறான். வழக்கை தன் மனைவியின் பெயரிலே பதிகிறான் கண்ணபிரான். யாழினியின் காதலனாக ஏமாற்றியவனை கடத்தி சாட்சியாக்க முயல்கிறான். ஆனால் இன்பா அவனை கண்டுபிடித்து கொன்று அவன் பிணத்தை கண்ணபிரான் வீட்டிலேயே போட்டு மறைக்கிறான்.

பணபலம், அரசியல் பலம், சூழ்ச்சி போன்றவற்றால் வழக்கில் தோற்றுப்போகிறான் கண்ணபிரான். கொலைப்பழி வேறு சுமக்கிறான். இந்த கொலை காரணமாக கண்ணபிரானும் அவனது தந்தை ஆதிராயரும் கைது செய்யப்படுகின்றனர்.

ஜாமினில் வெளியில் வரும் கண்ணபிரான் சட்டத்தை தன் கையிலெடுத்து தவறு செய்த அனைவரையும் தண்டிக்கிறான். வீடியோவும் வெளியில் வராமல் தடுக்கிறான்.

பாராட்டுக்குறியவை.:

பாண்டிராஜ் சூர்யா இருவரும் இணைந்து பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் படங்களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்ற அடிப்படையில் இணைந்து இருந்ததை அனைவரும் அறிவர். இந்த படத்தை தன் பாணியிலும் மாஸ் ஹீரோவான சூர்யாவின் பாணியிலும் சரியான கலவையில் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களின் மூலம் பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை அடிப்படையாக கொண்டு கதை களத்தை உருவாக்கியுள்ளார். இன்றைய சூழலுக்கு பொருத்தமாக இந்த படம் பார்ப்பவர்களின் மனவோட்டத்தை எளிதாக கவர முடியும் என்ற இயக்குனர் எண்ணம் பாராட்டுகுறியது.

முதல் பாதி படம் தனக்காவும் இரண்டாம் பாதி படம் சூர்யாவிற்கும் என்ற அடிப்படையில் பாண்டிராஜ் கொடுத்துள்ளார்.

கொராண பெருந்தொற்று காலத்தில் முதன் முதலில் பெரிய நடிகரின் திரைப்படம் ஓடிடியில் வெளியானது சூர்யாவின் படம் தான். சூரரை போற்று திரைப்படம் மற்றும் ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி வெளியீடு திரையரங்க உரிமையாளர்களை இது அதிர்ச்சியடைய வைத்தது. அது மட்டுமின்றி இந்த இரண்டு திரைப்படமும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டது என்று சொல்லிவிட்டு பல சம்பவங்களை வியாபார யுக்திக்காக திரித்து எடுத்தது சர்சைக்குறியதாக மாறியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் எவ்வித பெரிய சர்ச்சையுமின்றி ஒளிபரப்பாகிறது. சூர்யா தன் பழைய பாணியில் காதல் நாயகனாகவும், ஆக்ஷ்ன் நாயகனாகவும் அருமையாக நடித்து ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளார்.

பிரியங்கா அருள் மோகன் டாக்டர் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அவருக்கு நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை இந்த படத்தில் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்திக்கொண்டு அருமையாக நடித்துள்ளார். அழகுப்பதுமையாக காதலியாகவும், பாலியல் வீடியோவால் பாதிக்கப்படும் போதும் உணர்ச்சி ததும்ப நடிக்கும் போதும் சபாஷ் போட வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிற்கு அந்த கோயில் கும்பாபிஷேக காட்சி ஒன்றே போதும் சபாஷ் போட வைக்கிறார்.

நெருடலானவை.:

இன்பாவாக நடித்திருக்கும் வினய்ராய் டாக்டர் பட மூடிலிருந்து அவர் இன்னமும் வெளியில் வராமலேயே இருக்கிறார். அதில் நடித்ததை போலவே அதே முகபாவம். ஒரே மாதிரியாக நடிக்காமல் வித்தியாசமாக நடிக்க அவர் முயலவேண்டும்.

