Join/Follow with Our Social Media Links

ஜகமே தந்திரம். திரைவிமர்சனம்..

17 மொழிகளில் வெளியான ஜகமே தந்திரம். திரைவிமர்சனம்..


YNOT ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள படம் “ஜகமே தந்திரம்”. இதை கார்திக் சுப்ராஜ் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார். தணுஷ் (சுருளி), ஐஸ்வர்யா லெக்ஷிமி (அட்டிலா), ஜேம்ஸ் காஸ்மோ (பீட்டர் ஸ்பிராட்), ஜிஜூ ஜார்ஜ் (சிவதாஸ்), கலையரசன் (தீபன்), ரோமன் ஃபியோரி (ஜான்), மாஸ்டர் அஸ்வந்த் அசோக் குமார் (தீரன்), வடிவுகரசி (மணிமேகலை), தீபக் பரமேஸ் (தரணி) மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் 18.06.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

கதைக்கரு:

இலங்கையில் நடந்த இனப்பிரச்சனையின் சர்வதேச அரசியலை மையமாக வைத்து, அந்த பிரச்சனையில் முக்கிய இடம் பிடித்த மூன்று நாடுகளான இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பின்னனியில் ஒரு கேங் ஸ்டார் அடிப்படையை இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஜகமே தந்திரம்” இந்த உலகமே தந்திரம், துரோகம் மற்றும் சூழ்ச்சியால் நிறைந்தது என்பதே கதைக்கரு.

கதை:

பீட்டர் மற்றும் சிவதாஸ் இரண்டு கேங் ஸ்டார் தலைவர்கள். பீட்டர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அந்த மண் அவர்களுக்குறியது இங்கே பிற நாட்டு அகதிகள் வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். சிவதாஸ் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருபவர். அகதிகளை சட்டப்படி குடியுரிமை அங்கீகாரம் வாங்கி கொடுக்க பணத்தேவைக்காக பல சட்ட விரோத செயல்களை செய்பவர். இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

தமிழகத்தில் மதுரையில் மணிமேகலையின் மகன் சுருளி, இவன் பிரபல ரவுடி, ஹோட்டலும் நடத்தி வருபவர் தன் திருமணத்திற்கு முதல் நாள் அணில் என்ற நகைவியாபாரியின் தம்பியை கொலை செய்கின்றான். ஹோட்டல் தொழில் செய்துவருபவன் என்று திருமணம் செய்து கொள்ள இருந்த மனப்பெண் சுருளி ஒரு ரவுடி கொலைகாரன் என்று சொல்லி திருமணத்திற்கு முதல் நாள் திருமணமே வேண்டாம் என்று நிறுத்தி விடுகின்றாள். ஆனால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் தன் வாழ்கையை தொடர்கின்றார். அப்போது அவன் ஹோட்டலுக்கு சாப்பிட விக்கி என்பவனும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் வருகின்றனர். அப்போது அங்கே அணில் ஆட்கள் சுருளியை கொலை செய்ய வருகின்றனர். அவர்களிடம் சண்டை போட்டு சுருளி விரட்டியடிக்கின்றான். அணில் பிரச்சனை அடங்கும் வரை ஒரு மாதம் எங்காவது வெளியூருக்கு செல்ல சுருளியின் நண்பர்கள் வலியுறுத்துகின்றனர்.

அந்த நேரத்தில் விக்கி மற்றும் ஜான் சுருளியை சந்திக்கின்றனர். லண்டனில் பீட்டருக்கு சிவதாஸை அழிக்க உதவுமாறும் வாரத்திற்கு 2லட்சம் பவுண்ட் தருவதாகவும் சொல்கின்றனர். அதை ஒத்துக்கொண்டு சிவதாஸை அழிக்க பீட்டருக்கு உதவ சுருளி ஒத்துக்கொள்கின்றான். லண்டனுக்கு விக்கி, மற்றும் ஜானுடன் சுருளி செல்கின்றான்.

சுருளி ஒரு பாரில் அட்டிலாவை சந்திக்கின்றான். பார்த்தவுடன் இல்லை இல்லை கேட்டவுடன் அவள் மீது கண்டதும் காதல் வருகின்றது. அதாவது பாரில் அவளை பார்க்கின்றான் அவள் காதோடு தான் நான் பேசுவேன் என்ற பாடலின் 4 வரிகளை பாடுகின்றாள் அதை கேட்டது அவள் மீது காதல் வந்துவிடுகின்றது. இலங்கை அகதியான அட்டிலாவிற்கு திருமணமாகி கணவன் இறந்துவிட்டான் 7 வயதில் தீரன் என்ற மகன் இருப்பதாக சொல்கின்றாள் இருந்து அவளை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றான்.

