Join/Follow with Our Social Media Links

வாழ் திரை விமர்சனம்

வாழ் தமிழ் திரைப்படம் திரை விமர்சனம்


SK புரெடெக்ஷன் கம்பெனி சார்பில் சிவகார்திகேயன் தயாரித்துள்ள படம் வாழ்”. அருவி திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.. பிரதீப், T J பாணுதிவா தவான், நித்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் சோனிலிவ் ஒடிடி தளத்தில் 16.07.2021 முதல் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது.

 

கதை கரு:

ஒரு மனிதன் வாழ வேண்டும் . வாழ்கை எவ்வளவு சுகமானது. பிரச்சனைகளை தாண்டி வாழ்கை என்பது கவித்துவமானது என்பதை சொல்ல விழைந்திருக்கும் கதை.

நான் என் முகநூல் பக்கத்தில் எழுதியது

“மரணமே நீ வா..

நான் காத்திருக்கின்றேன்

அதுவரை நான்

 இந்த வாழ்கையை

வாழ்ந்து பார்க்கின்றேன்”

இதே கருத்தை பல கவிஞர்களும் பலவிதமாக சொல்லியிருக்கின்றனர். அதே கவித்துவ அடிப்படையே இந்த கதை.

 

கதை:

பிரகாஷ் (பிரதீப் குமார்) போலரிஸ் மென்பொருள் நிறுவணத்தில் பணிபுரிகின்றான். ஜணனி அவன் காதலி ஆனால் ஒரு மாத கால இடைவெளியிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு ஜணனியின் காதலை உதறித்தள்ளுகின்றான் பிரகாஷ். பிரகாஷின் தங்கை தாரணி அவள் தினேஷ் என்பவனை காதலிக்கின்றாள். ஆனால் பிரகாஷ் மற்றும் அவனின் குடுப்பத்தினர் இந்த காதலை எதிர்க்கின்றனர். இந்த வேலையில் அமெரிக்காவில் இருக்கும் பிரகாஷின் மூத்த சகதோரிக்கு மகப்பேறு காலம் என்பதால் அவருக்கு உதவ தாய் வசந்தியும் தந்தையும் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். தாரனி வீட்டை விட்டு வெளியேறி தினேஷை திருமணம் செய்துகொள்கின்றாள். சராசரி மனிதன் வாழ்கையை சுவரஸ்யமாக வாழ நினைக்கின்றான்.

இந்த வேலையில் அமெரிக்காவில் இருக்கும் பிரகாஷ் தாய் போன் செய்து ஊரில் ஜட்ஜ் தாத்தா இறந்துவிட்டதாகவும் சென்று துக்கம் கேட்டு வரவும் சொல்கின்றார். பிரகாஷ் ஜட்ஜ் தத்தா இறுதி சடங்கில் விரும்பமின்றி கலந்துகொள்ள செல்கின்றான். அங்கே ஒரு பெண்னை பார்க்கின்றான். அவள் அழகில் மயங்கி ஈர்க்கப்படுகின்றான். அவனுக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்படுகின்றது. அவளிடம் தனியாக பேச விரும்புகின்றான். அவள் கும்பகோனத்தை சேர்ந்தவள் என்றும் பிரகாஷை சிறுவயதிலிருந்தே தெரியும் என்று சொல்கின்றாள். பிரகாஷிடம் அவன் மொபைல் எண்ணையும் தாய் வசந்தியின் மொபைல் எண்ணெயும் வாங்குகின்றாள். அப்போது யாத்ரா என்ற சிறுவன். மனவளர்ச்சி குன்றியவன் என்று சொல்வதைவிட பிற குழந்தைகளிடமிருந்து மாறுபட்ட குணம் கொண்டவன் என்று சொல்லலாமே. யாத்ரா உட்கார வைத்திருந்த சவத்தை தள்ளிவிடுகின்றான். தள்ளிவிட்ட யாத்ராவை யாத்ராவின் தந்தை அருண் அடிக்கின்றான். அப்போது அந்த குழந்தை யாத்ராம்மாள் என்று கத்துகின்றான். பிரகாஷ் பேசிக்கொண்டிருந்த பெண் (யாத்ராம்மாள்) ஓடி சென்று குழந்தையை கணவன் அருண் அடிப்பதை தடுத்து நிறுத்துகின்றாள். யாத்ராம்மாளுக்கு (T J பாணு) திருமணம் முடிந்து குழந்தை இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகின்றான் பிரகாஷ்.

பிரகாஷ் இறுதிசடங்கு முடிந்து சென்னைக்கு செல்கின்றான். அதே நேரம் யாத்ராம்மாளும் தன் கணவன் அருணுடன் சென்னைக்கு செல்கின்றாள். சென்னையில் யாத்ராவை படுக்கையறையில் சமதானப்படுத்தி தூக்க வைக்க யாத்ராம்மாள் முயற்சிக்கின்றாள். ஆனால் யாத்ரா விளையாடிக்கொண்டே இருக்கின்றான். அருண் யாத்ராம்மாளை படுக்க கூப்பிடுகின்றான். ஆனால் யாத்ராம்மாள் யாத்ராவை சமதானப்படுத்துவதிலேயே குறீயாக இருக்கின்றாள். கோபம் கொண்ட அருண் யாத்ராவை அடித்து துண்புறுத்துகின்றான். மனைவியான நீ எனக்கு சுகம் கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்கின்றான். அருணை தள்ளிவிடுகின்றாள். கீழேவிழுந்த அருண் இறந்து விடுகின்றான்.  அருணின் பிணத்தை பிரிட்ஜில் வைத்து மறைந்துவிட்டு. யாத்ராவை கூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரரிடம் ஹைதரபாத் போவதாக சொல்லிவிட்டு பிரகாஷ் வீட்டிற்கு செல்கின்றாள்.

பிரகாஷிற்கு மீண்டும் யாத்ராம்மாளை பார்த்ததும் அவனுக்குள் இருந்த ஈர்ப்பு மீண்டும் துளிர்விடுகின்றது. யாத்ராவை கொஞ்சம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியில் சென்று வங்கியிலிருந்து பணத்தை எடுக்கின்றாள். அதே நேரம் பிரகாஷ் வீட்டை அதகளம் செய்கின்றான் யாத்ரா. வீட்டிற்கு திரும்பி வந்த யாத்ரம்மாள் பிரகாஷிடம் ரூ.70,000/- பணம் இருந்தால் கொடுக்குமாறு கேட்கின்றாள். விரைவில் திருப்பி கொடுத்துவிடுவதாக சொல்கின்றாள். பிரகாஷ் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கின்றான். இன்னொரு உதவி செய்யுமாறு கேட்கின்றாள். தன் தோழி நாகர்கோயிலில் இருப்பதாவும் இந்த பணத்தை அவருக்கு கொடுக்கவேண்டும் யாத்ராவை வைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் தனியாக போக முடியாது. கணவன் ஹைதராபாத் போயிருக்கின்றார் என்று பொய் சொல்கின்றாள். அதனால் இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு கூட வருமாறு கேட்கின்றாள். ஏற்கனவே ஒருவித ஈர்ப்பு அவள் மீது வைத்திருக்கும் பிரகாஷ் ஒத்துக்கொண்டு அவளுடன் காரில் நாகர்கோயில் புறப்படுகின்றான்.

நாகர்கோயில் செல்ல பைபாஸ் வழியே போகாமல் ஊருக்குள் சென்று இயற்கையை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்று சொல்கின்றாள். பிரகாஷும் அப்படியே செல்கின்றான். அங்கங்கு தங்கி செல்கின்றார்கள். அவள் நடவடிக்கை பிராகஷிற்கும் ஒருவகை இன்பத்தை கொடுக்கின்றது. பிரகாஷ் மற்றும் யாத்ராம்மாள் நெருக்கம் அதிமாகின்றது. அந்த நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள போகின்றாள். ஆனால் அங்கிருந்தவர்கள் காப்பாற்றுகின்றனர். அப்போது தான் பிரகாஷிடம் தன் கணவரை கொண்றுவிட்ட தகவலை சொல்கின்றாள். அதிர்ச்சியில் உறைந்து போகின்றான் பிரகாஷ். தன்னை பார்த்தால்  இளிச்சவாயனாக தெரிகின்றதா உன் கணவனை கொண்றூவிட்டு நீயும் தற்கொலை செய்து கொண்டு பைத்தியம் யாத்ராவை என்னிடம் ஒப்படைக்க நினைக்கின்றாயா? என்று கேட்கின்றான். யாத்ரா ஒன்றும் பைத்தியமில்லை அவன் புத்திசாலி என்கின்றாள். வேண்டுமானல் ஒரு பாட்டை கேள் என்கின்றாள். அப்போது யாத்ராவின் மனதில் அவள் பதியவைத்த வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைகின்றான். பிரகாஷ் மாமாவும் யாத்ராம்மாளும் சேர்ந்து அருண் அப்பாவை கொலைசெய்துவிட்டார்கள் என்று சொல்கின்றான். அதை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்கின்றான் பிரகாஷ். இந்த பாட்டை இவன் அடிக்கடி சொல்லமாட்டான் விரைவில் மறந்து விடுவான் என்று சொல்லி பிரகாஷை சமதானப்படுத்துகின்றாள். அந்த நேரத்தில் யாத்ராவும் பிரகாஷூம் காரை நிறுத்திவிட்டு தண்ணீர் பிடிக்க செல்கின்றான். அப்போது ஏற்படும் விபத்தில் யாத்ராம்மாள் இறந்துவிடுகின்றாள்.

