Article by : Admin on 05-08-2021
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் மட்டுமல்ல அது ஒரு பொக்கிசம். இந்த சரித்திர நாவலை ரசிக்க சரித்திரத்தில் ஆர்வம் தேவையில்லை. அமரர் கல்கியின் வரிகளுக்கு நாம் கற்பனை உருவம் கொடுத்தாலே போதும் பிரமாண்டத்தை மட்டுமல்ல சரித்திரத்தையும் காதலிகக்கும் சுகம் வந்துவிடும். பிற சரித்திர நாவல்களையும் நேசிக்கும் குணமும் வந்துவிடும். அப்படிப்பட்ட பொக்கிசத்திற்கு கற்பனைக்கும் ஒளி, ஒலி வடிவம் கொடுக்க முயன்றனர். ஆனால் கல்கியின் நுட்பமான எழுத்தாற்றால் மக்களை கதையுள் வாழவைக்கும் திறமையை அப்படியே ஒளி, ஒலியாக காட்ட முடியுமா? என்ற கேள்வி பல பிரபல நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருந்து வந்தது. அது மட்டுமின்றி இந்த படத்தை எடுக்க மிகபெரிய அளவு நிதி தேவைப்படும்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய இயக்குனராக இருக்கும் மணிரத்னம் இந்த படத்தை எடுக்க முயற்சி எடுத்துள்ளார். அதற்கு உறுதுணையாக லைகா பட நிறுவணத்துடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவணம் வாயிலாக இந்த படத்தை தயாரிக்கின்றனர். இயக்குனர் மணிரத்னம் இயக்கும் முதல் சரித்திரப்படமும் இதுதான். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் மற்றும் மணிரத்னம் ஆஸ்தான இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் இசையமைக்கின்றார். ரவிவர்மன் இந்த சரித்திர படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். A.ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுக்கின்றார். இந்த படத்திற்கான வசனத்தை மணிரத்னம், இளங்கோ குமராவேல் மற்றும் ஜெயமோகன் எழுதுகின்றனர். ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களை உள்ளடக்கிய ஒளி ஒலி உயிரோட்டமாக கொடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றது. இதன் முதல் பாகம் 2022 ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பலவிஷயங்கள் உள்ளது. கதைக்களம், ஒளிப்பதிவு, கலை இயக்கம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும். அமரர் கல்கி பொன்னியின் செல்வனில் உருவாக்கியிருக்கும் கதாப்பாத்திரங்களும் அவற்றின் தன்மையும் மிகப்பெரிய மற்றும் பலம் வாய்ந்த ஒன்றாகவும் முதன்மைத்துவம் பெற்ற ஒன்றாகவும் இந்த சரித்திர நாவலை அனைவரையும் ரசிக்க வைத்தது. மணிரத்னம் அவர்களுக்கு இந்த கதாப்பாத்திரங்களுக்கு நிகரனாக நடிகர்கள் மட்டும் நடிகைகள் தேர்வு என்பது சவாலான ஒன்றாகத்தான் இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
படக்குழுவினர் முக்கிய கதாப்பாத்திரத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்ற தகவலை நேற்று வெளியிட்டுள்ளனர்.
ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரம்
நந்தினியாக நடிகை ஐஸ்வர்யாராய்
வல்லவராயன் வந்திய தேவனாக நடிகர் கார்த்தி
அருள்மொழிவர்மன் (எ) பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி
குந்தவையாக நடிகை திரிஷா
சுந்தர சோழராக நடிகர் பிரகாஷ் ராஜ்
பெரிய பழுவேட்டையராக நடிகர் சரத்குமார்
சின்ன பழுவேட்டையராக நடிகர் பார்த்திபன்
ஆழ்வார்க்கடியன் நம்பியாக நடிகர் ஜெயராம்
பார்த்திபேந்திர பல்லவராக நடிகர் விக்ரம் பிரபு
பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி
அனிருத பிரம்மராயராக நடிகர் பிரபு
மதுராந்தகனாக நடிகர் ரஹ்மான்
பாகுபலி என்ற சரித்திரப்படம் நம் விழிகளை நிறைத்திருக்கும் இந்த வேலையில் பொன்னியின் செல்வனும் விரைவில் நம் விழிகள் மற்றும் செவிகளை நிறைய செய்யும். அமரர் கல்கியின் எழுத்தோவியம் உயிரோவியாமா பார்க்க காத்திருப்பதும் ஒரு சுகம் தான்.