பீட்டருடன் சேர்ந்து சிவதாஸிற்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றான். பெரிய அளவு சிவதாஸின் கடத்தல் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றான். சிவதாஸின் வலது கரமாக இருப்பவனை கொலை செய்கின்றான். சுருளி கண்டுபிடித்து சிவதாஸ் கடத்துகின்றான். பணம் மட்டுமே தன் குறிக்கோள் என்று சொல்லும் சுருளிக்கு சிவதாஸ் அதிக பணம் கொடுப்பதாக சொல்கின்றான் பீட்டரை கொல்ல உதவ சொல்கின்றான். அதற்காக பீட்டரைவிட அதிக பணம் கொடுப்பதாக சொல்வதால் பீட்டரின் கூடவே இருந்து பீட்டரை அவனை கொல்ல உதவுவதாக சொல்கின்றான். அதன் அடிப்படையில் சிவதாஸ் மற்றும் பீட்டர் சந்திப்பை ஏற்படுத்து சமதானம் என்ற அடிப்படையில் கொல்ல திட்டம் தீட்டி கொடுக்கின்றான். சுருளியின் திட்டப்படி சிவதாஸ் பீட்டரை சந்திக்கின்றான். ஆனால் சிவதாஸ் பக்கம் இருப்பதாக நாடகமாடி பீட்டர் பக்கமே இருந்து சிவதாஸிற்கு துரோகம் செய்து பீட்டர் மூலம் சிவதாஸை கொல்கின்றான். அதற்கு பலனாக பீட்டர் லண்டனில் ஒரு தெருவையே சுருளிக்கு கடைகள் நடத்த கொடுக்கின்றான். லிட்டில் மதுரை என்ற அங்காடி தெருவை அமைக்கின்றான்.

சிவதாஸை துரோகத்தால் கொலை செய்த சுருளை கொல்ல சிவதாஸ் கூட்டத்தின் முக்கிய அவரது கரமாக செயல்பட்ட தீபன் முயற்கின்றான். சுருளி அட்டிலாவை சந்தித்து காதலை பகிர்ந்து கொல்ல முயலும் போது அங்கே வரும் தீபன் மற்றும் தீபன் ஆட்கள் மூலம் சுட்டு கொல்ல முயல்கின்றனர். சுடப்பட்டு ஆற்றில் விழும் சுருளியை அட்டிலா காப்பாற்றுகின்றாள். மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்து வீட்டிற்கு வரும் சுருளியை அட்டிலா விஷ ஊசி போட்டு கொல்ல நினைக்கின்றாள். அதை பார்த்த சுருளி அவளை அடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்கின்றான்?

அட்டிலா, கணவன், குழந்தையுடன் இலங்கையில் வாழ்ந்த தமிழர் என்றும் அப்போது நடந்த குண்டு மழையில் கணவன் இறந்து போக தன் சகோதரனுடன் வாழ வழியின்றி அகதியாக சகோதரனை கணவன் என்று பொய் சொல்லி குழந்தையுடன் நாடு நாடாக சுற்றி திரிந்து லண்டனை நோக்கி அகதிகளின் பாதுகாவலனான சிவதாஸை சந்திக்க பயணித்துக்கொண்டிருக்கும் வேலையில் அட்டிலாவின் சகோதரர்(கணவராக நடிப்பவரை) கைது செய்யப்பட்டு பீட்டர் தனிச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அட்டிலாவிற்கு அடைக்கலம் கொடுத்து ஒரு சகோதரனாக இருந்தவர் சிவதாஸ் என்றும் அவள் சுருளிமேல் கொண்ட காதலை உணர்ந்த சிவதாஸ் சுருளியை தன் பக்கம் இருந்து பீட்டரை கொல்ல உதவு செய்யுமாறும் சொன்னதாக சொல்கின்றாள். ஆனால் சுருளியின் துரோகச்செயலால் சிவதாஸ் கொல்லப்பட்டது. அதனால் ஏராளமான அகதிகள் பாதுகாவலன் இல்லாமல் தவிப்பதாகவும் சொல்கின்றாள். அது மட்டுமின்றி அகதிகளுக்கு எதிராக லண்டனின் நிறைவேற இருக்கின்ற பைக்காரா சட்டத்தை தடுத்து நிறுத்த முயற்ச்சித்தாக சொல்கின்றாள். சுருளியின் துரோக செயலுக்காக அவனை அட்டிலா கொல்ல துணிந்ததாக சொல்கின்றாள். அவளின் பாதிப்பை உணர்ந்து திருந்திய சுருளி அவளுக்கும் அகதிகளுக்கும் சிவதாஸ் உதவியாளன் தீபனுடன் திட்டம்தீட்டுகின்றான்.

இதற்கிடையில் பீட்டர் இவன் திட்டத்தையும் பைக்கார சட்டம் நிறைவேற்றவும். பைக்கார சட்டத்திற்கு எதிராக செயல்படும் தலைவனை சுருளியை வைத்து கொல்ல திட்டம் தீட்டி அதில் அவனை மாட்டவைத்து ஒட்டு மொத்த அகதிகளை குற்றவாளிகளாக்க திட்டம் தீட்டுகின்றான்.

பீட்டரின் சதிதிட்டத்தை முறியடித்து பீட்டரையும் அகதியாகமாற்றுகின்றான் சுருளி.

