Article by : Admin on 08-07-2022
லைகா புரெடெக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் மிகபிரமாண்ட படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுத்தில் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் சரித்திர கதையை திரைப்படமாக எடுக்க பலரும் முயன்றும் முடியாமல் போனது. அதை வெற்றிகரமாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இந்த சரித்திரகதைக்கு மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் இந்த படத்தை கண்ணுக்கு விருந்தாக ஒளிப்பதிவு செய்துள்ளார். A ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ரகுமான், ஜெயராம், ஷோபிதா துலிபலா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, நாசர் என்று ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் என்று சொல்வதைவிட சரித்திர கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 30 2022 ல் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் - 1 திரைப்பட டீசரை படக்குழு இன்று மாலை 08.07.2022 வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் - 1 டீசர் நம்மை அரசர்கள் காலத்திற்குள் பயணிக்க வைத்துள்ளது. டீசரே படத்தின் பிராமாண்டத்தை கண் முன்னே நிறுத்துக்கிறது
பொன்னியின் செல்வன் -1 (தமிழ்) டீசர் உங்கள் பார்வைக்கு