Article by : Admin on 31-07-2021
கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பென்ஞ் ஃப்லிம்ஸ் மற்றும் Passon ஸ்டுடியோ சார்பில் தயாரித்துள்ள படம் “பூமிகா”.. R.ரதிந்திரன் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ராபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் ஜெரால்டின் படத்தை தொகுத்துள்ளார்.
“பூமிகா”. படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 25வது படம் இது. இயற்கை பாதுகாப்பை அடிப்படையாக கொண்ட ஹார்ரர் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று அணுமானிக்கப்படுகின்றது.
கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பென்ஞ் ஃப்லிம்ஸ் மற்றும் Passion ஸ்டுடியோ சார்பில் தயாரித்த கீர்த்தி சுரேஷ் நடித்த “பெண்குயின்” திரைப்படம் அமேசன் பிரைம் ஒடிடி தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது. பூமிகா திரைப்படமும் ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என்றே எதிர்பார்க்கப்பட்ட சூழலில “பூமிகா” திரைப்படம் ஒடிடியில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..
ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படம் சோனிலிவ் ஒடிடி தளத்தில் 30.07.2021 முதல் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த சூழலில் “பூமிகா” பட வெளியீடு மகிழ்சியை கொடுக்கும் .
ஏற்கனவே பல படங்கள் நேரடியாக தொலைகாட்சியில் ரீலிஸாகிக் கொண்டு இருக்கின்றன. ஓடிடி தளத்திலும் கொரானா ஊரடங்கு காரணமாக ஒடிடி தள ஒளிப்பரப்பிலும் கடுமையான போட்டிகள் நிலவிக்கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் பல திரைப்படங்கள் ஒடிடி வெளியீட்டை தவிர்த்து நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஏற்கனவே நாங்க ரொம்ப பிஸி,, புலிகுத்தி பாண்டி, வெள்ளையானை, மண்டேலா போன்ற படங்கள் வரிசையில் “பூமிகா” திரைப்படமும் ஸ்டார் விஜய் டிவியில் 22.08.2021 மாலை 3.00 க்கு ஒளிபரப்பாகவுள்ளது.
Extremely happy to announce that #Boomika will have its Tamil Premiere on @vijaytelevision Cant wait 4 u all to watch my Eco thriller-horror directed by @RathindranR. @karthiksubbaraj @kaarthekeyens @Sudhans2017 @SureshChandraa @StonebenchFilms #PassionStudios#BoomikaonVijayTV pic.twitter.com/mm020Xnf0h
— aishwarya rajesh (@aishu_dil) July 31, 2021