பாராட்டுக்குறியது:

கேங் ஸ்டார் கதையில் ஜிகர்தண்டா படத்தில் ஒரு புதுமையை புகுத்து நகைச்சுவையாக கொடுத்த இயக்குனர். இந்த படத்தில் இலங்கை பிரச்சனை புகுத்தி திரைக்கதையை நகர்த்தியுள்ளார்

ரசிகர்கள் விரும்பும் தனது வழக்கமான ஸ்டைலில் “ஜகமே தந்திரம்” படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

சந்தோஷ் நாராயணன் பின்னனி இசையில் ஹாலிவுட் பட பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆக்ஷன் படம் மூலம் தமிழில் அதிக அளவு நடிக்க வாய்ப்பில்லாத கதாப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷிமிக்கு இது நடிக்க வாய்ப்புள்ள கதாப்பாத்திரம்.

தணுஷ் தனது கதாப்பாத்திரத்தை இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப நடித்து அதகளப்படுத்தியுள்ளார்.

சிவதாஸாக நடித்துள்ள ஜீஜூ ஜார்ஜ் ஒரு கேங் ஸ்டார் தலைவனுக்குறிய கெத்தாக சிறப்பாக நடித்துள்ளார்.

 “ரக்கிட ரக்கிட” பாடல் ரசிகர்களை மகிழ்விக்கும்

 

நெருடலானவை:

இரண்டு கேங் லீடருடன் மதுரை கேங் சுருளியை இணைக்க செய்திருக்கு திரைக்கதை.. அதாவது ஒரு மென்பொருள் நிறுவண மீட்டிங்கில் கேங் ஸ்டாரை பற்றி சொல்ல சொல்கின்றனர். அங்கிருக்கும் ஒரு மென்பொருள் பொறியாளார் மதுரை ரவுடியை பற்றி சொல்ல அதில் கவர்ந்த இங்கிலாந்தின் பல கோடிகளுக்கு அதிபதியான கேங் ஸ்டார் தனது எதிரியை அழிக்க மதுரை ரவுடியை லண்டனுக்கு வரவழைப்பது என்பது காதில் பூசுற்றலாம்  ஆனால் அதை விடுத்து காதுக்குள் பூந்தோட்டத்தையே உருவாக்க இயக்குனர் முயற்சித்துள்ளார்.

இயக்குனருக்கு இன்னும் தான் இயக்கிய பேட்ட படத்தின் பாதிப்பு இன்னும் போகவில்லை என்றே தோன்றுகின்றது. பேட்ட படத்தின் இளம்வயது ரஜினியின் கதாப்பாத்திரத்தை அப்படியே காப்பியடித்து சுருளி கதாப்பாத்திரதை வடிமைத்துள்ளார்.

பீட்டராக நடித்த ஜேம்ஸ் காஸ்மோ நடிப்பு அவரை பெரிய கேங் லீடராக மிரட்டாமல் ஒரு காமெடியனைப்போல் இருக்கின்றது பேருக்கு ஒரு முதல் காட்சி மட்டும் மிரட்டலாக வைத்துவிட்டு மற்ற காட்சிகளில் எல்லாம் பீட்டர் காமெடியனாகவே தெரிகின்றார். ஒருவேலை இயக்குனரின் எதிர்பார்ப்பும் அப்படித்தான் காட்டவேண்டும் என்று இருந்திருக்கலாம்/

இலங்கை பாதிப்புகளை பதியவைக்க இலங்கை தமிழர் பகுதிகளில் ஒரு குண்டு மழை பொழிவு காட்சியமைத்துள்ளார். அந்த காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் மற்ற காட்சிகளை போலவே கடந்து போவதை போன்று இருக்கின்றது.

கேங் லீடர் பிரச்சனைகளை சொல்ல வந்தாரா? அகதிகள் பிரச்சனையை சொல்ல வந்தாரா? சொல்லவந்த எதையும் அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்யவில்லை.

தொகுப்பு:

தீவிரவாதி போராளி இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் பார்வையின் கோணம். அதே போல் இந்த படம் சில பல லாஜிக் மீறல்களை விடுத்து இயக்குனரின் பார்வையிலிருந்து இந்த படத்தை பார்த்தால் ரசிக்கலாம்.. விமர்சனங்களை தாண்டிய சராசரி ரசிகனின் பார்வையில் இந்த படம் விறுவிறுப்பாக இரண்டரை மணிநேரம் கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கலாம் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்..

Movie Gallery

  • review

    Mehreen Pirzada

  • review

    Ananya

  • review

    Prayaga Martin

  • review

    Dharsha Gupta

  • review

    Nandita Swetha

  • review

    Sneha

  • review

    Keerthy Suresh

  • review

    Vani Bhojan

  • review

    Amritha Aiyer

  • review

    Sshivada

  • review

    Varalaxmi Sarathkumar

  • review

    Sreeleela

  • review

    Nidhi Agarwal

  • review

    Sanjitha Shetty

  • review

    Anandhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.