Article by : Admin on 15-02-2022
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் இளைய தளபதி விஜய்யை வைத்து தயாரிக்கும் படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் முதன் முறையாக 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பையும் நெல்சன் பெற்றுள்ளார். நெல்சன் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கும் இசையமைத்த அனிருத் ரவிசந்தர் பீஸ்ட் படத்திற்கும் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பிய அனிருத் மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் இளைய தளபதி விஜய், முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் இந்த படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ (தமிழில் அறிமுகம்), ஜான் விஜய், V T V கணேஷ், ஷாஜி சென், அபர்னா தாஸ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் அனிருத் ரவிசந்தர், இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா செல்லம்மா பாடலை அனிருத் ரவிசந்தர் மற்றும் ஜொனைதா காந்தி பாடியிருந்தனர். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே.
இளைய தளபதி விஜய்க்காக பீஸ்ட் படத்திலும் அதே போல் பாடல் வரவேண்டுமென்று நெல்சன் விருப்பத்தின் பேரில் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டை அரபிக் வார்த்தையை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்பாடலை முன்பே ஹிட்டடித்த அனிருத் ரவிசந்தர் மற்றும் ஜொனைதா காந்தி கூட்டணி பாட நேற்று 14-02-2022 காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.
இந்த பாடலும் ரசிகர்களை பெரிய அளவு ஈர்த்தது மட்டுமில்லாமல், இளைய தளபதி விஜய் ரசிகர்களை பெரிய அளவில் கொண்டாட வைத்துள்ளது. பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் இரண்டரை கோடி பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
படபிடிப்பு முடிந்து குடும்பத்தினருடன் ஒய்வில் இருக்கும் பூஜா ஹெக்டே இந்த பாடல் வரிகளுக்கு ஆடிய வீடியோவும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
Do the #HalamithiHabibo with @hegdepooja@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @jonitamusic @manojdft @Nirmalcuts #Beast #BeastFirstSingle #ArabicKuthuChallenge pic.twitter.com/CsHfOEqe70
— Sun Pictures (@sunpictures) February 15, 2022
ரசிகர்களின் பேராதரவை பெற்ற பீஸ்ட் அரபிக் குத்து பாடல் உங்கள் பார்வைக்கு