Join/Follow with Our Social Media Links
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி RRR நாட்டு கூத்து பட பாடல் வெளியீடுDVV எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் DVV தனய்யா தயாரித்துள்ள படம் RRR இரத்தம் ரணம் ரௌத்திரம் பிரமாண்ட இயக்குனர் S S ராஜமௌலி இந்த படத்தை இயக்கியுள்ளார் பல வெற்றிப்படங்களின் கதையை எழுதியவரும் இயக்குனர் S S ராஜமௌலியின் தந்தையுமான K V விஜேயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் M M கீரவானி (மரகதமணி) இசையமைத்துள்ளார் K K செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் A ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார் RRR படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண், அஜய்தேவ்கன், ஆலியாபட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர் பாகுபலி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலியின் RRR திரைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது RRR படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக உருவாகிக்கொண்டிருக்கிறது RRR திரைப்படத்திலிருந்து இன்று (10-11-2021) நாட்டு கூத்து என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது M M கீரவானி (மரகதமணி) இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடலை சிப்லிகஞ்ச் மற்றும் யாசின் நிசார் பாடியுள்ளனர்