Article by : Admin on 23-04-2022
ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் S S லலித் குமார் தயாரித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து இடத்தை தக்கவைக்க வேண்டிய நெருக்கடியில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். S R கதிர் மற்றும் விஜய் கார்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். S ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், சீமா, ரெடின் கிங்ஸ்லி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் சரளம். குறிப்பாக நானும் ரௌடிதான் படம். ஆனால் டீசரிலேயே இரட்டை அர்த்த வசனகாட்சி வைத்துள்ளனர்.
காத்துவாக்குல் ரெண்டு காதல் படம் 28-04-2022 முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளது.
இப்படத்தின் டீசரை 22-04-2022 அன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு