Article by : Admin on 03-05-2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இருவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய (03 MAY 2021) RCB Vs KKR போட்டி தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
கொரோனா இரண்டாம் அலையின் தான்டவம் இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் நடுவே இவ்வளவு நாட்களாக தடங்கல் இல்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகளுக்கு இன்று பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே இன்று இரவு அஹமதாபாத்தில் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பயோபபுளுக்குள் (தனிமை படுத்தப்பட்ட குழுவிற்குள்) இருந்த கொல்கத்தாவின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வருண் சக்ரவர்த்தி மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. மருத்துவமனையில் அவருக்கு வழக்கமாக செய்யும் கொரோனோ சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்றும், வருண், சந்தீப்பைத்தவிர வேறு யாருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதியானாதால் இன்றையை போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மற்ற போட்டிகள் ஒத்தி வைக்கப்படுமா அல்லது நடந்திருக்கும் ஒரு சுற்றோடு தகுதி சுற்றுக்குள் நுழைய வாய்ப்பிருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.