வீட்ல விசேஷம் திரை விமர்சனம்பே வியூ புராஜெக்ட்ஸ் L L P மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ராகுல் இணைந்து தயாரித்துள்ள படம் வீட்ல விசேஷம் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற Badhaai Ho திரைப்படத்தின் மறு தமிழ்ப்பட உருவாக்கமாக வந்துள்ளது இப்படம் இப்படத்தை R J பாலாஜி மற்றும் N J சரவணன் இயக்கியுள்ளனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் இப்படத்தை செல்வா R K தொகுத்துள்ளார்
வீட்ல விசேஷம் திரைப்படத்தில் R J பாலாஜி இளங்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சத்யராஜ் உன்னி கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஊர்வசி கிருஷ்ணவேணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி சௌம்யா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் K P A C லலிதா உன்னி கிருஷ்ணன் தாயாக நடித்துள்ளார் விஸ்வேஷ் அனிருத் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பவித்ரா லோகேஷ் சௌம்யா தாயாக நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர்
கதைக்கரு:
திருமண வயதில் மகன் இருக்கும் போது ஒரு தாய் கருவுற்றால் குடும்பத்தில் ஏற்படும் மன உளைச்சலை சொல்லியிருக்கும் படம்
கதை:
இரண்டு வருடத்தில் ஒய்வு பெறவிருக்கும் ரயில்வே ஊழியர் உன்னி கிருஷ்ணன் தன் மனைவி கிருஷ்ணவேணி, தாய், மகன் இளங்கோ மற்றும் அனிருத்துடன் ரயில்வே காலனியில் வசித்து வருகிறார் டப்மேஷ் செய்வதில் விருப்பம் கொண்டவர் உன்னி கிருஷ்ணன்
இளங்கே ஒருபள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறான் அந்த பள்ளியின் நிர்வாகி சௌம்யா சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்கள் இப்போது காதலர்களாக இருக்கின்றனர் சௌம்யாவின் தாயார் கணவனை பிரிந்தவர் பல பள்ளிகூடங்களுக்கு நிர்வாகியாக இருப்பவர் இளங்கோவின் சகோதரன் அனிருத் பள்ளியில் படிப்பவன்
உன்னி கிருஷ்ணன் மனைவி கிருஷ்ணவேணி மிகவும் அன்பானவள் குழந்தைகளையும் தன் மாமியாரையும் மிகுந்த பாசத்துடன் கவனித்து கொள்பவள் மாமியாரோ தன் மருமகளை எதற்கெடுத்தாலும் திட்டிக்கொண்டே இருப்பவள் உன்னி கிருஷ்ணனோ மனைவி மீதும் தாயின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்
ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு செல்கிறாள் கிருஷ்ணவேணி அங்கே அவள் கர்பமாக இருப்பதாக சொல்கிறாள் உன்னி கிருஷ்ணன் இந்த வயதில் கருவுற்றால் சமூகம் தவறாக நினைக்கும் என்று சொல்கிறார் ஆனால் கிருஷ்ணவேணி இந்த குழந்தையை தான் பெற்றெடுப்பதாக சொல்கிறாள்
கிருஷ்ணவேணி கர்பமாக இருப்பதை வீட்டில் தெரிவிக்கின்றனர், அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் இளங்கோ, அனிருத் இருவரும் தன் தாயை வெறுக்கின்றனர்
வெளியில் சமூகம் அவர்களை அவமானப்படுத்துகிறது இளங்கோ பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுக்கிறான் அவன் பள்ளிக்கு வராத காரணத்தால் இளங்கோவின் வீட்டுக்கு செல்கிறாள் சௌம்யா