அந்த வழியே வந்த போலிஸ் சந்தேகத்தின் பேரில் பிரகாஷை கைது செய்கின்றது. யாத்ராவும் பிரகாஷ் மாமா யாத்ராம்மாள் அருண் அப்பாவை கொலைசெய்துவிட்டனர் என்று சொல்கின்றான். போலிஸ் கைது செய்து அழைத்துக்கொண்டு செல்லும் வழியில் தான்யா (திவா தவான்) என்ற வெளிநாட்டு பெண்ணை மூன்று பாஸ்போட் வைத்திருந்தாக கைது செய்கின்றனர். அவளை மிகவும் அழகாக இருக்கின்றான். பிரகாஷ் மற்றும் தான்யா இருவரையும் ஒரே விலங்கில் பூட்டுகின்றனர், செல்லும் வழி நடக்கும் ஒரு போரட்டத்தை தடுக்க போலிஸ் முயலும் போது இருவரும் தப்பி செல்கின்றனர். யாத்ராவை அழைத்துக்கொண்டு பிரகாஷ், தான்யா மற்றும் யாத்ரா மூவரும் தப்பி உடண்குடி செல்கின்றனர். அங்கே ஏராளமான வெளிநாட்டினர் கார்ணிவல் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் தான்யா உதவி செய்பவள். பல வெளிநாட்டினர் பாஸ்போர்ட் இல்லாமல் தங்க தான்யா உதவிசெய்து கொண்டு இருக்கின்றாள். வாழ்கை சுகமானது அதை வாழ் என்று பிரகாஷிற்கு சொல்கின்றாள்.

பிரகாஷ், தான்யா மற்றும் யாத்ரா மூவரும் பொலிவியாவிற்கு செல்கின்றனர். அங்கே பொலிவியாவின் அழகைப்பார்த்தது வாழ்கையின் பிடிப்பு ஏற்படுகின்றது. அங்கே இருக்கும் பழங்குடியினர் அன்பு அவனை ஈர்க்கின்றது. தான்யா பிரகாஷிடம் உன் வாழ்கை நீ யாரை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள் எப்படி வேண்டுமானாலும் வாழ். ஆனால் வருடத்தில் முப்பது நாள் மட்டும் உனக்கா வாழ். உன் வாழ்கையை வாழ் என்று சொல்கின்றாள். பிரகாஷிற்கும் யாத்ராவிற்கும் பாசப்பிணைப்பு அதிகமாகின்றது. பிரகாஷ் மற்றும் யாத்ராவை விட்டு விட்டு தான்யா அவள் வாழ்கையை வாழ கிளம்புகின்றாள்.

பிரகாஷ் மற்றும் யாத்ரா இயற்கை அழகை ரசிக்கின்றனர். படகில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் மிகப்பெரிய காட்டில் பிரிகின்றனர். தண்ணீரில் ஒரு பாறை இடுக்கில் அவன் கால் மாட்டிக்கொள்கின்றது. அதிலிருந்து தப்பி யாத்ராவை தேடி கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு மீண்டும் இந்தியா வருகின்றான். அமெரிக்காவிலிருந்த பிரகாஷ் தாய் தந்தையும் இந்தியாவிற்கு வந்து விட்டனர். பிரகாஷ் உறவினர் போலீஸ் உயரதிகாரியின் தயவில் நடந்த நிகழ்வுகளை சொல்லி அருணை தான் கொலை செய்யவில்லை அருணை கொன்றது யாத்ராம்மாள் தான் என்றும். யாத்ராம்மாள் இறந்த்து ஒரு விபத்து என்று நீரூபித்து. யாத்ராவை தானே வளர்ப்பதாகவும் சொல்கின்றான். பிரகாஷ் வாழ்கையில் முப்பது நாளை அவனுக்காக வாழ முடிசெய்கின்றான்.

 

பாராட்டுக்குறியது:

காட்சிகளை கண்ணுக்கு விருந்தாக கொடுத்து இயற்கை அழகையெல்லாம் கண்ணுக்குள் நிறைத்த ஒளிப்பதிவாளருக்கு முதல் பாராட்டு. குறிப்பாக சென்னை முதல் நாகர்கோயில் வரை பயணிக்கும் வழித்தடத்தில் இயற்கை அழகை அழகாக காட்டியிருப்பார். அதே பொலிவியா பழங்குடியினர் பகுதி அவற்றை சார்ந்த இயற்கை பேரழ்கு.

இசையமைப்பாளர் அந்த இயற்கை காட்சிகளின் விழிசுவையை செவிச்சுவையாகவும் மாற்றிக்கொடுத்த பெருமை.

யாத்ராம்மாளாக நடித்திருக்கும் T J பாணு அழகாக இருக்கின்றார். அழகாக நடித்திருக்கின்றார்.

தான்யாவாக நடித்திருக்கும் திவா தாவன் கவர்ச்சிப்பதுமையாக தெரிந்தாலும் காவல் துறையுடன் அவர் போடும் சண்டைகாட்சி அருமை. கார்ணிவல் பார்ட்டியில் அவர் பாடும் அழகு புதுமையாக மட்டுமல்ல அழகு பதுமையாகவும் காட்சியளிக்கின்றார்.

பிரகாஷாக நடித்திருக்கும் பிரதீப் குமார் சராசரி மென்பொருள் நிறுவணத்தில் பணிபுரியும் நபராகவும், குறிப்பாக தண்ணீரில் கால் மாட்டிக்கொண்டு தவிக்கும் போதும். யாத்ராவை தேடும் போது உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

யாத்ராவாக நடித்திருக்கும் குழந்தையின் நடிப்பு அருமை.

 

நெருடலானவை:

முதன் முதலில் பிரகாஷ் யாத்ராம்மாளை பார்க்கும் போதே நெற்றிவகிடில் பொட்டு வைத்திருப்பாள். கல்யாணமான பெண்கள் தான் நெற்றிவகிடில் பொட்டு வைப்பார்கள். அதுகூட தெரியாமல் அவளை காதலிக்க முயல்வது போன்ற காட்டியமைப்பு ஏற்புடையதாக இல்லை. அதைவிட யாத்ராம்மாள் கல்யாணமானவள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைவது செயற்கையாக இருக்கின்றது.

யாத்ரம்மாள் கல்யாணமானவர் என்று தெரிந்தபின் பிரகாஷ் அக்கா என்று அழைப்பதும். அவள் மீது இருக்கும் ஈர்ப்பும் குறையாமல் இருப்பது போன்ற காட்சியமைப்பு நெருடலானவை.

எதற்க்கா வங்கியிலிருந்து யாத்ரம்மாள் பணம் எடுத்தாள், நாகர்கோயில் செல்வாதாக் பொய் சொன்னாள். இந்தியாவிலிருந்து கதை பொலிவியாவை நோக்கி நகர்கின்றது. காட்சியமைப்புகள் பல செயற்கைதனமாக திணிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகின்றது. கதை மற்றும் திரைக்தை ஒரு ஒழுங்கில்லாமல் எங்கெங்கோ அலைந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது காட்சியமைப்பு.

பிரகாஷ் தங்கை கதாப்பாத்திரம் தாரணி தேவையற்ற இடைச்செறுகள். அதே போல் கதை தொடங்கும் போதும் முடியும் போதும் வரும் காதலி ஜணனி கதாப்பாத்திரம். கதையில் ஒட்டாமல் பயணிக்கின்றது.

தான்யா கதாப்பாத்திரமும் இடைச்செறுகலாகத்தான் வருகின்றது. அது வாழ்கை தத்துவத்தை உணர வைக்கும் பாத்திரமாக வந்து செல்கின்றது.

தொகுப்பு::

படத்தில் கதை, திரைக்கதை போன்றவற்றையெல்லாம் மறந்துவிட்டு இயற்கையை ரசிக்கவும்,இயற்கையோடு இயைந்த இசையின அழகையும் மட்டும் ரசிக்கலாம்.

 

Movie Gallery

  • review

    Nithya Menen

  • review

    Catherine Tresa

  • review

    Gayathri

  • review

    Rukmini

  • review

    Vimala Raman

  • review

    Manju Warrier

  • review

    Athmiya Rajan

  • review

    Sunaina

  • review

    Surabhi

  • review

    Pooja Umashankar

  • review

    Manasa Radhakrishnan

  • review

    Keerthy Suresh

  • review

    Aishwarya Rajesh

  • review

    Trisha Krishnan

  • review

    Parvati Nair

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.