பெண்னை கடத்தி கல்யாணம் செய்துகொள் என்று ஒரு தந்தை சொல்கிறார். அதை டயலாக் மூலம் அழுத்தமாக சொல்கிறார். சற்று நெருடலாக இருக்கிறது. பெண்களை பெற்ற தந்தையின் மனவோட்டத்திலிருந்து பார்த்தால் இது வேதனையான விஷயம். குடும்ப கதைகளை அனைவரின் கண்ணோட்டத்திலிருந்து ஆய்ந்து அழகாக எடுக்கும் பாண்டிராஜ் இப்படி ஒரு காட்சி வைத்திருப்பது சற்று நெருடலாக இருக்கிறது.

முந்தைய படமான ஜெய் பீம் படத்தில் போராடி நீதி வாங்கி கொடுத்த சூர்யா கதாப்பாத்திரம் இந்த படத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கையில்லாமல் சட்டத்தை கையிலெடுப்பது போன்ற பாத்திரப்படைப்பு. சினிமா என்பது வணிக ரீதி அடிப்படையில் மாற்றம் பெறலாம். ஆனால் ஜெய் பீம் கதாப்பாத்திரம் மனதில் நிற்கும் போது உடனடியாக அதற்கு எதிர்மறையான கதாப்பாத்திரம். கொஞ்சம் மனம் காட்சியோடு ஒன்ற மறுக்கிறது.

சூரி கதாப்பாத்திரம் பெரிய அளவு மனதில் நிற்க மறுக்கின்றது. அவர் காமெடி தேசிங்கு ராஜா படத்தின் காமெடியை நினைவுபடுத்துக்கிறது. நாயகனும் நாயகியும் படத்தின் ஓட்டத்திலேயே காமெடி செய்கின்றனர். அதனால் சூரியை ஒப்புக்கு படத்தில் வைத்துள்ளதை போன்றே உணர முடிகிறது.

சண்டை காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. ஆனால் தெலுங்கு படங்களின் சண்டைகாட்சிகளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

சமூக வலைதளங்களின் மூலம்தான் இன்றைய பெரும்பாலான பாலியல் குற்றங்கள் நடக்கின்றது. அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். அதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்பட அடிப்படையாக அமைந்திருக்கும்.

இறுதி காட்சி சினிமாவிற்கு என்று புணையப்பட்ட காட்சிகளாகத்தான் இருக்கிறது. தன் மகன் எவ்வளவு தவறு செய்திருந்தாலும் அவனை காப்பாற்றவே அவன் பெற்றோர்கள் அவனை சார்ந்தவர்கள் முயல்வார்கள். அவர்களே தங்கள் குழந்தைகளை கொல்வார்களா? இது லாஜிக்கான விணா? சினிமா மேஜிக்கில் சில லாஜிக்கை கடந்து போகலாம்.

தொகுப்பு:

நீண்ட இடைவெளிக்குப்பின் சூர்யாவின் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அடிப்படையில் இருக்கிறது. சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி குடும்ப படங்களை பார்க்க விரும்புபவர்களையும் திருப்திபடுத்தியுள்ளனர். மொத்தத்தில் எதற்கும் துணிந்தவனை துணிந்து பார்க்கலாம்.

Movie Gallery

  • review

    Ramya Pandian

  • review

    Anandhi

  • review

    Reba Monica John

  • review

    Nivetha Thomas

  • review

    Sakshi Chaudhary

  • review

    Reshma Pasupuleti

  • review

    Raiza Wilson

  • review

    Poonam Bajwa

  • review

    Raashi Khanna

  • review

    Dushara Vijayan

  • review

    Athulya Ravi

  • review

    Sneha

  • review

    Madonna Sebastian

  • review

    Regina Cassandra

  • review

    Deepa Sannidhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.