Join/Follow with Our Social Media Links

நடிகர் மோகன்லால் பிரமமாண்ட படம் பிரமாண்ட வெளியீடு…

Article by : Admin on 23-06-2021

ஓணம் பண்டிகை பரிசாக மோகன்லால் பிரம்மாண்ட படம் திரையிட முடிவு செய்துள்ளனர்..

மலையாள திரையுலகில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் “மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” இந்த படம் தமிழில் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” என்ற பெயரில் கலைப்புலி தாணு வி கியேஷன் விநியோகஸ்தராக வெளியிடுகின்றார்.

மலையாளப்படத்தின் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன். தமிழில் சின்னமணி குயிலே என்ற படத்தை இயக்கியிருந்தார். கார்த்திக் ரேகா நடித்த அந்த திரைப்படம் ஏதோகாரணங்களால் இன்றுவரை வெளியிடப்படவில்லை. தமிழில் கோபுர வாசலிலே, சிறைச்சாலை, சிநேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், பொய் சொல்ல போறேம், நிமிர் சம் டைம்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மலையாள திரையுலகில் மோகன்லாலை நாயகனாக வைத்து அதிகப்படங்கள் இயக்கிய பெருமை பிரியதர்ஷனையே சாரும். “மரக்கார் அரபிக்கடலிண்டே சிங்கம்” பிரியதர்ஷன் மோகன்லால் கூட்டனியில் உருவாகியிருக்கும் மற்றொரு பிரம்மாண்ட படம். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். S.திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். M S ஐயப்பன் நாயர் படத்தை தொகுத்துள்ளார்.

மோகன் லால் (குஞ்சலி மரக்கார் IV), சுனில் ஷெட்டி (சந்திரோத் பணிக்கர்), மஞ்சு வாரியர் (சுபைதா), அர்ஜூண் (ஆனந்தன்), பிரனவ் மோகன்லால் (குஞ்சலி மரக்கார் IV இளம் வயது கதாப்பாத்திரம்), கீர்த்தி சுரேஷ் (ஆர்ச்சா), கல்யானி பிரியதர்ஷன் (ஆயிஷா), சுஹாசினி மணிரத்னம் (கதீஜூம்மா), பிரபு (தங்குடு), அசோக் செல்வன் (அச்சுதன்), முகேஷ் (தர்மோத் பணிக்கர்), சித்திக் (பட்டு மரக்கார்), நெடுமுடி வேணு (சம்மூத்திரி) பாசில் (குஞ்சலி மரக்கார் I) மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களின் கதாப்பாத்திரம் படங்களை கீழே காணலாம்.

26.03.2020 ல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரனா முதல் மற்றும் இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக இதன் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு 12.08.2021 இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு கேரளாவில் வேறு திரைப்படங்களை வெளியிடமால் அனைத்து திரையரங்கிலும் “மரக்கார் அரபிக்கடலிண்டே சிங்கம்” திரையிட கேரளா திரைத்துறையினர் அனைவரும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.

ஓணம் பண்டிகையில் ரசிகர்களின் பார்வைக்கு வருகின்றார் “மரக்கார் அரபிக்கடலிண்டே சிங்கம்”  அதே நாளில் தமிழிலும் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” என்ற பெயரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.















































Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Huma Qureshi

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Raai Laxmi

  • news

    Ragini Dwivedi

  • news

    Athmiya Rajan

  • news

    Sonakshi Sinha

  • news

    Sneha

  • news

    Saiyami Kher

  • news

    Anu Emmanuel

  • news

    Anupama Parameswaran

  • news

    Pranitha Subhash

  • news

    Parvati Nair

  • news

    Rahasya Gorak

  • news

    Regina Cassandra

  • news

    Surabhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.