நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்பே வியூ புராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி Article 15 ஹிந்தி படத்தின் மறு உருவாக்கமாக உருவாகியுள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார் தீபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரூபன் படத்தை தொகுத்துள்ளார்
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விஜயராகவன் IPS கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் தான்யா ரவிச்சந்திரன் அதிதீ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரி குமரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஷிவானி ராமகிருஷ்ணன் குறிஞ்சி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி சர்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் யாமினி சந்தர் டாக்டர் அனிதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இளவரசு சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மயில்சாமி காண்ஸ்டெபிள் வில்லாளன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ராட்சஷன் சரவணன் காண்ஸ்டெபிள் நடராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ரமேஷ் திலக் வெங்கட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாயாஜி ஷிண்டே C B I அதிகாரியாக நடித்துள்ளார் அப்துல் விஜயராகவன் உதவியாளராக நடித்துள்ளார்
கதைக்கரு:
மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 15 ஐ முன்னிலைபடுத்தி ஜாதிய பிரிவினையை கலைந்தெறியும் அடிப்படையில் உருவாகியுள்ள படம்
கதை:
பொள்ளாச்சியில் தலித் பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவு தீண்டாமை கொடுமை இருக்கிறது தலித் பெண் சமைத்த பள்ளியின் சத்துணவு சமையலை கூட உண்ணக்கூடாது என்று தரையில் கொட்டுமளவிற்கு இருக்கிறது அந்த பகுதியில் கிருபாகரன் அரசியல்வாதியின் உறவினர் உயர் வகுப்பை சேர்ந்தவன் ஜாதிய பிரிவினையின் முதன்மையானவன் ஊரில் மட்டுமின்றி காவல்துறையிலும் இந்த ஜாதிப்பிரிவினை இருக்கிறது குமரன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் ஜாதிய பிரிவினைக்கு எதிராக செயல்படுபவன் குமரனை காவல்துறை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கிறது
அங்கே பணியிடமாற்றம் பெற்று வருகிறார் விஜயராகவன் IPS தேசத்தின் மீது வித்தியாசமான நல்ல கண்ணோட்டத்தை கொண்ட விஜயராகவனுக்கு இந்த ஜாதிய பிரிவினை புதிதாக தெரிகிறது அந்த அடிப்படையிலிருந்து விலகியிருக்கிறார் அவருடன் துணைகாவலராக பணிபுரிகிறான் உயர்வகுப்பை சேர்ந்த நடராஜ் அவன் தங்கை லக்ஷ்மி விஜயராகவன் வீட்டிலேயே வேலை செய்துகொண்டு படித்துக்கொண்டிருப்பவள்
தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கடத்தப்படுகின்றனர் அதில் இரண்டு பெண்கள் தூக்கிட்டு இறந்து கிடக்கின்றனர்