
Article by : Admin on 29-07-2021
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்ணேஷ் சிவன் தயாரித்துள்ள படம் நெற்றிக்கண். காதல் டூ கல்யாணம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் படங்களை இயக்கிய மிலிந்தி ராவ் இந்த படத்தை இயக்குகின்றார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தை தொகுத்துள்ளார்.
கிரைம் திரில்லர் அடிப்படையிலான, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதை நாயகியாக நடித்துள்ளார் கண் தெரியாதவராக நடிக்கின்றார். இவருடன் அஜ்மல், இந்துஜா, மணிகண்டன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கொரானா ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கியுள்ள சூழலில் ஒடிடி திரையுலகின் ஆபத்பாந்தவனாக இருக்கின்றது. நெற்றிக்கண் நீண்டகால பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒடிடியில் வெளியிடுவது உறுதிசெய்யப்பட்டது.
இன்று (29.07.2021) நெற்றிக்கண் படத்தின் டீசர் மற்றும் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் 13.08.2021 ல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
